நடிகையை கர்ப்பமாக்கி நாசமாக்கிய இயக்குநர்..நாகார்ஜூனா மீது புகார், விடுதலை 2 டப்பிங்! இன்றைய டாப் சினிமா செய்திகள் இதோ
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நடிகையை கர்ப்பமாக்கி நாசமாக்கிய இயக்குநர்..நாகார்ஜூனா மீது புகார், விடுதலை 2 டப்பிங்! இன்றைய டாப் சினிமா செய்திகள் இதோ

நடிகையை கர்ப்பமாக்கி நாசமாக்கிய இயக்குநர்..நாகார்ஜூனா மீது புகார், விடுதலை 2 டப்பிங்! இன்றைய டாப் சினிமா செய்திகள் இதோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 10, 2024 11:00 PM IST

நடிகையை கர்ப்பமாக்கி நாசமாக்கிய இயக்குநர், நாகார்ஜூனா மீது புகார், விடுதலை 2 டப்பிங் பணிகள் தொடக்கம் உள்பட இன்றைய டாப் சினிமா செய்திகள் பற்றி பார்க்கலாம்.

நடிகையை கர்ப்பமாக்கி நாசமாக்கிய இயக்குநர்..நாகார்ஜூனா மீது புகார், விடுதலை 2 டப்பிங்! இன்றைய டாப் சினிமா செய்திகள் இதோ
நடிகையை கர்ப்பமாக்கி நாசமாக்கிய இயக்குநர்..நாகார்ஜூனா மீது புகார், விடுதலை 2 டப்பிங்! இன்றைய டாப் சினிமா செய்திகள் இதோ

இதுதவிர வாழை, பேகுமிடம் வெகு தூரமில்லை உள்பட சில படங்கள் விஜயதசமி ஸ்பெஷலாக ஓடிடியில் வெளியாக இருக்கிறது. அடுத்தடுத்து புதிய ரிலீஸ்கள் இருந்து வரும் நிலையில், தமிழ் சினிமாவில் இன்றைய டாப் சினிமா செய்திகள் பற்றி பார்க்கலாம்.

சென்னையில் ட்ரம்ஸ் இசை விழா

டிரம்ஸ் இசை கலைஞர்கள் கலந்து கொள்ளும் ட்ரம்ஸ் இசை விழா முதல் முறையாக சென்னையில் நடைபெறவுள்ளது. சென்னை ட்ரம்ஸ் பீஸ்ட் 2024 என்ற பெயரில் இந்த இசை நிகழ்ச்சி வரும் 13ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடக்க இருக்கிறது. மூன்று மணி நேரம் நடக்க இருக்கும் இந்த இசை விழாவில் உலக அளவில் புகழ் பெற்ற பல்வேறு இசை கலைஞர்கள் பங்கேற்க உள்ளார்கள்.

விடுதலை 2 டப்பிங் பணிகள் தொடக்கம்

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்து வரும் படம் விடுதலை 2. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து விடுதலை 2 படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. விஜய் சேதுபதி, சூரி தொடர்பான காட்சிகள் டப்பிங் செய்யப்பட்டு வருகின்றன.

நாகார்ஜூனா மீது வழக்குப்பதிவு

ஹைதராபாத்தில் தும்மிடி குண்டா பகுதியில் என் கன்வென்ஷன் சென்டர் என்ற பெயரில் திருமணம், சுப நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்கத்தை கட்டியுள்ளார் நடிகர் நாகார்ஜூனா. இந்த அரங்கம் நீர்பாசன ஏரியை ஆக்கிரமித்து கட்டி இருப்பதாக ஜனம் கோசம் மானசாக்சி என்ற அறக்கட்டளை அமைப்பு சார்பில் மாதாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் நாகார்ஜூனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

சென்சார் செய்யப்பட்ட விமலின் சார்

நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல், சரவணன் உள்பட பலர் நடித்திருக்கும் படம் சார். படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகியிருக்கும் நிலையில் படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

இதையடுத்து படத்தை பார்த்த சென்சார் குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதன்படி படம் வரும் 18ஆம் தேதி திரைக்கு வருகிறது.

கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த புதிய வெப் சீரிஸ் ட்ரெய்லர்

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஸ்னேஸ் அண்ட் லேடர்ஸ் என்ற பெயரில் புதிய வெப்சீரிஸை தயாரித்துள்ளார். இதில் நவீன் சந்திரா, நந்தா, மனோஜ் பாரதிராஜா உள்பட பலரும் நடித்துள்ளார்கள். பரத் முரளிதரன், அசோக் வீரப்பன், கமலா அல்கிம்ஸ் ஆகியோர் இந்த வெப்சீரிஸை இயக்கியுள்ளார்கள்.

பள்ளி மாணவர்கள் நான்கு பேரின் சாகச பயணத்தில் விபரீதம், அதன் பின்னணியில் இருக்கும் பிரச்னைகளை கூறும் விதமாக அமைந்திருக்கும் இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

பண உதவி கேட்ட ரசிகரை நெகிழ வைத்த ஜி.வி. பிரகாஷ்

இசையமைப்பாளர், நடிகரான ஜி.வி. பிரகாஷ் குமாரிடம் அவரது ரசிகர் ஒருவர், அவரை டேக் செய்து தனக்கு அவசரமாக ரூ. 1000 தேவைப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்து கடந்து செல்லாமல் அடுத்த சில நிமிடங்களில் அந்த நபருக்கு ரூ. 1500 அனுப்பியுள்ளார் ஜி.வி. பிரகாஷ்குமார். இதற்கு நன்றி கூறிய அந்த ரசிகர் மறுநாளே அந்த பணத்தை அவருக்கு திருப்பி அனுப்பியதோடு, "அவசர நேரத்தில் உதவி செய்ததற்கு மிகவும் நன்றி. இந்த உதவியை மறக்க மாட்டேன்" என்றும் கூறியுள்ளார்.

இது குறித்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்த நிலையில், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

 

நடிகையை கர்ப்பமாக்கி நாசமாக்கிய இயக்குநர்

நடிகை ஒருவரை கர்ப்பமாக்கி வாழ்க்கையை நாசம் செய்த இயக்குநர் பற்றி எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை பூனம் கவுர். இந்த விவகாரத்தில் தெலுங்கு நடிகர் சங்கம் எப்போ நடவடிக்கை எடுப்பார்கள் என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார்.

முன்னதாக, தெலுங்கு சினிமா இயக்குநர் திரிவிக்ரம் சீனிவாஸ் மீது பல்முறை குற்றச்சாட்டை முன் வைத்துள்ள பூனம் கவுர், அவர் மீது நடிகர் சங்கத்தில் அளித்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். பூனம் கவுர் என்ன புகார் அளித்துள்ளார், பாதிக்கப்பட்ட நடிகை யார் என்பதை தெளிவாக குறிப்பிடவில்லை.

ஒரே திரையரங்கில் வேட்டையன் பார்த்த தனுஷ், ஐஸ்வர்யா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் படத்தை நடிகர் தனுஷ், அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் ஒரே திரையரங்கில் பார்த்து ரசித்துள்ளனர். இதுதொடர்பான விடியோக்கள் வைரலாகியுள்ளன.

நட்சத்திர தம்பதிகளாக இருந்த இவர்கள் விவாகரத்து மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்த மனு மீதான விசாரணையில் ஆஜர் ஆகாத நிலையில் வழக்கின் விசாரணை அக்டோபர் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

தி கோட் இறுதி வசூல் அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியான தி கோட் திரைப்படம் இதுவரை உலக அளவில் ரூ. 455 கோடி வசூலித்திருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கழுதை - பீட்டா கண்டனம்

ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 18ல் கழுதை ஒன்றை பராமரிக்க வேண்டும் என போட்டியாளர்களுக்கு டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதை பீட்டா கண்டித்துள்ளது.

இதுதொடர்பாக பீட்டா சார்பில் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், "பிக்பாஸ் வீட்டுக்குள் விலங்குகளை அடைத்து வைத்திருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இது வருத்தமளிக்கும் செயல். ஒரு விலங்கை தங்களின் நிகழ்ச்சியின் விளம்பரத்துக்காகவும் அதை காமெடி பொருளாகவும் பயன்படுத்திக் கொள்வது சரியானது அல்ல.

இனி பொழுதுபோக்குக்காக விலங்குகளை பயன்படுத்துவதை பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுத்த வேண்டும்" என பீட்டா அமைப்பு, பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளரான நடிகர் சல்மான் கானிடம் அறிவுறுத்தியுள்ளது.

கதையின் நாயகனாக மீண்டும் நடிக்கும் மிஷ்கின்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருந்து வரும் மிஷ்கின் பல படங்களில் நடிகராகவும் ஜொலித்துள்ளார். இதையடுத்து ‘ஓல்ட் இஸ் கோல்ட்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ‘ரைட்டர்’ பட இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப்பின் உதவி இயக்குநர் கோகுல் இயக்குகிறார். இந்தப் படத்தின் மூலம் மிஷ்கின் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் கதாநாயகனாக வலம் வர உள்ளார்.

 

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.