Vijay 69: அந்த நபரை கொல்லவும் தயங்கமாட்டேன்- ஆவேசமடைந்த இயக்குநர்... நடந்தது என்ன?-director parthiban funny comment about thalapathy 69 and its director - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay 69: அந்த நபரை கொல்லவும் தயங்கமாட்டேன்- ஆவேசமடைந்த இயக்குநர்... நடந்தது என்ன?

Vijay 69: அந்த நபரை கொல்லவும் தயங்கமாட்டேன்- ஆவேசமடைந்த இயக்குநர்... நடந்தது என்ன?

HT Tamil HT Tamil
Sep 19, 2024 05:34 PM IST

Vijay 69: நடிகர் விஜய்யின் கடைசி படத்தை இயக்குவதே எனது ஆசை. அதற்காக, இயக்குநர் ஹெச். வினோத்தை கொலை செய்யவும் தயங்க மாட்டேன் என இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் விளையாட்டாக கூறியுள்ளார்.

Vijay 69: அந்த நபரை கொல்லவும் தயங்கமாட்டேன்- ஆவேசமடைந்த இயக்குநர்... நடந்தது என்ன?
Vijay 69: அந்த நபரை கொல்லவும் தயங்கமாட்டேன்- ஆவேசமடைந்த இயக்குநர்... நடந்தது என்ன?

நடிகர் விஜய்யின் 69ஆவது திரைப்படமான இது, அவரது கடைசி படமாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இத்திரைப்படம் தொடர்பான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவல்களை எப்போது படக்குழு வெளியிடும் என மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தமிழ் திரையுலகில் மாறுபட்ட படைப்புகளை இயக்கிவரும் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், தளபதி 69 திரைப்படம் குறித்தும், அத்திரைப்படத்தின் இயக்குநர் குறித்தும் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது.

என் ஆசையை ஹெச்.வினோத் தட்டிச் சென்றார்

சினிமாவிலிருந்து ஓய்வு பெறவுள்ள நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படத்தை நான் இயக்க வேண்டும் என பெரும் ஆசை கொண்டேன். ஆனால், இயக்குநர் ஹெச். வினோத் அந்த ஆசையையும் வாய்ப்பையும் தட்டிச் சென்று விட்டார் என இயக்குநர் பார்த்திபன் வருத்தமாக கூறியுள்ளார்.

கொலை செய்வேன்

இந்நிலையில், அவர் தட்டிச் சென்ற வாய்ப்பை மீண்டும் பெற நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். இதற்காக இயக்குநர் ஹெச். வினோத்தை கொலை செய்துவிட்டு விஜய்யிடம் வாய்ப்பு கேட்பேன். அப்போது, ஹெச். வினோத் என்னிடம் உதவியாளராக பணியாற்றினார். ஆனால், அவர் தற்போது இல்லாததால், உங்களது படத்தை நான் இயக்குகிறேன் எனக் கூறுவேன் என காமெடியாக இயக்குநர் பார்த்திபன் கூறியுள்ளார்.

தற்போது, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "கோட்" திரைப்படம் திரையரங்கில் ரசிகர்களின் மாஆதரவைப் பெற்று வசூலை குவித்து வரும் நிலையில், அடுத்த படத்திற்கான அறிவிப்பால், கோலிவுட் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் கட்சிப் பணிகளில் மும்மரமாக கவனம் செலுத்தி வருவதால், இப்படம் எப்போது படமாக்கப்பட்டு திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

 

Whats_app_banner