Actor vishal: நீட்டுக்கு முழு அர்த்தம் தெரியுமா..? விஜய் முதல்ல அரசியலுக்கு வரட்டும்..’ -விஷால்!
Actor vishal: “நீட்டினுடைய முழு அர்த்தத்தை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அந்த நீட் தேர்வு எத்தனை பேரை பாதித்திருக்கிறது. அதனால் எவ்வளவு பேர் இறந்திருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரிந்ததுதான்.” - விஷால்!
Actor vishal:நடிகர் விஷால் விஜயின் அரசியல் வருகை குறித்து பேசி இருக்கிறார்.
கோயில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், “நான் அரசியலுக்கு வர வேண்டுமா வேண்டாமா என்பது மக்களுடைய பதிலில்தான் இருக்கிறது. நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பிய போது, நீட்டினுடைய முழு அர்த்தத்தை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அந்த நீட் தேர்வு எத்தனை பேரை பாதித்திருக்கிறது. அதனால் எவ்வளவு பேர் இறந்திருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரிந்ததுதான். ஆகையால், நீட் தேர்வு தேவையா இல்லையா என்பதை அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டும்.
விஜய் கட்சியில் இணைவேனா?
விஜய் கட்சியில் நான் இணைவேனா என்பதற்கு முன்னால், முதலில் அவர் பயணிக்க ஆரம்பிக்கட்டும். விஜயினுடைய தொடக்கம்தான் மிகவும் முக்கியமானது. ஒரு கட்சியை ஒருவர் ஆரம்பிக்கிறார் என்று சொன்னால், முதலில் அவர் அதனை ஆரம்பிக்க வேண்டும். அதில் நான் இணைந்து பயணிப்பேனா என்பது அப்பாற்பட்டது” என்று பேசினார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய், தான் அரசியலுக்கு வர இருக்கிறேன் என்பதை தன்னுடைய படங்களின் வாயிலாகவும், அது தொடர்பான விழாக்களின் வாயிலாகவும் வெளிப்படுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் தான் அரசியலுக்கு வர இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிக்கையும் வெளியிட்டார். அந்த அறிக்கையில், கோட் படத்திற்கு பிறகு நடிக்கும் ஒரு படத்துடன், சினிமாவை விட்டு விலகுவதாக குறிப்பிட்டு இருந்தார்.