செம குத்தாட்டம் ..‘ரஜினி சாரின் மனைவியாக நடித்திருக்கிறேன்.. மகிழ்ச்சியாக இருந்தது’ - மஞ்சு வாரியர் ஓபன் டாக்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  செம குத்தாட்டம் ..‘ரஜினி சாரின் மனைவியாக நடித்திருக்கிறேன்.. மகிழ்ச்சியாக இருந்தது’ - மஞ்சு வாரியர் ஓபன் டாக்!

செம குத்தாட்டம் ..‘ரஜினி சாரின் மனைவியாக நடித்திருக்கிறேன்.. மகிழ்ச்சியாக இருந்தது’ - மஞ்சு வாரியர் ஓபன் டாக்!

Divya Sekar HT Tamil Published Sep 15, 2024 11:01 AM IST
Divya Sekar HT Tamil
Published Sep 15, 2024 11:01 AM IST

Manju Warrier : வேட்டையன் படத்தில் ரஜினி சாரின் மனைவியாக நடித்திருக்கிறேன். என் கதாபாத்திரத்தின் பெயர் தாரா. ரஜினி சாரின் ஸ்டைல்களை படங்களில்தான் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவருடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது என மஞ்சு வாரியர் கூறியுள்ளார்.

Manju Warrier : செம குத்தாட்டம் ..‘ரஜினி சாரின் மனைவியாக நடித்திருக்கிறேன்.. மகிழ்ச்சியாக இருந்தது’ - மஞ்சு வாரியர் ஓபன் டாக்!
Manju Warrier : செம குத்தாட்டம் ..‘ரஜினி சாரின் மனைவியாக நடித்திருக்கிறேன்.. மகிழ்ச்சியாக இருந்தது’ - மஞ்சு வாரியர் ஓபன் டாக்!

மூத்த வழக்கறிஞராக அமிதாப்பச்சன்

"வேட்டையன்" படத்தில் ரஜினிகாந்த் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்திருக்கிறார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் இணைந்து நடித்துள்ளார்கள். அமிதாப்பச்சன் மூத்த வழக்கறிஞராக நடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் அந்தா கனூன், கெராஃப்தார் மற்றும் ஹம் ஆகிய படங்களைத் தொடர்ந்து, நான்காவது முறையாக இந்தப்படத்தில் இணைந்து இருக்கின்றனர்.

மஞ்சு வாரியார் செம குத்தாட்டம்

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் எடிட்டிங்கினை மேற்கொண்டார்.

இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்து இருந்தது. கடந்த சில வாரங்களாக படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் முதல் பாடலான `மனசிலாயோ' பாடலின் கிலிம்ப்ஸ் வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இந்த பாடலை மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார்.செம குத்து பாடலாக உருவாகியுள்ள இப்பாடலில் மஞ்சு வாரியார் செம குத்தாட்டம் போட்டுள்ளார்.

ரஜினி சாரின் மனைவியாக

மஞ்சு வாரியர் படத்தில் நடித்த கதாப்பாத்திரத்தை பற்றி சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், “கேரளாவில் ஜாதி, மதம் தாண்டி அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். ஒட்டு மொத்த கேரளாவும் கொண்டாடும் பண்டிகை என்பதால் மகிழ்ச்சியான விழாவாக இருக்கும். கடந்த ஓணம் பண்டிகைக்கு எங்கே இருந்தேன் என்பது நினைவில்லை. இந்தப் பண்டிகையில் விடுதலை 2 படப்பிடிப்பு இருக்கிறது.

வேட்டையன் படத்தில் ரஜினி சாரின் மனைவியாக நடித்திருக்கிறேன். என் கதாபாத்திரத்தின் பெயர் தாரா. ரஜினி சாரின் ஸ்டைல்களை படங்களில்தான் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவருடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது.அதைப் பெருமையாக நினைக்கிறேன். படத்தில் என்னுடைய கதாப்பாத்திரத்திற்கு முக்கியமான பங்கு இருக்கிறது. மனசிலாயோ பாடலில் ஆடியது மிகவும் புது அனுபவமாக இருந்தது. அத்தனை நடன கலைஞருடன் இணைந்து ஒரே ஸ்டெப் ஆடுவது மகிழ்ச்சியாக இருந்தது." என கூறியுள்ளார்.

நடிகை மஞ்சு வாரியர், தமிழில் ரஜினியின் வேட்டையன் படத்தை முடித்துவிட்டார். அடுத்து வெற்றிமாறனின் விடுதலை 2, ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ படங்களில் நடித்து வருகிறார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.