Sri Reddy: அப்போது விஷால்.. இப்போது ஆந்திர CM.. கொந்தளித்த தொண்டர்கள்.. ஸ்ரீரெட்டி மீது பாய்ந்த வழக்கு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sri Reddy: அப்போது விஷால்.. இப்போது ஆந்திர Cm.. கொந்தளித்த தொண்டர்கள்.. ஸ்ரீரெட்டி மீது பாய்ந்த வழக்கு

Sri Reddy: அப்போது விஷால்.. இப்போது ஆந்திர CM.. கொந்தளித்த தொண்டர்கள்.. ஸ்ரீரெட்டி மீது பாய்ந்த வழக்கு

Marimuthu M HT Tamil Published Jul 22, 2024 05:29 PM IST
Marimuthu M HT Tamil
Published Jul 22, 2024 05:29 PM IST

Sri Reddy: அப்போது விஷால் மற்றும் இப்போது ஆந்திர CM வரை அவதூறாகப் பேசிய ஸ்ரீரெட்டி மீது வழக்குப்பதிவு ஆகியுள்ளது.

Sri Reddy: அப்போது விஷால்.. இப்போது ஆந்திர CM.. கொந்தளித்த தொண்டர்கள்.. ஸ்ரீரெட்டி மீது பாய்ந்த வழக்கு
Sri Reddy: அப்போது விஷால்.. இப்போது ஆந்திர CM.. கொந்தளித்த தொண்டர்கள்.. ஸ்ரீரெட்டி மீது பாய்ந்த வழக்கு

மிகக்குறைவான படங்களே நடித்தாலும் ஆந்திரா மற்றும் தமிழ் சினிமாவில் நடக்கும் உள்மறைவு வேலைகளை அம்பலப்படுத்தியதற்காக தமிழ் மற்றும் தெலுங்கு மக்களிடையே ரசிகர்களிடையே பரவலாக அறியப்படுகிறார்.

ஆடையைக் கழற்றி போராடிய ஸ்ரீரெட்டி:

கடந்த 2019ஆம் ஆண்டு, தெலுங்கு திரைப்பட சங்கமான, மா முன்பு, தனது மேலாடையைக் களைந்து, போராட்டத்தில் ஈடுபட்டார், ஸ்ரீரெட்டி. தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பல்வேறு தென்னிந்திய நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களைக் குற்றம்சாட்டினார்.

ஸ்ரீரெட்டியின் தொடர்குற்றச்சாட்டுகளால், மனித உரிமைகள் அமைப்பு, தெலங்கானா மாநிலத்திற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பியது.

நடிகர் விஷால், நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதாகப் பல்வேறு புகார்களை வெளிப்படையாக அறிவித்தார். 

மேலும் தெலுங்கு நடிகர்களான நானி, நடிகர் ராணாவின் இளைய சகோதரர் அபிராம், தெலுங்கு இயக்குநர்களான சேகர் கம்முலு, கொரட்டல சிவா, கதாசிரியர் கோனா வெங்கட் உள்ளிட்டப் பலர் மீது செக்ஸ் புகாரை வீசினார், ஸ்ரீரெட்டி. இதற்கு, பலரும் மறுப்புத்தெரிவித்து பேசினர்.

இந்நிலையில் தீவிர லைம்லைட்டில் இருந்த ஸ்ரீரெட்டி, தற்போது சத்தம் இல்லாமல், தனது சொந்த ஊரான ஆந்திர மாநிலத்தில் உள்ள கிராமத்தில் அமர்ந்து, நிறைய வீடியோக்களை யூட்யூப் பக்கம் உருவாக்கி போட்டு வந்தார். அதில் சமையல், லைஃப் ஸ்டைல், ஃபேஷன் என எண்ணற்ற விஷயங்களை தமிழ், தெலுங்கு ரசிகர்களுக்குப் பகிர்ந்து வந்தார். 

இந்நிலையில் சமீபத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண், உள்துறை அமைச்சர் அனிதா, சந்திரபாபு நாயுடுவின் மகன் நர.லோகேஷ் ஆகியோர் குறித்து இவர் வீடியோ மூலம் வெளியிட்ட கருத்துகள் பெரும் சர்ச்சையை அரசியல் அரங்கில் கிளப்பியுள்ளன.

இந்நிலையில் கர்னூலைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி நாகராஜூ, தெலுங்கு தேசம் கட்சித்தலைவர்கள் மீது ஸ்ரீரெட்டி அவதூறு பரப்பி வருவதாக, 3ஆவது நகர போலீஸில் ஜூலை 20ஆம் தேதி புகார் செய்தார். அதன்பேரில் ஸ்ரீரெட்டி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், கூடிய விரைவில் ஸ்ரீரெட்டி கைது செய்யப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் கடப்பா மற்றும் ஹைதராபாத்திலும் ஸ்ரீரெட்டி மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளனவாம். 

ஸ்ரீரெட்டி மீது தெலுங்கு தேசம் நிர்வாகி புகார் அளிக்க காரணம் என்ன?

ஸ்ரீரெட்டி தனது சமூக வலைதளப்பக்கமான ஃபேஸ்புக்கில் தொடர்ச்சியாக தெலுங்கு தேசம் கட்சியை விமர்சித்து வருகிறார். அவரை 6.1 மில்லியன் மக்கள் ஃபாலோ செய்கின்றனர். 

குறிப்பாக, சமீபத்தில் பதவியேற்ற தெலுங்கு தேசம் கட்சி தொடர்பாக ஸ்ரீரெட்டி இட்ட விமர்சனப் பதிவில், ‘’ சிவப்பு நூல் ஆட்சியில், ஒரு மாத ரத்த வரலாறு எனத் தலைப்பிட்டு,  தாக்குதல்கள் -1500; கொலை முயற்சி - 300; கொலைகள் - 31, சொல்லப்படாத தற்கொலைகள் - 35, தனியார் சொத்துகள் அபகரிப்பு - 560; அரசு சொத்துக்கள் அழிப்பு - 490; கிராமங்களை விட்டு வெளியேறிய குடும்பங்கள் - 2705(பாலநாட்டி பகுதியில் இருந்து தெலங்கானா சென்ற குடும்பங்கள் - 1500)’’ எனப் பதிவிட்டு, அதன் கீழே, பவன் கல்யாண் மற்றும்  நர.லோகேஷ் பேசும் காணொலியைப் பகிர்ந்து விமர்சித்துள்ளார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.