தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Sneha Prasanna: Sneha Prasanna Couple Showered Congratulations On Their Daughter!

Sneha Prasanna: மகளுக்கு வாழ்த்து மழை பொழிந்த சினேகா பிரசன்னா தம்பதி!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 24, 2024 03:43 PM IST

நான்கு வயதிலேயே மிக அதிக வயதுடையவர்களுக்கு இருக்கும் அக்கறையும் அறிவும் உனக்கு இருக்கிறது. நான்கு வயதிலேயே மொத்த குடும்பத்திற்கும் தாயாக நீயாகி இருக்கிறாய். கண்டிப்பாக இதே போல பொறுமை, அன்பு மற்றும் அக்கறையோடு நீ வளருவதை என நம்புகிறேன். அம்மாவும் அப்பாவும் எப்போதும் அன்புடன் உன்னை பாதுகாப்போம்..

மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த சினேகா பிரசன்னா தம்பதி
மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த சினேகா பிரசன்னா தம்பதி

ட்ரெண்டிங் செய்திகள்

புன்னகை அரசி சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் 2009 ஆம் ஆண்டு வெளியான அச்சபேடு என்ற திரில்லர் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தனர்.

படப்பிடிப்பின் போது இருவரும் ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கினர். அவர்களது காதலை 2011 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி பிரசன்னா அறிவித்தார். "ஆம்... நானும், சினேகாவும் எங்கள் பெற்றோரின் ஆசியுடன் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம்." என்றார்.

திரையில் உச்ச நடிகையா இருந்த போதே 2012 ஆம் ஆண்டு சினேகாவுக்கும், பிரசன்னாவுக்கும் திருமணம் நடந்தது. தன்னை விட ஒரு வயது இளையவரை திருமணம் செய்ததற்கு முதலில் சினேகா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் இருவரும் சமாதானம் செய்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு விகான் என்கிற மகனும், ஆத்யாந்தா என்கிற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் மகள் ஆத்யானந்தாவின் 4 ஆவது பிறந்தநாளை இன்று ( ஜனவரி 24 ) நடிகர் பிரசன்னா சினேகா தம்பதியினர் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மகளின் க்யூட் புகைப்படங்கள் சிலவற்றை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

நடிகர் பிரசன்னா தனது பதிவில், " இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆது குட்டி. எங்கள் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு நீதான். எங்கள் வாழ்க்கையில் ஆனந்தத்தையும் அன்பையும் நிலைநாட்டியது நீதான். எங்களது இதயமும் ஆன்மாவும் நீதான். நான்கு வயதிலேயே மிக அதிக வயதுடையவர்களுக்கு இருக்கும் அக்கறையும் அறிவும் உனக்கு இருக்கிறது. நான்கு வயதிலேயே மொத்த குடும்பத்திற்கும் தாயாக நீயாகி இருக்கிறாய். கண்டிப்பாக இதே போல பொறுமை, அன்பு மற்றும் அக்கறையோடு நீ வளருவதை என நம்புகிறேன். அம்மாவும் அப்பாவும் எப்போதும் அன்புடன் உன்னை பாதுகாப்போம்.. ஸ்வீட்டி பை' என பதிவிட்டு இருக்கிறார்.

இதேபோல் நடிகை சினேகாவும் மகளின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளர். அதில் "பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் குழந்தை பொம்மை. எங்கள் வாழ்க்கையில் நீங்கள் கொண்டு வந்த அனைத்து அன்பு மற்றும் மகிழ்ச்சிக்காக நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நான் தாழ்வாக இருக்கும்போது நீ என் அம்மாவாகிவிடுகிறாய்.எனக்கு ஒரு நண்பன் தேவைப்படும்போது நீ என் நண்பனாகிவிடுகிறாய்.

எனக்கு அந்த சிறிய ஊக்கம் தேவைப்படும் போது உங்கள் அணைப்பு எனக்கு கூடுதல் அன்பை அளிக்கிறது. நீங்கள் ஒரு தூய்மையான ஆத்மா, கடவுள் உங்களுக்கு வாழ்க்கையில் எல்லா மகிழ்ச்சியையும் தரட்டும். நீங்கள் என்று எதையும் மாற்ற அனுமதிக்காதீர்கள். நாங்கள் உன்னை மிகவும் மிக மிக மிக நேசிக்கிறோம் தங்கமே என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுகளில் பலரும் குழந்தைக்கு தங்கள் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் அடிக்கடி சமூக வலைதளங்களில் தங்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இது எப்போதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். பகிரங்கமாக பாசத்தை வெளிப்படுத்தும் போது, ​​சினேகா, பிரசன்னா கெமிஸ்ட்ரியைப் பார்த்து பல விமர்சனங்கள் கூட எழுந்தது. இப்படி இருந்த சூழலில் இடையில் அவர்கள் இருவரும் பிரிய போவதாக செய்திகள் பரவி வந்தன. பின்னர் தாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் வதந்திகளை நம்ப வேண்டாம் என பிரசன்னா விவாகரத்து வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.