GOAT: 25 நாட்களைக் கடந்த கோட்.. சந்தோஷத்தில் வெங்கட் பிரபு.. பிளாக் பஸ்டர் பதிவு..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Goat: 25 நாட்களைக் கடந்த கோட்.. சந்தோஷத்தில் வெங்கட் பிரபு.. பிளாக் பஸ்டர் பதிவு..

GOAT: 25 நாட்களைக் கடந்த கோட்.. சந்தோஷத்தில் வெங்கட் பிரபு.. பிளாக் பஸ்டர் பதிவு..

Malavica Natarajan HT Tamil
Sep 29, 2024 05:35 PM IST

GOAT: நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 25 நாட்களை நிறைவு செய்துள்ளதாகவும், பிளாக் பஸ்டர் வெற்றி அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் கோட் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு நன்றி தெரிவித்துள்ளார்.

GOAT: 25 நாட்களைக் கடந்த கோட்.. சந்தோஷத்தில் வெங்கட் பிரபு.. பிளாக் பஸ்டர் பதிவு..
GOAT: 25 நாட்களைக் கடந்த கோட்.. சந்தோஷத்தில் வெங்கட் பிரபு.. பிளாக் பஸ்டர் பதிவு..

இது விஜய்யின் 68 ஆவது படம். இந்தப் படத்தில் பிரசாத், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

திரையரங்குகளில் வெளியான கோட் திரைப்படம் தற்போது 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு மக்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

பல ஆண்டுக்குப் பின் இணைந்த காம்போ

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் படத்துக்கு, பல ஆண்டுகளுக்குப் பின், யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸாகியிருக்கிறது. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக, கல்பாத்தி அகோரம்,கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் என சகோதரர்கள் மூவர் இணைந்து தயாரிக்கின்றனர்.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்துக்கு உண்டான ஒளிப்பதிவினை சித்தார்த்தா நுனி புரிய, வெங்கட் ராஜின் என்பவர் எடிட் செய்கிறார். இப்படத்துக்குண்டான வசனத்தை விஜி மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். இப்படத்தில் கங்கை அமரன், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, விவேக் ஆகிய நால்வர் சேர்ந்து பாடல்களை எழுதியுள்ளனர்.

படத்தின் கதை என்ன?

கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், பயங்கவாதி ஓமரையும் பத்திரமாக கொண்டு வர SATS டீம் (Special Anti terrorist squad)செல்கிறது. இந்தக் குழுவில், காந்தி ( விஜய்), அஜய் (அஜ்மல்), சுனில் (பிரசாந்த்), கல்யாண் ( பிரபு தேவா) ஆகியோர் ஆயுதங்களுடன் களமிறங்குகின்றனர். அப்போது நடக்கும் சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மேனன் ( மோகன்) இறந்துவிடுவதாக காட்டப்படுகிறது.

இதற்கிடையே தாய்லாந்திற்கு மனைவி அனு ( சினேகா) உடன் செல்லும் காந்தி, தன்னுடைய மகனைப் பறி கொடுப்பதாக காட்டப்படுகிறது. ஆனால், பின்னாளில் அவனை, தந்தை காந்தி சந்திக்க நேரிடுகிறது. அவர்கள் இருவரும் எப்படி சந்தித்தனர்? காந்தி சந்திக்கும் பிரச்சினை என்ன? காந்திக்கு வில்லனாக அவரது மகன் மாறியது ஏன்? என்பது படத்தின் மீதிக்கதை.

விஜய்க்கு வாய்ப்பளித்த வெங்கட் பிரபு

நீண்ட நாட்களாக சீரியஸாகவே திரையில் தோன்றி வந்த விஜய்க்கு அவரின் எல்லா வித பக்கங்களையும் காட்ட தளம் அமைத்து கொடுத்து இருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. அதன் படி படத்தில் விஜய் வெளிப்படுத்தி இருக்கும் காமெடி, லூட்டி, எமோஷன், சைலண்ட் ரியாக்ஷன், டயலாக் டெலிவரி, ஆக்ஷன் என அனைத்தும் ரசிக்க வைத்து இருக்கிறது.

குறிப்பாக அவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் புதுமையாக இருக்கிறது. டி ஏஜிங் செய்யப்பட்ட விஜயின் கரெக்ஷன் ஓகே ரகம்தான். ஆனால், அந்த கதாபாத்திரத்தில் விஜய் வெளிப்படுத்திய நடிப்பு மிரட்டலாக உள்ளது.

நிறைய கேமியோ

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் சிவகார்த்திகேயன், விஜயகாந்த் என பல்வேறு மாஸ் ஸ்டார்களின் வருகை இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரங்களின் வருகையும், படத்திற்கு தேவையான இடங்களின், தேவையான சூழலில் வைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

வெறுமனே விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு ரசிகர்களயைம் கவரும் விதமாக, திரைக்கதையில் இந்த கதாபாத்திரங்களை சேர்க்க, மெனக்கெட்டிருக்கும் வெங்கட்பிரபு, அதற்காக முடிந்த அளவு நியாயம் செய்திருக்கிறார். அதே போல, த்ரிஷாவும் ஒரு பாடலில் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். ஆட்டம் போடும் விதமாக அமைந்த காட்சிகள் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

நன்றி கூறிய வெங்கட் பிரபு

இந்நிலையில், இந்தப் படம் திரையிடப்பட்டு இன்றுடன் 25வது நாள் நிறைவடைகிறது. இதற்காக படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு அவரது எக்ஸ் தள பதிவில் நன்றி தெரவித்துள்ளார்.

அந்தப் பதிவில், கடவுள் மிகவும் கருணையானவர். எங்கள் கோட் படத்தை மெகா பிளாக் பஸ்டர் படமாக்கிக் கொடுத்த ஒவ்வொரு நபருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.