Kadalora Kavithaigal: ஹீரோவாக நடித்த சத்யராஜ்..மறக்க முடியாத ஜெனிபர் டீச்சர்..கடலோரக் கவிதைகள் ரிலீஸான நாள் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kadalora Kavithaigal: ஹீரோவாக நடித்த சத்யராஜ்..மறக்க முடியாத ஜெனிபர் டீச்சர்..கடலோரக் கவிதைகள் ரிலீஸான நாள் இன்று!

Kadalora Kavithaigal: ஹீரோவாக நடித்த சத்யராஜ்..மறக்க முடியாத ஜெனிபர் டீச்சர்..கடலோரக் கவிதைகள் ரிலீஸான நாள் இன்று!

Karthikeyan S HT Tamil
Jul 05, 2024 07:09 PM IST

38 years of Kadalora Kavithaigal: காலங்கள் உருண்டோடினாலும் குடை பிடித்து வரும் ஜெனிபர் டீச்சரையும், முரடன் முட்டம் சின்னப்பதாஸையும் மறக்க முடியுமா?.. சினிமா ரசிகர்களால் 'கடலோர கவிதைகள்' இன்னும் வாசிக்கப்பட்டு கொண்டே தான் இருக்கிறது.

Kadalora Kavithaigal: ஹீரோவாக நடித்த சத்யராஜ்..மறக்க முடியாத ஜெனிபர் டீச்சர்..கடலோரக் கவிதைகள் ரிலீஸான நாள் இன்று!
Kadalora Kavithaigal: ஹீரோவாக நடித்த சத்யராஜ்..மறக்க முடியாத ஜெனிபர் டீச்சர்..கடலோரக் கவிதைகள் ரிலீஸான நாள் இன்று!

ஹீரோவானா சத்யராஜ்

வில்லனாக அறிமுகமாகி பல படங்களில் நடித்த நடிகர் சத்யராஜ் நீண்ட நாட்களுக்கு பிறகு ஹீரோவாக நடித்த படம் "கடலோரக் கவிதைகள்". தமிழக மக்களால் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம். சத்யராஜ், ரேகா, ராஜா, ஜனகராஜ், கமலா காமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் இத்திரைப்படம், சிரஞ்சீவி, சுஹாசினி நடிப்பில் "ஆராதனா" என தெலுங்கில் ரீ மேக் செய்யப்பட்டது.

“கடலோர கவிதைகள்” படத்தில் காதலை அழகாக வெளிப்படுத்த இயலுமா என சிந்திக்க வைக்கும் அழகிய காட்சிகளுக்கு உருவம் கொடுத்திருப்பார் பாரதிராஜா. இப்படத்தின் கதையை ராஜேஸ்வர் எழுதியிருந்தார். ஆர். செல்வராஜ் வசனம் எழுத, திரைக்கதை அமைத்து இயக்கி இருந்தார் பாரதிராஜா.

வயல்வெளிகள், நதிகள், கிராமம், நகரம் என சுழன்று அடித்த பாரதிராஜாவின் கரங்கள் இப்படத்துக்காக கடற்கரை பக்கம் திரும்பியது. அவருக்கு பிடித்த லோகேஷனான முட்டம் கடற்கரை பகுதியை சுற்றியே இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. ரேகா, ராஜா, ரஞ்சனி ஆகிய மூவரும் நடித்த முதல் தமிழ்த் திரைப்படமாகவும் இப்படம் அமைந்தது. சத்யராஜின் திரை வாழ்க்கைக்கு புதிய பாதை அமைத்துக் கொடுத்தது 'கடலோர கவிதைகள்'. 

பாடல்கள் ஹிட்

வழக்கம் போல இளையராஜாவின் இசை படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்தது. 'தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ்', 'அடி ஆத்தாடி..', 'கொடியிலே மல்லிகைப் பூ', 'பொடி நடையா போறவரே', 'போகுதே போகுதே', போன்ற பாடல்கள் இன்றைக்கும் மறக்க முடியாத பாடல்களாக மக்கள் மனங்களில் இருக்கின்றன.

இத்திரைப்படம் சிரஞ்சீவி, சுஹாசினி நடிப்பில் 'ஆராதனா' என தெலுங்கிலும், பி.சி.பாட்டீல், பிரேமா ஆகியோர் நடிப்பில் கவுரா என கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.

38 ஆண்டுகள் நிறைவு

காதலை அழகாக வெளிப்படுத்திய 'கடலோர கவிதைகள்' 1996ஆம் ஆண்டு இதே ஜூலை 5 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இப்படம் வெளிவந்து இன்றோடு 38 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. படம் செம ஹிட், தமிழகம் முழுவதும் 200 நாட்களை தாண்டி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. நேற்று ரிலீஸானது போல் உள்ளது. ஆனால், 38 ஆண்டுகள் உருண்டோடியது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. 

75 படங்களில் வில்லனாக நடித்த சத்யராஜ்

சத்யராஜ் கதாநாயகனாக நடித்த பாரதிராஜாவின் "கடலோரக் கவிதைகள்'' மகத்தான வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் மூலம், கதாநாயகனாகத் தொடர்ந்து நடிக்கலாம் என்ற அங்கீகாரத்தை ரசிகர்கள் கொடுத்தனர். சுமார் 75 படங்களில் வில்லனாக நடித்த சத்யராஜை ஹீரோவாக மக்கள் ஏற்றுக்கொண்டனர்.

காலங்கள் உருண்டோடினாலும் குடை பிடித்து வரும் ஜெனிபர் டீச்சரையும், முரடன் முட்டம் சின்னப்பதாஸையும் மறக்க முடியுமா?.. சினிமா ரசிகர்களால் 'கடலோர கவிதைகள்' இன்னும் வாசிக்கப்பட்டு கொண்டே தான் இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.