Venkat Prabhu: வாரிசு நடிகர்களா? ‘உன் அப்பா பேர சொல்லு அவருக்கும்’ நெப்போட்டிசம் கமெண்டிற்கு வெங்கட் பிரபு பதிலடி!-goat director thalapathy vijay venkat prabhu thug reply to x user for nepotism comment - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Venkat Prabhu: வாரிசு நடிகர்களா? ‘உன் அப்பா பேர சொல்லு அவருக்கும்’ நெப்போட்டிசம் கமெண்டிற்கு வெங்கட் பிரபு பதிலடி!

Venkat Prabhu: வாரிசு நடிகர்களா? ‘உன் அப்பா பேர சொல்லு அவருக்கும்’ நெப்போட்டிசம் கமெண்டிற்கு வெங்கட் பிரபு பதிலடி!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 30, 2024 03:28 PM IST

Venkat Prabhu: இன்றைய தினம் எக்ஸ்தளவாசி ஒருவர் கோட் படத்தில், முழுக்க, முழுக்க வாரிசு கலைஞர்கள் இருக்கிறார்களே என்பதை பதிவிட்டு இருந்தார். அதற்கு வெங்கட் பிரபு பதிலடி கொடுத்திருக்கிறார்.

Venkat Prabhu: வாரிசு நடிகர்களா?  ‘உன் அப்பா பேர சொல்லு அவருக்கும்’ நெப்போட்டிசம் கமெண்டிற்கு வெங்கட் பிரபு பதிலடி!
Venkat Prabhu: வாரிசு நடிகர்களா? ‘உன் அப்பா பேர சொல்லு அவருக்கும்’ நெப்போட்டிசம் கமெண்டிற்கு வெங்கட் பிரபு பதிலடி!

இந்த நிலையில், இன்றைய தினம் எக்ஸ்தளவாசி ஒருவர் கோட் படத்தில், முழுக்க, முழுக்க வாரிசு கலைஞர்கள் இருக்கிறார்களே என்பதை பதிவிட்டு இருந்தார். மேலும் இது நெப்போட்டிசம் வகையைச் சாரும் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டி இருந்தார். இந்த நிலையில், இதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு  “உங்க அப்பா பேரு சொல்லுங்க அவருக்கு நான் நன்றி சொல்லிறேன்” என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இந்தப்பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சென்சாரில் கட்

அண்மையில் கோட் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது. அதில் படத்தில் எவையெல்லாம் நீக்கப்பட்டு இருக்கின்றன என்பது தொடர்பான விபரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்படி, படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கெட்ட வார்த்தைகளை நீக்க சொல்லி இருக்கும் சென்சார் குழு, தேச தந்தை வார்த்தையை பயன்படுத்த தடை விதித்து இருந்தது.

 

வெங்கட் பிரபு
வெங்கட் பிரபு

அதே போல படத்தில் பெண் ஒருவர் வெளிப்படுத்தும் ரியாக்‌ஷன் காட்சியையும் நீக்க சொல்லி இருந்த சென்சார் குழு, ஒரு காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் மதுபானத்தின் பெயரையும் எடுக்கச்சொல்லி இருந்தது.அத்துடன் படத்தில் மது, புகையிலை காண்பிக்கப்படும் இடங்களில் மது, புகையிலை நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு தொடர்பான வாசகங்களை இடம் பெற செய்ய வலியுறுத்தி இருந்தது.

புகையிலை காண்பிக்கப்படும் இடங்களில்

அதே போல படத்தில் பெண் ஒருவர் வெளிப்படுத்தும் ரியாக்‌ஷன் காட்சியையும் நீக்க சொல்லி இருக்கும் சென்சார் குழு, ஒரு காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் மதுபானத்தின் பெயரையும் எடுக்கச்சொல்லி இருக்கிறது. அத்துடன் படத்தில் மது, புகையிலை காண்பிக்கப்படும் இடங்களில் மது, புகையிலை நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு தொடர்பான வாசகங்களை இடம் பெற அறிவுறுத்தி இருந்தனர்.

யுவனுடன் விஜய்
யுவனுடன் விஜய்

கூடவே, கழுத்தை அறுப்பது போன்ற காட்சி ஒன்றை சுருக்குமாறு கூறியிருக்கும் சென்சார் குழு, படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் பெயர்களை தமிழில் போடவும் வலியுறுத்தி இருந்தது . இந்த திருத்தங்களின் படி கோட் படத்தில் சென்சார் குழு 00.03 நிமிடங்களை நீக்க கூறி இருந்த நிலையில், அதன்படி காட்சிகளை நீக்கிய படக்குழு 00.02 நிமிட அளவு காட்சியை சேர்த்து இருந்தது.

கூடவே, வெங்கட் பிரபுவின் படங்களில் இறுதியில் வழக்கம் போல் சேர்க்கப்படும் ப்ளாப்பர்ஸூம் 3 நிமிட அளவிற்கு சேர்க்கப்பட்டு இருக்கிறது. ஆக, எல்லாவற்றையும் வைத்து மொத்தமாக பார்க்கும் போது கோட் திரைப்படத்தின் நீளம் 3 மணி நேரம் 3 நிமிடமாக வந்திருப்பது தெரிய வந்தது.

யு/ஏ சான்றிதழ்

இந்தப்படத்தில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

முன்னதாக, கோட் திரைப்படத்தில் யுவனின் பாடல்களுக்கு கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில், அதற்கு வெங்கட் பிரபு பதில் கொடுத்திருந்தார்.

இது குறித்து அவர் பேசும் போது, “கோட் படத்தில் யுவன் இசையமைத்த பாடல்களைப் பொறுத்தவரை, அதற்கு கலவையான விமர்சனங்கள் வந்ததை நாங்கள் கவனித்தோம். ஆனால், நீங்கள் படம் பார்த்து விட்டு வெளியே வரும் பொழுது பாடல்கள் அனைத்தும் உங்களுக்கு விஷுவல் ட்ரீட் ஆக அமைந்து பிடித்துதான் வெளியே வருவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

 

இந்தப்படத்தில் நடித்த பிரபுதேவா பிரசாந்த் உள்ளிட்டவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காரணம் என்னவென்றால், இந்தப்படத்தில் எல்லா கேரக்டர்களுக்கும் அதிக முக்கியத்துவம் இருந்த போதும், ஒன்றாக அவர்கள் நடிக்க ஒத்துக் கொண்டது பெரிய விஷயம். இது உங்களுக்கு நிச்சயமாக ட்ரீட்டாக அமையும். எந்த இடத்திலும் படம் முகம் சுளிப்பது போல நிச்சயமாக இருக்காது.” என்று பேசி இருந்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.