Silk Smitha: சில்க் ஸ்மிதா தான் காரணம்.. புரட்டி எடுத்த கமல்ஹாசன்.. தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவன்
Sakalakala Vallavan: சிறந்த பொழுதுபோக்கு சித்திரத்தில் இந்த சகலகலா வல்லவன் திரைப்படத்திற்கு என்றுமே தனித்துவமான இடம் ஒன்று என்று கூறினால் அது மிகையாகாது. சகலகலா வல்லவன் படம் வெளியாகி இன்றுடன் 42 ஆண்டுகள் ஆன நிலையில் ஹெச்.டி தமிழ் இந்தப்படம் குறித்து நினைவு கூறுகிறது.
Sakalakala Vallavan: ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு ஆண்டு இந்தப்பாட்டில்லாம் யாருக்கும் விடியாது. விஷ் யூ ஏ ஹாப்பி நியூ இயர்… இளமை இதோ, இதோ என்று எஸ் பாலசுப்ரமணியம் உரக்க கத்தும்போதுதான் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் உற்சாகமான புத்தாண்டே பிறக்கிறது.
கிட்டத்தட்ட இந்தப்படம் வெளியாகி 42 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையிலும், இன்று வரை ஒவ்வொரு புத்தாண்டுக்கும் இந்தப்பாடல் ஒலிக்காமல் துவங்குவதே கிடையாது. டிவி, ரேடியோ, எஃப்எம் என திரும்பிய பக்கமெல்லாம் ஒலிக்கும் பாடல். ஊடகத்துறை வளர்ந்து சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட காலத்திலும் இந்த பாடலை வைத்து மீம்கள் வந்தது.
வடிவேலுவை வைத்து ட்ரோல் ஆனது என இன்னும், இன்னும் பிரபலமானதேயொழிய இந்த பாடல் மீதான கிரேஸ் குறையவேயில்லை. இந்த பாடல் காட்சியில் கமல் பைக்கில் வந்து ஸ்டைலாக டிஸ்கோ நடனமாடி அசத்தியிருப்பார். இளையராஜா படத்திற்கு இசையமைத்திருப்பார். இந்த பாடல் இன்று வரை ஹிட் அடித்து அவரது இசையின் தரத்துக்கு சான்றாக விளங்குகிறது.
இந்த பாடல் இடம் பெற்ற படம் சகலகலா வல்லவன் வெளியாகி 41 ஆண்டுகள் ஆகிறது. கமலஹாசன், அம்பிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பர். இந்தப்படத்தை எஸ்.பி. முத்துராமன் இயக்கியிருப்பார். பஞ்சு அருணாச்சலத்தின் எழுத்தில் இந்தப்படத்தை ஏவிஎம் தயாரித்திருந்தது.
வசூல் சாதனை
175 நாட்கள் திரையரங்கில் ஓடி வணிக ரீதியாக நல்ல வெற்றியை கொடுத்த படம். இந்தப்படம் 1982ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி வெளியானது. 1989 வரை திரையரங்கில் அதிக நாட்கள் ஓடிய படமாக சகலகலா வல்லவன் இருந்தது. அடுத்ததாக அபூர்வ சகோதரர்கள் வந்து இந்த சாதனையை முறியடித்தது. இதுவும் கமலஹாசனின் படம். வித்யாசமான கதையம்சம்கொண்டது. இவையெல்லாம் கமலஹாசனை மாஸ் ஹீரோவாக்கியது. இந்தப்படம் இந்தியில் அபிமன்யூ என்ற பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது.
வேலு ஒரு விவசாயி, தனது குடும்பத்தை அந்த வருமானத்தின் மூலம் காப்பாற்றி வந்தார். அதே ஊரில் பெரும் பணக்காரர்களாக ராமையா பிள்ளை மற்றும் பார்வதி இருந்தனர். நிறைய நிலங்களை வைத்திருந்தனர். ஏழைகளுக்கு கடன் கொடுத்து அவர்களுக்கு அதிக வட்டி விதித்து, அவர்களை ஏமாற்றி அவர்களின் நிலங்களையெல்லாம் அபகரித்து வந்தனர். அவர்களின் மகன் பழனியும், கீதாவும் அருகில் இருந்த நகரில் படித்தனர். ஏழைகளை ஏமாற்றுவது தொடர்பாக ஏற்கனவே வேலுவுக்கும், ராமையா குடும்பத்திற்கும் தகராறு இருந்தது.
பழனியும், கீதாவும் படிப்பை முடித்துவிட்டு ஊர் திரும்பினர். வேலுவுக்கும், கீதாவுக்கும் எப்போதும் சண்டை வந்துகொண்டேயிருக்கும். பழனிக்கும், வேலுக்கும் ஒருமுறை தகராறு ஏற்படும். இதில் ஆத்திரமடைந்த பழனி, வேலுவின் தங்கையை கடத்தி அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிடுவார். இதனால் மனமுடைந்த வேலுவின் தங்கை தற்கொலைக்கு முயல்வார். ஆனால் வேலு அதை தடுத்து பழனியை திருமணம் செய்து வைப்பதாக வாக்கு கொடுப்பார்.
வேலு, பழனியிடம் அவரது தங்கையை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தி கெஞ்சுவார். ஆனால், பழனி மறுத்துவிட்டு, உன்னை பழி வாங்கவே இவ்வாறு செய்தேன் என்று கூறுவார். அப்போதுதான் ஒரு புத்தாண்டு நிகழ்ச்சியில் ராமையா குடும்பத்தினர், அமெரிக்காவில் இருந்து திரும்பிய அவரது நண்பர் சுந்தரம், அவர்களின் மகன் சாம், மகள் பாபியை சந்திப்பார்கள்.
சுந்தரத்தின் செல்வச்செழிப்பை பார்த்து வியந்துபோன பார்வதி, அவர்களின் பிள்ளைகளுக்கு சாமை, பாபியையும் திருமணம் செய்து வைக்க விரும்புவார். யார் இந்த பாபியும், சாமும், பழனி, வேலுவின் தங்கையை மணந்துகொள்வாரா? வேலு, கீதா சண்டை எதில் முடியும் என்பதுதான் கிளைமேக்ஸ்.
நேத்து ராத்திரி யம்மா
இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. ஹாப்பி நியூ இயர் பாடல் இன்றுவரை புத்தாண்டு பாடலாக திகழ்ந்து வருகிறது. அதேபோல கமல்ஹாசன் சில்க் ஸ்மிதா இருவரும் சேர்ந்து ஆடியோ நேத்து ராத்திரி யம்மா பாடலும் இன்று வரை மிகப் பெரிய ஹிட் பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
சிறந்த பொழுதுபோக்கு சித்திரத்தில் இந்த திரைப்படத்திற்கு என்றுமே தனித்துவமான இடம் ஒன்று என்று கூறினால் அது மிகையாகாது. சகலகலா வல்லவன் படம் வெளியாக 42 ஆண்டுகள் ஆன நிலையில் ஹெச்.டி தமிழ் இந்தப்படம் குறித்து நினைவு கூறுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்