Murali Memorial Day: ரசிகர்களின் மனதில் என்றும் வாழும் 'இதயம்' முரளி நினைவு நாள் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Murali Memorial Day: ரசிகர்களின் மனதில் என்றும் வாழும் 'இதயம்' முரளி நினைவு நாள் இன்று!

Murali Memorial Day: ரசிகர்களின் மனதில் என்றும் வாழும் 'இதயம்' முரளி நினைவு நாள் இன்று!

Karthikeyan S HT Tamil
Sep 08, 2023 05:45 AM IST

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பை கொடுத்த நடிகர் முரளியின் நினைவு நாள் இன்று (செப்டம்பர் 8). இந்நாளில் அவரைப் பற்றிய சிறப்பு தொகுப்பு இதோ..!

நடிகர் முரளி
நடிகர் முரளி

முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த முரளி, தொடர்ந்து 1990-ல் இயக்குனர் விக்ரமனின் முதல் திரைப்படமான ‘புதுவசந்தம்’ முரளிக்கு புது அடையாளத்தை பெற்று தந்தது. காதல் படங்களுக்கு தனி இலக்கணம் வகுத்த முரளியின் திரைப் பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது ‘இதயம்’. காதலை கடைசி வரை சொல்லாமலேயே கண்களில் தேக்கி வைத்து பண்பட்ட நடிப்பை வழங்கி இருப்பார் முரளி. கன்னட சினிமாவின் புகழ் பெற்ற இயக்குநர் சித்த லிங்கய்யாவின் மகனான நடிகர் முரளி தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

பாரதி ராஜாவின் இயக்கத்தில் வெளியான 'கடல் பூக்கள்' படத்துக்காக 2000-ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தமிழக அரசு விருதை பெற்றார். சிவாஜி, விஜயகாந்த், பிரபு, சரத்குமார், சத்யராஜ், வடிவேலு, பார்த்திபன் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனந்தம் , சமுத்திரம், வெற்றிக்கொடிகட்டு , பொற்காலம், கனவே கலையாதே போன்ற திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பால் அசத்தி பல ரசிகர்களுக்கு பிடித்த நடிகர் ஆனார் முரளி. 'சுந்தரா டிராவல்ஸ்' மூலம் காமடியிலும் ரசிக்க வைத்தார்.

இவர் கடைசியாக நடித்த படம் 'பாணா காத்தாடி'. அவருடைய மூத்த மகன் அதர்வா நாயகனாக அறிமுகமான திரைப்படம். தனது இயல்பான நடிப்பால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்த முரளி செப்டம்பர் 8, 2010 அன்று தனது 46வது வயதில் மாரடைப்பால் காலமானார். மறைந்த நடிகர் முரளியின் நினைவு தினம் இன்று (செப்.8) இன்று..! காதல் திரைப்படங்களுக்கு இலக்கணம் வகுத்த முரளி என்றும் தமிழ் சினிமாவின் 'இதயம்' நிறைந்தே இருப்பார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.