Indian 2 OTT Update: 'தாத்தா வராரு..கதற விட போறாரு'..இந்தியன் 2 OTT ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Indian 2 OTT Release Update: பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12-ல் திரைக்கு வந்தது. லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
Indian 2 OTT Release Update: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவான இந்தியன் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஜுலை 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட மிகப்பெரிய பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். லைக்கா புரோடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் இப்படத்தை தயாரித்திருந்தார். 'இந்தியன் 2' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார்.
எதிர்மறையான விமர்சனம்
முதல் பாகத்தை போல் அதன் இரண்டாம் பாகமும் மாபெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. சமூக வலைதளங்களில் படத்தின் திரைக்கதை, கமல்ஹாசனின் மேக் அப் குறித்து ரசிகர்கள் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்தனர். குறிப்பாக, இரண்டாம் பாதியில் மிக நீளமாகக் காட்சிகள் வைக்கப்பட்டதாக ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்தது. இதையடுத்து 11.51 நிமிடக் காட்சிகளைப் படக்குழு நீக்கியது.
பாக்ஸ் ஆபிஸ் தோல்வி
இந்தியன் 2 திரைப்படம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸிலும் எதிர்பார்த்த வசூலை பெறமுடியாமல் தோல்வி அடைந்துள்ளது. இந்தியன் 2. தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளது.
ஓடிடி ரிலீஸ்
இந்தியன் 2 படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதன் ஓடிடி ரிலீஸ் தேதியை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி, வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இந்தியன் 2 ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பணத்தை திரும்ப கேட்டதா நெட்பிளிக்ஸ்?
முன்னதாக, இந்தியன் 2 படத்தின் டிஜிட்டல் மற்றும் ஓடிடி வெளியீட்டு உரிமையை ரூ.150 கோடிக்கு பெற்றது நெட்பிளிக்ஸ் நிறுவனம். படத்தின் அனைத்து மொழிப்பதிப்புகளையும் வெளியிடுவதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக முன் பணமாக ரூ. 75 கோடியும் செலுத்தியுள்ளது. ஆனால், படம் எதிர்பார்த்த வரவேற்பையும், வசூலையும் பெறாத நிலையில் அட்வான்ஸாக செலுத்திய தொகையை திரும்ப அளிக்கமாறு படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்திடம் நெட்பிளிக்ஸ் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கதையின் கரு
இந்தியன் முதல் பாகத்தில், லஞ்சம் வாங்கிக்கொண்டு மக்களுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளையும், அரசியல் வாதிகளையும், இந்தியன் தாத்தா கொல்வதை மைய கருவாக வைத்து கதை சொல்லி இருந்தார் இயக்குநர் ஷங்கர். தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாம் பாகத்திலும், அதுதான் மையக்கரு. ஒரே வித்தியாசம், தற்போதைய தலைமுறையில் லஞ்சத்தால் ஏற்படும் பிரச்சினைகளை கருவாக எடுத்து காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார் அவ்வளவுதான். அந்த பிரச்சினை சம்பந்தமான காட்சிகளை சித்தார்த்தையும், அவர் நடத்தி வரும் யூ- டியூப் சேனல் மூலமாகவும் நகர்த்தி இருக்கும் ஷங்கர், அதன் மூலமாக, பல்லாண்டுகளுக்கு முன்னதாக தாய்பேய்க்கு சென்ற இந்தியன் தாத்தாவிற்கு, சோசியல் மீடியா வழியாக அழைப்பு விடுகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்