ARMurugadoss: “கர்மா விடுமா என்ன? ராமர் பண்ணாலும் தப்பு தப்புதான்!- பொளந்து கட்டிய ஏ.ஆர். முருகதாஸ்!
ஏ.ஆர்.ரஹ்மான் அண்மையில் அண்ணாபல்கலை கழத்தில் பேசினார்
அவர் பேசும் போது “துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா பார்க்கும் பொழுது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். காரணம், இதை ஒரு மனித சக்தி கட்டி எழுப்பி இருக்கிறது என்பதை ஒரு பக்கம் வைத்துக் கொண்டாலும், இதை இப்படியான முறையில் கட்ட வேண்டும் என்று ஒருவருக்கு தோன்றியிருக்கிறதே, அந்த எண்ணமானது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது.
அந்த எண்ணத்தின் சக்தி தான் அவரின் கீழ் கிட்டத்தட்ட 1000 பேர் உழைக்க ஏதுவான ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தது என்று சொல்வேன். அதை இந்த பிரபஞ்சம் அவருக்காக நடத்திக் கொடுத்திருக்கிறது
கொரோனா காலத்தில் ஆங்கில கல்வி படித்துக் கொண்டிருந்த பல மாணவர்கள் வருமானமின்மையால் தமிழ் வழி கல்விக்கு மாறினார்கள். காரணம், அவர்களின் பெற்றோரால் அவர்கள் நினைத்த கல்வியை தன்னுடைய மகனுக்கு கொடுக்க முடியவில்லை. பொருளாதாரம் சிக்கலுக்கு உள்ளானது.
இதில் கொடுமை என்னவென்றால் சில தனியார் கல்விக்கூடங்கள் மாணவர்கள் பணம் கட்டவில்லை என்பதற்காக மாணவர்களை தேர்விற்கு அனுமதிக்கவில்லை; ஆனால் உண்மையில் அந்த பணம் ஆனது அடுத்த வருடத்திற்கானது என்பது தெரியவந்தது.
அதாவது இந்த மாணவர்கள் தங்கள் கல்வி கூடங்களை விட்டு வெளியே சென்று விடக்கூடாது என்பதற்காக, இப்படியான ஒரு தந்திரமான வழிமுறையை அந்த கல்விக்கூடங்கள் கையாண்டன
எழுத்தாளர் கலைமணியிடம் நான் உதவி எழுத்தாளராக வேலை பார்த்த போது, அவருக்கு காபி டீ என எல்லாமே நான் வாங்கி கொடுத்திருக்கிறேன். திடீரென்று வெளியூர் செல்லும் பொழுது, 10 பேரின் தட்டு அப்படியே கிடக்கும். அதை நான் கழுவி இருக்கிறேன். இதில் என்ன இருக்கிறது வெட்கப்படுவதற்கு..
என்னுடைய அப்பா பெரிய டைரக்டர் அல்ல.. அப்பா ஒரு பெரிய தயாரிப்பாளர் கிடையாது... நான் எவ்வளவு கீழே இருந்து வந்தேன் என்று பெருமையாகத்தான் சொல்கிறேனே.. அதில் எனக்கு எந்தவித கஷ்டமும் இல்லை. இந்த உலகில் கர்மா என்று ஒன்று இருக்கிறது. நீங்கள் தெரியாமல் தவறு செய்தாலும் அதற்கு மன்னிப்பே கிடையாது; அது தான் கர்மா.
ராமர் கடவுளின் அவதாரம் என்று சொல்கிறார்கள். அவர் ஒரு சின்ன பையன். அவர் கூனி என்ற வயதான மாற்றுத்திறனாளி பெண்ணை பின்நோக்கி வில்லை கொண்டு எரிந்து கிண்டல் செய்தார். அதற்காக வாழ்க்கை முழுவதும் அவர் கஷ்டப்பட்டார். அந்த கர்மா அவரை விடவில்லை; அவர் சின்ன பையன் தானே என்று சொல்லி அவர் விடவில்லை.” என்று பேசினார்
டாபிக்ஸ்