எனக்கு பிடிச்சத பண்ற வரை நா உருப்பட மாட்டேன்.. அது புரிஞ்சப்ப.. பொறாமை பட்டு என்ன செய்ய.. லப்பர் பந்து ஜென்சன் திவாகர்!
அது தெரிஞ்சப்ப எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. மனைவி வயிற்றில் பையன் இருந்தான். அப்பதான் நான் ஒரு ரூபாய் கூட வருமானம் இல்லாமல் யூடியூபில் ஜாயின் பண்ணேன். ஒரு குருட்டு தைரியம் தான். எப்படியே அப்படியே அலை அடிச்சு வந்து சேர்ந்துட்டேன்.
தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள லப்பர் பந்து திரைப்படத்தில் தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த ஜென்சன் திவாகர் சில நாட்களுக்கு முன் Rednool யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் நக்கலைட்ஸ் குழுவில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதுகுறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
கல்யாணம் ஆகிடுச்சு..
உங்கள் சினிமா வாழ்க்கையை எப்போது இருந்து ஆரம்பித்தீர்கள் என்ற கேள்விக்கு, 'நான் யூ டியூப்பில் 30 வயதில் தான் ஆரம்பித்தேன். ஆரம்பித்து ஆர்கானிக்காக சினிமாவிற்கு நகர்ந்து விட்டேன். என் 20 களில் இன்செக்யூரிட்டியால் போராட்டமா.. எவன் போராடுறது.. அப்படின்ற மைண்ட் செட்ல பல பேர் மாதிரி நானும் இருந்தேன். வேலைன்னு பார்த்தா எந்த வேலையும் ஒர்க் அவுட் ஆகல. ஒரு கட்டத்துல எனக்கு புடிச்சத பண்ற வரை நா உருப்பட மாட்டேன் என்பது தெரிஞ்சது. அது தெரிஞ்சப்ப எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. மனைவி வயிற்றில் பையன் இருந்தான். அப்பதான் நான் ஒரு ரூபாய் கூட வருமானம் இல்லாமல் யூடியூபில் ஜாயின் பண்ணேன். ஒரு குருட்டு தைரியம் தான். எப்படியே அப்படியே அலை அடிச்சு வந்து சேர்ந்துட்டேன்.
நக்கலைட்ஸ் பிரச்சனை குறித்து மனம் திறந்த திவாகர்
நக்கலைட்ஸ் குழுவில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த திவாகர், வருத்தம் இருந்தது. தாங்கிப்பிடிக்க நண்பர்கள் இருந்தார்கள். கிட்டத்தட்ட அதை ஒரு பெரிய பிரச்சனையாக எடுக்காமல் என் வீட்டிலும் ஓகே வா இருந்தாங்க.. பொதுவா நாம எங்க விழுகிறோம் என்றால் பிளேமிங் தான்.. நான் பிளேம் கேம் ஆடல. அநேகமா அங்கதான் நான் சரியா வேலை செய்தேன் என்று நினைக்கிறேன். நக்கலைட்ஸில் இருந்து வெளிய வர வேண்டிய கட்டாயம் வருதுனா.. அங்க போய் பிளேம் கேம் ஆட ஒன்னும் இல்ல.. என்மேல என்ன பிரச்சினை இருக்குதுன்னு யோசிக்கு அதுல புரிஞ்சு அதுல இருந்து வேலை செய்ய ஆரம்பிச்சேன். அத கரெக்டா செய்ய ஆரம்பிச்சுட்டேன் என்று நினைக்கிறேன். அத சரியா செய்யும் போது காலம் உங்களை அதே இடத்திற்கு கூட்டிட்டு போயிடும்ல.. திரும்ப அசோசியேட் ஆக வச்சதுல்ல.
வேலை தான்.. சுய ஒழுக்கம் ரொம்ப முக்கியம்.. தாரக மந்திரமே காத்திருப்புதான். ஒரு உதாரணத்திற்கு 22 வயசுல அனிருத்துன்னு ஒரு பையன் நக்கலைட்ஸ்ல இருக்கான்னா அவன் டைம் ஜோன் 22 வயசு.. எனக்கு லேட் 30'S, பிரசன்னா அண்ணா இருக்கார் அவர் 40'S ல தான் முதல் சக்சஸ் என்பதையே பாக்குறார். அது பிரச்சினையே இல்லைல. நம்ம டைம் ஜோன் நம்மளுக்கு.. நான் போய் 22 வயசுல பையனை பார்த்து பொறாமை பட்டா எப்படி.
நண்பர்கள் வெற்றி குறித்து பேசிய திவாகர், என் நண்பர்கள் அருண், சசி எல்லாம் எனக்கு முன்பே வெற்றி பெற்றார்கள். அருண்தா என்ன நக்கலைட்ஸ்ல சேர்த்தான். அவனும் என்னோட வளர்ச்சிய பார்த்து அந்த பக்கம் ஹப்பியா இருப்பான். ஆனா பேசி ரெம்ம நாள் ஆச்சு. எப்பயாவது பார்க்குறப்ப.. இல்ல எப்பயாவது மெசேஜ் அனுப்புவான் என்பது உள்ளிட்ட பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
சினிமா குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்