எப்படி வாழ்ந்த சில்க்.. 100 ரூபாய் கரன்சி நோட்டும் சில்க் ஸ்மிதாவும்.. இத்தனை இளகிய மனம் கொண்டவரா அந்த காந்த கண்ணழகி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எப்படி வாழ்ந்த சில்க்.. 100 ரூபாய் கரன்சி நோட்டும் சில்க் ஸ்மிதாவும்.. இத்தனை இளகிய மனம் கொண்டவரா அந்த காந்த கண்ணழகி!

எப்படி வாழ்ந்த சில்க்.. 100 ரூபாய் கரன்சி நோட்டும் சில்க் ஸ்மிதாவும்.. இத்தனை இளகிய மனம் கொண்டவரா அந்த காந்த கண்ணழகி!

Pandeeswari Gurusamy HT Tamil
Published Oct 16, 2024 06:00 AM IST

நாங்கள் அங்கு சென்று பார்த்த போது பழைய பொருட்களை போட்டு வைத்திருக்கும் ஸ்டோர் ரூம்ல சில்க் படுக்க வைக்கபட்டிருந்தார். சூட்டிங்கில் அவ்வளவு கம்பீரமாக சில்க் ஸ்மிதாவை, அழுக்கு படிந்த கேவலமான ஒரு இடத்தில் அவரது உடலைப் படுக்க வைத்திருந்தார்கள். அதை பார்க்கவே கஷ்டமாக இருந்தது. எனக்கு கண் கலங்கி விட்டது.

எப்படி வாழ்ந்த சில்க்.. 100 ரூபாய் கரன்சி நோட்டும் சில்க் சுமிதாவும்.. இத்தனை இளகிய மனம் கொண்டவரா அந்த காந்த கண்ணழகி!
எப்படி வாழ்ந்த சில்க்.. 100 ரூபாய் கரன்சி நோட்டும் சில்க் சுமிதாவும்.. இத்தனை இளகிய மனம் கொண்டவரா அந்த காந்த கண்ணழகி!

இத்தனை திறமையான சில்க் குறித்து பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் தனது V K Sundar Updates என்ற யூடியூப் சேனலில் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 'சில்க் ஒரு பிரஸ் மீட்டில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். அவரது கால் ஹீரோவின் முகத்திற்கு நேராக இருப்பதை பார்த்த பத்திரிகையாளர் விஜி, ஹீரோ முகத்துக்கு நேரா கால் இருக்கற மாதிரி இருக்கு பார் என்று எச்சரித்தார். அதற்கு சில்க் எந்த வித சலனமும் இல்லாமல் சார், அவரே நாக்க தொங்க போட்டுட்டு அலஞ்சவருதான் சார்.. விடுங்க நீங்க அடுத்த கேள்வியை கேளுங்க என்றார். அந்த மாதிரி ஹிரோ ஹிரோயினை தாண்டி பரபரப்பாக இருந்தவர்.

அப்படி பட்ட சில்க் தற்கொலை செய்து இறந்த தகவலை கேள்வி பட்டு சில்க் வீட்டிற்கு போனோம். அங்கே போன போது விஜயா ஹாஸ்பிடல் எடுத்துட்டு போய்விட்டார்கள் என தகவல் கிடைந்தது. நாங்கள் அங்கு சென்று பார்த்த போது பழைய பொருட்களை போட்டு வைத்திருக்கும் ஸ்டோர் ரூம்ல சில்க் படுக்க வைக்கபட்டிருந்தார். சூட்டிங்கில் அவ்வளவு கம்பீரமாக சில்க் ஸ்மிதாவை, அழுக்கு படிந்த கேவலமான ஒரு இடத்தில் அவரது உடலைப் படுக்க வைத்திருந்தார்கள். அதை பார்க்கவே கஷ்டமாக இருந்தது. எனக்கு கண் கலங்கி விட்டது என்கிறார்.

அக்கா என்ற உதவி கேமராமேன்

ஒரு முறை உதவி கேமரா மேன் ஒருவர் சொன்ன சம்பவத்தை நான் இங்கு பகிர்கிறேன். ஏவிஎம் மில் ஏழாவது ஃப்ளோரில் ஒரு மலையாள பட சூட்டிங் நடந்தது. அந்த காலத்தில் மாலை 6.30 மணிக்கு மேல் சூட்டிங் நடந்தால் டபுள் கால்ஷீட் போட்டு பேட்டா டபுளாக கொடுக்க வேண்டும். அந்த படத்தில் கடைசி நாள் சூட்டிங்கில் சில்க்கின் பாடல் எடுக்கப்பட்டது. அப்போது கேமரா மேன்கள் அசிஸ்டெண்ட் எல்லாரும் இன்று டபுள் கால் ஷீட் போட்டால் நன்றாக இருக்கும். முடியுமான்னே... என்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். அதை பார்த்த சில்க் அவர்களை அழைத்து என்ன பேசுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அசிஸ்ட்டெண்ட் கேமரா மேன் அது ஒன்னும் இல்ல அக்கா என்று விஷயத்தை சொல்ல ஆரம்பித்தார்.

உடனே சில்க் அவரை நிப்பாட்டி என்ன சொன்ன என்று கேட்டதற்கு பதறினார் கேமரா மேன். உடனே சில்க் இல்ல இப்ப என்னவோ சொன்னயே என்றதற்கு அக்கா என்றேன் என கேமரா மேன் கூறி உள்ளார். இதனால் ஒரு நிமிடம் நெகிழ்ந்தார் சில்க். கேமரா மேன் உடனே இல்லக்கா இன்னைக்கு சூட்டிங் ஆறரை மணிக்கு மேல போச்சுன்னா.. டபுள் கால் ஷீட் ஆகி எங்களுக்கு எக்ஸ்ட்ரா ஒரு பேமண்ட் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். உடனே சில்க் அவ்வளவு தானே.. நான் பார்த்துக்குறே விடுங்க அப்படின்னு சொல்லி விட்டார்.

எப்போதும் ஒரே டேக்கில் டான்ஸ் ஆடி கொடுக்கும் சில்க் அன்று வேண்டும் என்றே தாமதம் செய்தார். அன்று சூட்டிங் முடிய 6.35 ஆகி விட்டது. இதனால் அப்போது ஒரு கால் ஷீட்டுக்கு 75 ரூபாய் சம்பளம் என்ற நிலையில் அங்கு வேலை செய்த 14 பேருக்கும் 150 ரூபாயாக இரட்டிப்பு சம்பளம் கிடைத்தது.

100 ரூபாய் கரன்சி நோட்டை கொடுத்த சில்க்

இப்போது சூட்டிங் முடிஞ்சு பேக்கப் பண்ணி கிளம்பும்போது சில்க் சம்பந்தப்பட்ட அசிஸ்டெண்ட் கேமரா மேனை கூப்பிட்டு இங்க வாங்க உங்க டீம்ல எத்தனை பேர் இருக்கீங்க என்று கேட்டுள்ளார். 14 பேர் என்று கேமராமேன் சொன்னவுடன் சில்க் தன் பேக்கை திறந்து 14 பேருக்கும் தலா 100 ரூபாய் கரன்சி நோட்டை எடுத்து கொடுத்து விட்டு போனாராம். இப்படியான ஒரு நல்ல மனுஷிதான் சில்க்' என்கிறார்.

பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

 

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.