Silk Smitha: எனக்கும் சில்க் ஸ்மிதாவுக்கும் இருக்கும் தொடர்பு.. சில்க்கின் பரம ரசிகர் பாலுமகேந்திரா: பயில்வான் ஓபன் டாக்
- Silk Smitha: எனக்கும் சில்க் ஸ்மிதாவுக்கும் இருக்கும் தொடர்பு மற்றும் சில்க்கின் பரமரசிகர் பாலுமகேந்திரா என ஓபனாக பேசிய பயில்வான் ரங்கநாதன் குறித்து பேட்டியளித்துள்ளார்.
- Silk Smitha: எனக்கும் சில்க் ஸ்மிதாவுக்கும் இருக்கும் தொடர்பு மற்றும் சில்க்கின் பரமரசிகர் பாலுமகேந்திரா என ஓபனாக பேசிய பயில்வான் ரங்கநாதன் குறித்து பேட்டியளித்துள்ளார்.
(1 / 6)
Silk Smitha: சில்க் ஸ்மிதாவின் கணவர் இவர் தான் எனவும், சில்க் ஸ்மிதாவின் பிணவறையில் நடந்த பாலியல் தீண்டல் குறித்தும் பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டியளித்துள்ளார்.
(2 / 6)
நடிகை சில்க் ஸ்மிதா குறித்து நடிகரும் மூத்த சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பப்ளிக் விங் என்னும் யூட்யூப் சேனலில், 9 மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகள் நிறைய பேர் இருந்தார்கள். ஆரம்பத்தில் பலர் தெலுங்கில் இருந்து வந்து தமிழ் கத்துக்கொண்டார்கள். அந்த காலத்து நடிகைகள் கவர்ச்சியை வெளிச்சம்போட்டுக் காட்டத்தெரியாதவர்கள்.அதனால், சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களில் ஒரு கவர்ச்சி நடிகையை வைத்து நடனம் அமைக்கப்படுவதுண்டு. இப்போது அப்படியல்ல, நயன்தாரா, தமன்னா எனப்பலரும் கவர்ச்சிகாட்டி நடிக்கின்றனர். எல்லோமே பணம் என்ற நிலை தற்போது இருக்கிறது.கவர்ச்சி நடிகைள் என்றாலே இப்போது இல்லாமல் போய்விட்டார்கள். ஆனாலும், கவர்ச்சி நடிகைகளின் ராணி சில்க் ஸ்மிதா தான். சில்க் ஸ்மிதாவின் இடம்வெற்றிடமாகவே இருக்கிறது. ஏனென்றால், அவரின் கண்ணை வைத்து சுழற்றினாலே போதும் சில்க் ஸ்மிதா. தன் முதல் படமான வண்டிச்சக்கரம் படத்தில் இருந்து கடைசிப்படம் வரை உடலை அப்படியே வைத்துக்கொண்டவர், சில்க் ஸ்மிதா''.
(3 / 6)
எனக்கும் சில்க் ஸ்மிதாவுக்கும் உள்ள தொடர்பு: பயில்வான் ரங்கநாதன்!சில்க் ஸ்மிதா என் மூலமாகத் தான் சினிமாவுக்குள் வந்தார். அப்போது நான் மாயா என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தேன். கவர்ச்சிப்படங்கள் நிறைந்த பத்திரிக்கை, எல்லா நடிகர்களையும் பற்றிய தாறுமாறான கிசுகிசுக்கள் அதில் இருக்கும். அப்பத்திரிகை வந்தபோது முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நானும் புகைப்பட கலைஞர் ஜெய் மோகனும் சுற்றாத இடங்கள் இல்லை. நெற்றிக்கண் ஆசிரியர் மணி, இந்தப் பத்திரிகையில் புகைப்படக் கலைஞராக இருந்தவர் தான்.
(4 / 6)
‘’அதன்பின், அவர் மனைவியை திரைப்படத்துக்கு அனுப்பிவிட்டு, இரவு அவரது வீட்டில் அசைவ தடபுடல் விருந்து எனக்காக வைத்தார், வினுச்சக்கரவர்த்தி. அதன்பின், மறுநாள், அவரை அப்பெண்ணின் இல்லத்தில் அறிமுகப்படுத்திவிட்டு வந்துவிட்டேன். சுசுமிதா என்ற பெயரை மாற்றி, ஸ்மிதா எனப்பெயர் மாற்றினார், வினுச்சக்கரவர்த்தி.ஸ்மிதாவின் வாழ்க்கையில் உதவியமைக்காக, அவரது பல படங்களில் கணவனாக நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். எப்போதுமே என்னிடம் மரியாதையாகப் பேசுவாங்க. சாப்பாடு எதுவும் சாப்பிடமாட்டாங்க, பேரீட்சைப் பழம், பிஸ்தா, உலர் பழங்களைத் தான் சாப்பிடுவாங்க. உடல் எடை போட்டுவிடக்கூடாது என்பதற்காக ஜூஸ் குடிப்பாங்க. எனக்கொரு பாக்கெட் கொடுத்துவிடுவாங்க. நல்ல உள்ளத்துக்கு சொந்தக்காரி, சில்க் ஸ்மிதா. எனக்கு வழிகாட்டியாக வைச்சிருக்கேன்.மூன்றாம் பிறை படத்தில் கமல்ஹாசன், சில்க் ஸ்மிதா பாடல் இடம்பெற்றிருந்தது. அதன்பின், பாலுமகேந்திரா, சில்க் ஸ்மிதாவின் பரம ரசிகர் ஆனார். இந்தப் படத்துக்குப் பின், பாலுமகேந்திரா பல படங்களில் சில்க் ஸ்மிதாவுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பார்.சில்க் ஸ்மிதா வில்லி, காமெடி, கவர்ச்சி, கதாநாயகி என பல வேடங்களில் முத்திரைப் பதித்தவர். தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என நான்கு மொழிகளிலும் அவர் பல நடிகர்களுடன் நடனமாடி ஹிட் கொடுத்தவர்.''.
(5 / 6)
சில்க் ஸ்மிதாவின் சரிவுக்குக் காரணம்: பயில்வான் ரங்கநாதன்‘’சில்க் ஸ்மிதாவின் சரிவுக்குக் காரணம், அவர் சொந்தப் படம் தயாரித்தது தான். அந்தக் கவலையில் தான், சில்க் ஸ்மிதாவுக்கு போதை ஏறவில்லை. அந்த அடிப்படையில் வந்தவர் தான் சில்க்கின் கணவர் டாக்டர். டாக்டருக்கு ஒரு 20 வயது பையன் இருக்கிறான். எப்படியோ போதை பழக்கத்துக்கு ஆளாகி டாக்டரின் வலையில் சிக்கிக்கொண்டார், சில்க் ஸ்மிதா. டாக்டரின் மகனுக்கு நடிக்க ஆசை. அப்போது டாக்டரின் மகனை சினிமாவுக்கு அழைத்துச் செல்கிறார், சில்க் ஸ்மிதா. இதனால், டாக்டர் உடனான உறவில் குழப்பம் வந்தது. அதன்பின் நடந்தது அனைவருக்கும் தெரியும்''.
(6 / 6)
சில்க் ஸ்மிதா ரொம்ப நல்லவங்க. உறவினர்கள் பலருக்கும் பணத்தை வாரிக்கொடுத்தார். இதனால் கடைசி காலத்தில் ரொம்ப கஷ்டப்பட்டார், சில்க் ஸ்மிதா. அதன்பின், மர்மமான முறையில் இறந்துவிட்டார். ஆனால், டாக்டர் மேல் சந்தேகம் வந்தது. அவரின் மரணம் மர்மமாகவே இருக்கிறது. அவர் மீது பைத்தியத்தால், பிணவறையில் கூட அவரது உடலை, பலரை சீண்டியுள்ளதாக நான் அறிந்தேன்’’ என மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.நன்றி: பப்ளிக் விங் யூட்யூப் சேனல்பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!
மற்ற கேலரிக்கள்