25 Years Of Kanave Kalayadhe: பஞ்சாபி பொண்ணு.. தமிழ்ப்பையன்.. இரு மாநில காதல்: அன்றே அப்படி கதை எழுதி இயக்கிய வ.கவுதமன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  25 Years Of Kanave Kalayadhe: பஞ்சாபி பொண்ணு.. தமிழ்ப்பையன்.. இரு மாநில காதல்: அன்றே அப்படி கதை எழுதி இயக்கிய வ.கவுதமன்!

25 Years Of Kanave Kalayadhe: பஞ்சாபி பொண்ணு.. தமிழ்ப்பையன்.. இரு மாநில காதல்: அன்றே அப்படி கதை எழுதி இயக்கிய வ.கவுதமன்!

Marimuthu M HT Tamil
Aug 06, 2024 07:56 AM IST

25 Years Of Kanave Kalayadhe: பஞ்சாபி பொண்ணு.. தமிழ்ப்பையன் என இரு மாநில காதல் பற்றி அன்றே அப்படி கதை எழுதி இயக்கிய வ.கவுதமன் குறித்தும், அவரது கனவே கலையாதே திரைப்படம் குறித்தும் இக்கட்டுரையில் பார்ப்போம்.

25 Years Of Kanave Kalayadhe: பஞ்சாபி பொண்ணு.. தமிழ்ப்பையன்.. இரு மாநில காதல்: அன்றே அப்படி கதை எழுதி இயக்கிய வ.கவுதமன்!
25 Years Of Kanave Kalayadhe: பஞ்சாபி பொண்ணு.. தமிழ்ப்பையன்.. இரு மாநில காதல்: அன்றே அப்படி கதை எழுதி இயக்கிய வ.கவுதமன்!

25 Years Of கனவே கலையாதே திரைப்படத்தின் கதை என்ன?:

பணி நிமித்தமாக சண்டிகரில் இருக்கும் அமிர்தாவும் ஆனந்தும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். அமிர்தா பஞ்சாபி இனத்தைச் சார்ந்தவள். ஆனந்த் தமிழ்பேசும் குடும்பத்தினைச் சார்ந்தவன். ஆனந்த், அமிர்தாவின் பெற்றோரிடம் சென்று காதலுக்கு சம்மதம்பெற்று அமிர்தாவை மணமுடிக்க நினைக்கின்றார். அதற்காக பஞ்சாபில் இருக்கும் அமிர்தாவின் வீட்டிற்கு ஆனந்த் செல்கின்றார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் அங்கு செல்வதற்கு முன், அமிர்தாவும் அவரது குடும்பத்தினரும் ஒரு வெடிகுண்டு வெடிப்பில் இறந்துவிடுகின்றனர். இதனால் நிலைகுலைந்துபோகும் ஆனந்த், அமிர்தாவை இழந்து காதல் வலிதாங்க முடியாமல் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார். எப்போது பார்த்தாலும் அமிர்தாவின் நினைவில் தவிக்கிறார். இதனை அறிந்த ஆனந்தின் நண்பர்கள், ஆனந்தை சென்னைக்கு அழைத்து வந்தால் சற்று வாழ்வில், ஆனந்த் நம்பிக்கை பெறலாம் என நினைத்து அவரை பஞ்சாபில் இருந்து சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.

அப்போது சென்னையில் அமிர்தா சாயலில் இருக்கும் சாரதா என்னும் பெண்ணை, பார்த்து ஆனந்த் அதிர்ச்சியடைகின்றார். இருவருக்கும் ஆரம்பத்தில் உரசல்கள் வந்தாலும், இறுதியில் ஒருவரை ஒருவர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கின்றனர்.

அந்த நேரத்தில் சாரதா, முன்பு சேகர் என்னும் நபரை காதலித்தது தெரியவருகிறது. மேலும், சேகர் சாரதாவுக்காக காத்திருப்பதை உணர்கிறார். இறுதியில் ஆனந்த், தன் காதல் தான் சேராமல் போனது என்று, சேகரையும் சாரதாவையும் சேர்த்து வைக்கின்றார். படம் இறுதியாக பாஸிட்டிவ் கிளைமேக்ஸுடன் முடிகிறது.

கனவே கலையாதே திரைப்படத்தில் நடித்தவர்கள் விவரம்:

கதையின் நாயகனான ஆனந்த் ஆக முரளியும், அமிர்தாவாகவும் சாரதாவாகவும் சிம்ரன் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். டெல்லி கணேஷ் சாரதாவின் தந்தையாகவும், பாவடைராயனாக சின்னி ஜெயந்தும், பன்னீராக சார்லியும், செல்வமாக தாமுவும் நடித்திருந்தனர். கயல் விழியாக கோவை சரளாவும், மேனேஜராக ராஜீவும், மேனஜரின் மனைவியாக சோபிதா ஆனந்தும் நடித்துள்ளனர்.

கனவே கலையாதே திரைப்படத்தின் பாடல்கள்:

கனவே கலையாதே திரைப்படத்தின் இசையை ’தேவா’ இசையமைத்துள்ளார். குறிப்பாக இப்படத்தில் கண்ணோடு கண்ணோடு வந்த காதல், பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூத்தது பூ ஒன்று, டெல்லியைத் தாண்டி பஞ்சாப் இங்கு பறித்தேன் நான் ரோஜாப்பூ ஆகியப் பாடல்களை கவிஞர் வைரமுத்துவும், கண்ணில் உன்னை கண்டுகொண்டேன் கண்ண பெருமானே என்னும் பாடலை கவிஞர் வாலியும், வாங்குடா 420 பீடா பாடலை கவிஞர் பொன்னியின் செல்வனும் எழுதியிருக்கின்றனர்.

இப்படம் இயக்குநராக வ.கவுதமனுக்கு மிகப்பெரிய பாராட்டுகளையும், வசூல்ரீதியாகவும் வெற்றியைத் தந்தது. இப்படத்திற்காக பஞ்சாபில் அமிர்தசரஸ், ஜாலியன் வாலாபாக், வாகா எல்லை ஆகியப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஒளிப்பதிவை தங்கர் பச்சானும், எடிட்டிங்கினை பி.லெனினும், வி.டி.விஜயனும் செய்திருந்தனர்.

’கனவே கலையாதே’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25ஆண்டுகளை நிறைவுசெய்தாலும், படத்தை தற்போது பார்த்தாலும் அந்த ஃபீல் மாறவில்லை. அதுதான் படத்தின் வெற்றி!

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.