Vijay Sethupathi: ரூ. 100 கோடி வசூல்.. ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காத விஜய் சேதுபதி.. காரணம் என்ன?
Vijay Sethupathi: மகாராஜா படத்திற்கு பட்ஜெட்டாக ரூ.20 கோடி வரை கண்டிப்பாக தயாரிப்பாளர்கள் நிர்ணயித்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், படப்பிடிப்பு செலவு அதிகரித்து உள்ளது.

விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதே ரேஞ்சில் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்த படத்தில் ஹீரோ விஜய் சேதுபதி சிறப்பாக நடித்து இருந்தார். மகாராஜா படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்கினார். ஆக்ஷன் த்ரில்லர் படமான இந்த படத்தின் திரைக்கதை மிகவும் சுவாரசியமாக உள்ளது. இப்படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. ஆனால், மகாராஜா படத்துக்கு விஜய் சேதுபதி முன்கூட்டியே சம்பளம் வாங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக நோ சம்பளம்
மகாராஜா படத்திற்கு பட்ஜெட்டாக ரூ.20 கோடி வரை கண்டிப்பாக தயாரிப்பாளர்கள் நிர்ணயித்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், படப்பிடிப்பு செலவு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பட்ஜெட் வரம்பை தாண்டக்கடாது என்ற நோக்கத்தில் விஜய் சேதுபதி இந்த படத்திற்கான சம்பளத்தை தள்ளுபடி செய்துள்ளதாக தெரிகிறது. ஒரு ரூபாய் கூட வாங்காமல் இந்தப் படத்தில் நடித்தார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த 50 ஆவது படம் இது என்பது மற்றொரு சிறப்பு.