தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Flora Saini: 14 மாத நரகம், அந்தரங்க உறுப்பை தாக்கிய தயாரிப்பாளர் - ஃப்லோரா சைனி

Flora Saini: 14 மாத நரகம், அந்தரங்க உறுப்பை தாக்கிய தயாரிப்பாளர் - ஃப்லோரா சைனி

Aarthi V HT Tamil
Feb 01, 2023 01:53 PM IST

ஃப்லோரா சைனி தனது வாழ்க்கையில் தான் சந்தித்த கடினமான அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஃப்லோரா சைனி
ஃப்லோரா சைனி

ட்ரெண்டிங் செய்திகள்

இவர், பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தன்னை ஏமாற்றி 14 மாதங்கள் பாலியல் தொல்லை கொடுத்தாக வேதனையாக கூறினார். மேலும், அவர் தனது அந்தரங்க உறுப்புகளை காயப்படுத்தி கொடூரமாக சித்திரவதை செய்ததாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோவில்,தனக்கு நடந்ததை நினைவு படுத்தும் வகை வடிவில் கூறியுள்ளார். அதில், " நான் 20 வயதில் என் கேரியரின் உச்சத்தில் இருந்தேன். பாலிவுட்டில் 10 படங்களுக்கு மேல் நடித்தேன். மாடலிங் விளம்பரங்கள் செய்தேன். ஆனால் அதன் பிறகு ஒரு பிரபல தயாரிப்பாளரைக் காதலித்தேன். பிறகு என் சூழ்நிலை முற்றிலும் மாறியது.

அவர் என்னைத் தவறாகப் பயன்படுத்தினார். என் முகம் மற்றும் அந்தரங்க உறுப்புகளை கண்மூடித்தனமாக காயப்படுத்தினார்.எ ன்னுடைய போனைப் பிடித்து வாங்கிவிட்டார். 14 மாதங்கள் என்னை நடிக்க விடாமல் சித்திரவதை செய்தார். யாரிடமும் பேசவிடாமல் செய்தார்.

கடைசியில் நான் அவரிடமிருந்து ஓடி வந்துவிட்டேன். நான் என் பெற்றோர்களிடம் வந்துவிட்டேன். அந்த நரகத்திலிருந்து மீள சில மாதங்கள் தேவைப்பட்டது. என்னை நேசிப்பவர்களின் ஆதரவால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இப்போது நான் என் பெற்றோருடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார். அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆஷா சைனி தனது நடிப்பு வாழ்க்கையை 1999 ஆம் ஆண்டு தொடங்கினார். ந சமீபத்தில் பாலிவுட்டில் பேடியா, தோ லஃப்ஜான் கி கஹானி, குட்டு கி கன் போன்ற படங்களில் நடித்து உள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்