Guru Peyarchi 2024: பொருளாதாரத்தில் மேன்மை அடைவீர்கள்..! திருவாதிரை நட்ச்சத்தினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்-economy status will improve guru peyarchi for thiruvathirai star - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024: பொருளாதாரத்தில் மேன்மை அடைவீர்கள்..! திருவாதிரை நட்ச்சத்தினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

Guru Peyarchi 2024: பொருளாதாரத்தில் மேன்மை அடைவீர்கள்..! திருவாதிரை நட்ச்சத்தினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 11, 2024 08:00 PM IST

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த மிதுன ராசியினருக்கு எதிர்வரும் குரு பெயர்ச்சியால் கிடைக்கப்போகும் நற்பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

திருவாதிரை நட்சத்தினருக்கான குருபெயர்ச்சி பலன்கள்
திருவாதிரை நட்சத்தினருக்கான குருபெயர்ச்சி பலன்கள்

அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நான்கு மாத காலங்களில் குரு வக்கிர நிவர்த்தி அடைகிறார்.

குரு பெயர்ச்சியால் திருவாதிரை நட்சத்தினர் பெறும் பலன்கள்

ராகு பகவான் ஆதிக்கத்தை பெற்ற நட்சத்திரமாக திருவாதிரை இருக்கிறது. இந்த ஆண்டு தொழில் தொடங்குவதற்கான சிறந்த காலமாக உள்ளது. முதலீடு செய்வதன் மூலம் நல்ல பலனை பெறுவீர்கள்.

நடக்க வேண்டிய நல்ல விஷயங்கள் நடக்கும். 26 வயது வரை இருப்பவர்களுக்கு குரு திசை நடக்கிறது. படிப்பில் எந்த பாதிப்பும் இருக்காது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் முன்னேற்றம் அடைவீர்கள்.

பொருளதார நிலை மேம்படும்

சனி திசையில் இருப்பவர்களுக்கு பொருளதார நிலையை பொறுத்தவரை நல்ல வருமானமங்களும், அதற்கு இணையான அளவில் செலவினங்களும் இருக்கும் காலமாக உள்ளது. உங்களது உழைப்பால் மற்றவர்கள் லாபம் அடைவார்கள். சகோதர, சகோதரிகள், உறவினர்களுக்கு செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். நட்பால் நல்ல ஆதாயம் உண்டு.

உங்கள் எதிர்கால திட்டத்தை நோக்கி அடியெடுத்து வைப்பதற்கான காலமாக இந்த குரு பெயர்ச்சி உள்ளது. வீடு, இட மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்பு உண்டு.

வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் வேலை அமையும். பணியில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். வேலை இடத்தில் நல்ல பெயரையும் பெறுவீர்கள்.

பூர்வீக சொத்துக்கள் மூலம் பலன் அடைவீர்கள். இதில் சுமூகமான சூழ்நிலையில் நிலவும். வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கான நேரமாகவும் அமையும். திருமணம் ஆகாதவர்களுக்கு காலம் கைகூடி வரும்.

உங்களை விட்டு விலகி சென்றவர்கள் மீண்டும் வர வாய்ப்பு உள்ளது. எனவே விழப்புடன் இருந்து கொள்ளுங்கள். எதிர்பாராத வாய்ப்புகள் அமையலாம். அதை நன்கு பயன்படுத்தி கொள்ளவும். சுப விரயங்கள் அடிக்கடி ஏற்படலாம்.

குருபகவானின் பார்வை பல்வேறு விதமான யோகத்தை தரும். உற்பத்தி துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் நிச்சயமற்ற தன்மை உருவாகலாம். ஆனாலும் நல்ல வேலை ஆட்களால் வருமானத்தில் குறை இருக்காது. ஒன்றுக்கு மேற்பட்ட தொழிலில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது.

கடன் தொல்லை இருக்கும். ஆனால் உங்களது சாமர்த்தியத்தால் அதை குறைப்பீர்கள். உடல்நிலையை பொறுத்தவரை டயபிடிஸ், உடல் பருமன், தைராய்டு போன்ற பிரச்னைகள் வரலாம். வயிறு தொடர்பாக இருந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு தீர்வு கிடைக்கும். வழக்குகள் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும்.

புதன் திசையில் இருப்பவர்களுக்கு வெளிநாடு வேலை வாய்ப்புகள் அமையலாம். விவசாயத்தில் இருப்பவர்கள் நல்ல மாற்றங்களை பெறலாம். வாகன சேர்க்கை உண்டு. வீட்டுக்கு தேவையான செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்களை தவிர்ப்பது நல்லது. கேது திசையில் இருப்பவர்களுக்கு சுப காரியங்கள் கைகூடி வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

சுக்கிர திசையில் இருப்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வளர்ச்சி கிடைக்கும். ஒரு சில தடைகள் ஏற்படலாம். தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் நல்ல பலனை அடைவார்கள்.

தக்‌ஷினா மூர்த்தியை வழிபடுவதன் மூலம் நன்மை பெறுவீர்கள். திருநாகேஸ்வரம் சென்று வழங்குவதன் மூலம் மேன்மை அடைவீர்கள்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

Whats_app_banner