சமந்தா- சைதன்யா விவகாரம்.. அதிரடி காட்டிய கோர்ட்.. எப்படி சமாளிப்பார் அமைச்சர்?
நடிகை சமந்தா- நாக சைதன்யா விவாகரத்து பெற்றது குறித்து சர்ச்சையாக கருத்து தெரிவித்த தெலங்கானா அமைச்சருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

நட்சத்திர தம்பதியாக வலம் வந்த சமந்தாவும் அவரது கணவர் நாக சைதன்யாவும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில், அவர்கள் இருவரின் பிரிவிற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ஆர் தான் காரணம் என தற்போதைய தெலங்கானா காங்கிரஸ் அமைச்சர் சுரேகா சர்ச்சையாக பேசி இருந்தார்.
இது, சினிமா உலகிலும், மக்களிடையேவும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் சுரேகா மீது நாக சைதன்யாவின் குடும்பத்தினர் ஹைதராபாத் நம்பள்ளி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனை விசாரித்த நீதிபதி அமைச்சர் சுரேகாவிற்கு சம்மன் அனுப்பியுள்ளார். அதில், வரும் 23ம் தேதி அமைச்சர் சுரேகா நேரில் ஆஜராகி, அவர் கூறிய கருத்துகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதனால், கோலிவுட், டோலிவுட் ரசிகர்கள் நீதிமன்ற விசாரணையில் என்ன கூறப்போகிறார் என எதிர்பார்த்து வருகின்றனர்.