LCU-வில் நடித்த எல்லா நடிகர்களும் ஒரு படத்தில்.. ரோலாக்ஸை வைச்சு ஒரு தனிப்படம்.. லோகேஷ் கனராஜ் பகிர்வு
LCU-வில் நடித்த எல்லா நடிகர்களும் ஒரு படத்தில்.. ரோலாக்ஸை வைச்சு ஒரு தனிப்படம் என இயக்குநர் லோகேஷ் கனராஜ் தகவல் பகிர்ந்துள்ளார்.
LCU-வில் நடித்த எல்லா நடிகர்களையும் ஒரு படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என இயக்குநர் லோகேஷ் கனராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் கூகை திரைப்பட இயக்கம் ஒருங்கிணைத்த திரைமொழி கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அப்போது அங்கு வந்த சினிமா ஆர்வலர்களிடம் உரையாற்றினார். அதில்,
‘’என்ன மாதிரியான படத்தை வைச்சு கேரியரை ஸ்டார்ட் பண்ணலாம்?
பதில்: அனைத்து இயக்குநர்களுக்கும் ஒரு பலம் இருக்கும். கவுதம் மேனன் சார் நிறைய ஆக்சன் படங்கள் பண்ணியிருந்தாலும், விண்ணைத்தாண்டி வருவாயா அவரோட பலம். அது தான் தனியாக தெரியும். அந்தப் படத்தில் லவ் தனியாகத் தெரியும். நான் நான்கு ஐந்து ஷார்ட் ஃபிலிம் பண்ணியிருக்கேன். அதை முதல் தடவை போட்டுக்காட்டும்போது அவங்க எப்படி உணர்றாங்களோ, அப்படி தான் மக்களும் உணர்வாங்க. அதைப் புரிஞ்சுக்கிட்டு படம் பண்ணனும். அதுதான் நம்ம எடுக்க விரும்பும் ஏரியா. அப்படி தான் மாநகரம் பண்ணுனேன். என்னோட எல்லா படங்களிலும் ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் ஒரு ஹைப்பர் லிங்க் இருக்கும். அப்படி ஒரு கதை பண்றது எனக்கு சவாலாக இருக்கும். படம் கமர்ஷியலாகி பெரிசாகிடுச்சு என்றால், நமக்கு கிடைக்கிற வாய்ப்புகளையும் ‘நோ’ சொல்ல முடியாது. கைதி படம் பண்ணும்போது ‘மாஸ்டர்’ வாய்ப்பு வந்திடுச்சு. அங்கே ‘நோ’ சொல்லியிருந்தால், நான் அமரும் இடம் வேறு மாதிரியாக இருக்கும். அதனால், நான் அந்த வாய்ப்பினை மிஸ் பண்ணக்கூடாதுன்னு போய்டுவேன். எது நம்மளோட பலமோ அதில் கதை பண்ணியிரனும்.
நடிகர்களைப் பொறுத்தவரையில் எப்படி தேர்ந்தெடுக்கலாம்?
பதில்: என்ன தான் ஆடிசன் வைச்சு செலக்ட் பண்ணினாலும், அன்னிக்கு செட்டில் ஒருத்தர் துறுதுறுன்னு இருந்தாங்க என்றால், அவங்களை நான் நடிக்கவைச்சிடுவேன்.
உங்களோட படங்களில் சண்டைக்காட்சிகள் எப்படி எழுதுவீங்க. எடுக்கும்போது என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்வீங்க?
பதில்: பழைய படங்களில் சண்டைக்காட்சிகள் எடுக்கும்போது இயக்குநர்கள் செட்டுக்கு வரமாட்டாங்களாம். நீங்க கவனிச்சீங்க என்றால், முதல் ஃபைட்டில் இருந்தவங்க தான், கடைசி ஃபைட்டிலும் இருப்பாங்க. காலகட்டம் மாறுது. சண்டைங்கிறது என்ன, ரெகுலராக நடக்கிற விஷயம் கிடையாது. அது அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுக்கிற மாதிரி இருக்கிறதால், சினிமாவில் ரசிக்கப்படுது. சினிமா சண்டைக்காட்சிகளுக்காக பலர் சாமியெல்லாம் கும்பிட்டு, வீட்டில் பேசிட்டு வந்து நடிப்பாங்க. அப்படி அவங்க மெனக்கெடும்போது, நாம் பேப்பரில் மெனக்கெட்டிருக்கணும் இல்லையா. அந்த எமோஷனல். நான் எங்க பாட்டி நினைவாகக் கொடுக்கிறது, நான் ஸ்கூலுக்குப் போகும்போது பத்திரமாக வைச்சிருப்பேன். எனக்கு இன்ஸ்பியர் ஆனது ‘ஊமை விழிகள்’ படத்தில் அருண் பாண்டியன் கீழே வந்ததும் ரோட்டில் ஒரு பைட் இருக்கும். அப்போது வாசிக்கிறவங்க இருப்பாங்க. அப்போது ஒரு ரூபாய் காயினை போட்டுட்டு வாசின்னு சொல்லுவார். அப்போது ஒரு சண்டை நடக்கும். அதைத் தான் நான் என்னோட ஸ்டைலில் பண்ணப்பார்க்கிறேன். சண்டைக்காட்சிகளில் கண்டிப்பாக அடி விழும். அவங்களை பாதுகாப்பாக வைக்கிறது தான் சவால். ஒரு ஹீரோ உடைய பாடி லாங்குவேஜ்க்கு ஏத்த மாதிரி சண்டைக்காட்சிகள் எழுதணும்.
முழுக்க முழுக்க காதல் படம் எடுக்கமுடியுமா?
5 ஆண்டுகளுக்கு வாய்ப்பு இல்லை. நிறைய அட்வான்ஸ் வாங்கி வைச்சிருக்கேன்.
காமிக்காக படம் எடுக்க முடியுமா?
இரும்புக்கை மாயாவி என்கிற, ஒரு பேண்டஸி கதை எழுதி வைச்சிருக்கேன். அப்பப்போ, அதை எடுத்து வைச்சு, ஸ்கிரிப்ட்டை மெருகேற்றுவேன். இப்போதைக்கு LCU(Logesh Kanagaraj Cinematic Universe) படங்களை எடுத்து முடிக்கணும்.
கூலி படம் LCU-வில் வருமா?
இல்லை. Stand Alone தான்.
ரோலாக்ஸ் பற்றி?
ரோலாக்ஸ்க்கு மட்டுமே ஒரு கதை எழுதி, ஒரு தனிப் படமாக பண்ணப்போறேன். என் அடுத்த படம் LCU ஓட PEAK படமாக இருக்கும். என்னுடைய எல்லா நடிகர்களுமே அந்தப் படத்தில் இருப்பாங்க. அதனால் தான் ஒரு பேட்டியில் கூட சொல்லியிருந்தேன். என் லைஃப் செட்டில் என்று'' என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கிறார்.
நன்றி: நீலம் சோசியல் யூட்யூப் சேனல்
டாபிக்ஸ்