Sunny Leone: சன்னி லியோனுக்காகவே இத பண்ணனும்... மனதில் இருப்பதை போட்டு உடைத்த டைரக்டர்
Sunny Leone: நடிகை சன்னி லியோன் தனது அருகில் அமர்ந்திருந்தும் தன்னால் சகஜமாக அவரிடம் பேச முடியவில்லை. அவரிடம் பேசுவதற்காவது தான் இனி சிலவற்றை செய்ய வேண்டும் என இயக்குநர் பேரரசு தனது மனதிலிருந்த வருத்தத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.

2013ம் ஆண்டு "ஜிஸ்ம்2" என்ற இந்தி திரைப்படம் மூலம் இந்திய சினிமா நடிகையாக என்ட்ரி கொடுத்தவர் சன்னி லியோன். இவர், இதைத்தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளோடு சேர்த்து 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் இவர் குறித்து தமிழ் இயக்குநர் பேரரசு பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
புளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பேட்ட ராப்". இத்திரைப்படத்தில் நடிகர், நடன இயக்குநர், இயக்குநர் என பல துறைகளில் கோலோச்சி வரும் பிரபுதேவா, நடிகை வேதிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பேட்ட ராப் ப்ரமோஷன்
நடிகர் விஜய்யுடன் நடித்த "கோட்" திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், பிரபுதேவா தான் கதாநாயகனாக நடித்துள்ள பேட்ட ராப் படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.