Top Songs Today: தளபதி விஜய்யின் தி கோட், வேட்டையன் மனசிலாயோ..தனுஷின் கோல்டன் ஸ்பாரோ! இந்த வார ட்ரெண்டிங் பாடல்கள்
Top Trending Song Today: தளபதி விஜய்யின் தி கோட் பாடல்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் பட மனசிலாயோ, தனுஷின் கோல்டன் ஸ்பாரோ என இந்த வாரத்தில் ட்ரெண்டாக இருக்கும் தமிழ் பாடல்கள் எவை என்பதை பார்க்கலாம்.
இந்த வாரத்தின் டாப் தமிழ் பாடல்களில் தளபதி விஜய்யின் தி கோட், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன், தனுஷ் இயக்கி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் பாடல்கள் இடம்பிடித்துள்ளன.
இன்றைய டாப் 10 பாடல்களாக ஸ்பாட்டிபை தளத்தில் இடம்பிடித்திருக்கும் தமிழ் பாடல்கள் எவை என்பதை பார்க்கலாம்.
மட்ட
தி கோட் படத்தில் இடம்பிடித்திருக்கும் குத்து பாடலான மட்ட பாடலுக்கான வரிகளை விவேக் எழுதியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் யுவன் ஷங்கர் ராஜா, செண்பகராஜ், வேலு, சாம், நாரயணன் ரவிசங்கர் ஆகியோர் பாடியுள்ளனர். பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பும் பாடலாக இது அமைந்துள்ளது.
வாட்டர் பக்கெட்
தனுஷ் இயக்க நடித்த ராயன் படத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அமைந்திருக்கும் இந்த பெப்பியான மெலடி பாடலை சந்தோஷ் நாரயணன், ஸ்வேதா மோகன் ஆகியோர் பாடியுள்ளனர். கானா காதர் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
ஆசை கூட
மியூசிக் விடியோவாக வெளியாகியிருக்கும் ஆசை கூட பாடலை கட்சி சேர புகழ் சாய் அபியங்கர், சாய் ஸ்மிருத்தி ஆகியோர் பாடியுள்ளனர். சத்யன் இளங்கோ பாடல் வரிகள் எழுத சாய் அபியங்கர் தான் இசையமைத்துள்ளார். பாடலில் ஸ்டார் பட ஹீரோயின் ப்ரித்தி முகந்தன் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
காத்து மேல
உலக அளவில் பேமஸ் ஆகியிருக்கும் தமிழ் மியூசிக் விடியோவாக காத்து மேல பாடல் உள்ளது. கடந்த ஜூலை மாதம் வெளியான இந்த பாடலை வைத்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான ரீல்ஸ்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. பால் டப்பா பாடல் எழுதி நடித்திருக்க, ரோ இசைமைத்துள்ளார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த பாடலாக காத்து மேல இருந்து வருகிறது.
கோல்டன் ஸ்பாரோ
தனுஷ் இயக்கி வரும் புதிய படமான நிலவுக்கு என்னடி என் மேல் கோபம் படத்தில் இடம்பிடித்திருக்கும் இந்த பாடலை சுப்லாக்சின், ஜி.வி. பிரகாஷ் குமார், தனுஷ், அறிவு ஆகியோர் பாடியுள்ளனர். அறிவு பாடல் வரிகள் எழுத ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் தோன்றும் கோல்டன் ஸ்பாரோ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
விசில் போடு
தி கோட் படத்தில் இடம்பிடித்திருக்கும் பாடலாக விசில் போடு உள்ளது. இந்த படத்திலிருந்து முதல் சிங்கிளாக வெளியான இந்த பாடலில் விஜய்யுடன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோரும் நடனமாடியுள்ளனர். இந்த பாடல் வைரலாகியுள்ள நிலையில், இதன் விடியோவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இல்லுமினாட்டி
பகத் பாசில் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆவேசம் படத்தில் இடம்பிடித்திருக்கும் இந்த இல்லுமினாட்டி பாடலை தபிஸி பாடியுள்ளார். விநாயக் சசிக்குமார் பாடல் வரிகள் எழுத சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். மலையாள பாடலாக இருந்தாலும் கொஞ்சம் தமிழ் வரிகளை இடம்பிடித்திருக்கும் இந்த பாடல் தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
மனசிலாயோ
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் வேட்டையன் படத்தில் இடம்பிடித்திருக்கும் மனசிலாயோ என்ற இந்த பாடல் ட்ரெண்டிங் பாடலாக மாறியுள்ளது. சூப்பர் சுப்பு, விஷ்ணு எடவன் பாடல் வரிகள் எழுத, அனிருத் ரவிச்சந்தர், தீப்தி சுரேஷ், யுகேந்திரன் வாசுதேவன், மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரல் (ஏஐ தொழில்நுட்பத்தில்) ஆகியோர் பாடியுள்ளனர். பாடலுக்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார்.
பத்தவைக்கும்
ஜுனியர் என்டிர் - ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகியிருக்கும் தேவரா படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிளாக வெளியான பத்தவைக்கும் என்ற இந்த மெலடி பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விக்னேஷ் சிவன் பாடல் வரிகள் எழுத அனிருத் இசையமைத்துள்ளார். தீப்தி சுரேஷ் பாடலை பாடியுள்ளார்.
ஸ்பார்க்
தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் தி கோட் படத்தில் இடம்பிடித்திருக்கும் ஸ்பார்க் பாடலுக்கு கங்கை அமரன் பாடல் வரிகள் எழுத யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா, விருஷா பாலு ஆகியோர் பாடியுள்ளனர். படம் வெளியாவதற்கு முன்பு இந்த பாடல் தற்போது ட்ரெண்ட ஆக தொடங்கியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்