Indian 2 Box office: மியாவ்.. கதறும் இந்தியன் 2 தாத்தா.. ஷங்கரை வச்சு செய்யும் நெட்டிசன்கள்; வசூல் எவ்வளவு தெரியுமா?
ஷங்கர்-கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் எதிர்பார்த்த வசூலை வசூலிக்க வில்லை. - வசூல் எவ்வளவு தெரியுமா?

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல் நடிப்பில் அண்மையில் வெளியான இந்தியன் 2 திரைப்படம், வசூலில் சரிவை கண்டு இருக்கிறது. Sacnilk.com வெளியிட்டு இருக்கும் தகவலின் படி, இப்படம் இதுவரை 42 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது என்பது தெரியவந்திருக்கிறது.
இந்தியாவில் ‘இந்தியன் 2’ எவ்வளவு வசூல்?
Sacnilk.com வெளியிட்டு இருக்கும் தகவலின் படி, இந்தியன் 2 திரைப்படம் வெளியான அன்றைய தினம் அந்தப்படம், தமிழில் 16.5 கோடி ரூபாயும், இந்தியில் 1.2 கோடி ரூபாயும்,தெலுங்கில் 7.9 கோடியும் வசூல் செய்திருக்கிறது. இரண்டாவது நாளில், தமிழில் 13.5 கோடி ரூபாயும், இந்தியில் 1.2 கோடி ரூபாயும், தெலுங்கில் 2.5 கோடி ரூபாயும் வசூல் செய்திருக்கிறது. மொத்தமாக பார்க்கும் போது, இரண்டு நாட்களில் இந்தியன் 2 திரைப்படம், தமிழில் 29.3 கோடி ரூபாயும், ஹிந்தியில் 2.4 கோடி ரூபாயும், தெலுங்கில் 10.4 கோடி ரூபாயும் வசூல் செய்திருக்கிறது. ஆக மொத்தத்தில், இந்தியன் 2 திரைப்படம் 2 நாளில் வெறும் 42.3 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருக்கிறது.
படம் எப்படி இருந்தது?
Indian 2 Review: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர்கள் கமல், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், விவேக், பிரியா பவானி ஷங்கர், மனோபாலா உள்ளிட்ட பலரது நடிப்பில், இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் இந்தியன் 2. இந்தியன் முதல் பாகத்தின் ஏகோபித்த வெற்றி, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டி இருந்த நிலையில், இன்று இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் எப்படி இருந்தது என்பதை பார்க்கலாம்.