காது கிழியும் சத்தம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. வசூல் வேட்டையாட துடிக்கும் வேட்டையன்
நடிகர் ரஜினிகாந்த்தின் வேட்டையன் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்படுகிறது. இந்நிலையில், படத்தைக் காண காலை முதலே படத்தைக் காண ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

கோலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகிறது. இப்படத்தின் சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு தொடங்கும் என தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து, ரசிகர்கள் அதிகாலை முதலே தியேட்டர் முன் குவிந்து வருகின்றனர்.
மேள தாளங்கள் முழங்க, நடிகர் ரஜினி காந்த்தின் வேட்டையன் படத்தை வரவேற்று, பாடி, ஆடி மகிழ்ந்து வருகின்றனர். இதனால், திரையரங்கங்கள் உள்ள பகுதிகள் அனைத்தும் திருவிழா நிகழ்ச்சி போல காட்சி அளிக்கிறது.
இப்படத்தில் நடிகர் ரஜினி காந்த் மட்டுமின்றி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாளம் மட்டுமின்றி தென்னிந்தியாவையே தனது நடிப்பால் கலக்கிவரும் பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இதனால், அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் இந்தப் படத்தைக் காண ஆர்வமுடன் இருக்கின்றனர்.
