தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  R.sundarrajan: விடாமுயற்சியால் வெள்ளிவிழா படங்களை கொடுத்த நாயகன்

R.Sundarrajan: விடாமுயற்சியால் வெள்ளிவிழா படங்களை கொடுத்த நாயகன்

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 29, 2023 05:00 AM IST

இயக்குனர் மற்றும் நடிகர் ஆர் சுந்தர்ராஜனின் 73 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன்
இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன்

ட்ரெண்டிங் செய்திகள்

அப்படி தமிழ் சினிமாவின் அதிக அளவிலான வெள்ளி விழா படங்களை கொடுத்த இயக்குனர்களில் ஒருவர்தான் ஆர்.சுந்தர்ராஜன். இப்போது இருக்கக்கூடிய நடிகர்களும் திறமைகளோடு இருக்கின்றனர் ஆனால். தமிழ் சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து 60, 80 களில் அனைவரும் அனைத்து விதமான கலவைகளையும் கற்றுத் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

இயக்குனராக மட்டுமல்லாமல் சுந்தர்ராஜன் எழுத்தாளர், பாடலாசிரியர், பாடகர், சிறந்த நடிகர், என பன்முகத் திறமைகளை கொண்டவர். பயணங்கள் முடிவதில்லை, மெல்ல திறந்தது கதவு, வைதேகி காத்திருந்தால், அம்மன் கோயில் கிழக்காலே என பல்வேறு விதமான வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர்.

தமிழ் சினிமாவில் 1980 காலகட்டங்களில் மிகவும் முன்னணி நடிகராக மோகன் இருந்து வந்தார். பாடல்களை வைத்து மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்து விட்டார் மோகன் அதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது இளையராஜாவின் இசை.

அப்படி உச்சத்தில் இருந்த மோகனை வைத்து சுந்தர்ராஜன் பல படங்களை இயக்கியுள்ளார். பயணங்கள் முடிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக தடம் பதித்தார் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்ற 175 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி விழா கொண்டாடியது இந்த திரைப்படம்.

குங்குமச்சிமிழ், நான் பாடும் பாடல், சரணாலயம், மெல்ல திறந்தது கதவு என பல வெள்ளிவிழா திரைப்படங்களில் இவர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர். அதற்குப் பிறகு விஜயகாந்த் பக்கம் தனது திசையை திருப்பினார் சுந்தர்ராஜன்.

மோகனைப் போலவே ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு விதமான வெற்றி படங்களை கொடுத்து முன்னணி ஹீரோக்களில் ஒருவராக விஜயகாந்த் திகழ்ந்து வந்தார். வைதேகி காத்திருந்தாள் என்ற கதையை கையில் வைத்துக் கொண்டு பல்வேறு சிக்கலுக்கு பிறகு விஜயகாந்த் தான் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர்களை ஒப்புக்கொள்ள வைத்து இந்த திரைப்படத்தை எடுத்து மிகப்பெரிய வெள்ளிவிழா கொடுத்தார் சுந்தர்ராஜன்.

இதுவரை பார்க்காத விஜயகாந்தை வைதேகி காத்திருந்தாள் என்ற திரைப்படத்தில் மிகவும் அமைதியான கதாபாத்திரமாக மக்கள் கண்டு களித்து மிகப்பெரிய வசூல் சாதனையை கொடுத்தனர். இது ஒரு புறம் இருக்க வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் உருவானது குறித்து மிகப்பெரிய கதை இருப்பதாக கூறப்படுகிறது.

இளையராஜா தன்னிடம் ஏழு டியுன்கள் இருப்பதாகவும் அதற்காக ஒரு கதை யாராவது எழுத முடியுமா என கேட்டுள்ளார். ஏன் முடியாது மொத்த பாடல்களையும் அந்த படத்திலேயே வைத்து விடலாம் என சுந்தர்ராஜன் எழுதிய திரைப்படம் தான் வைதேகி காத்திருந்தாள் எனக் கூறப்படுகிறது.

அடுத்த திரைப்படம் அம்மன் கோயில் கிழக்காலே. வைதேகி காத்திருந்தாள் வெற்றிக்கு பிறகு இருவரும் கூட்டணி சேர்ந்து உருவான திரைப்படம் இது. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை செய்தது. விஜயகாந்துக்கு சிறந்த நடிகர் என விருது கிடைத்தது.

இந்த அனைத்து திரைப்படத்திற்கும் இசையமைத்தது இளையராஜா தான் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. மிகப்பெரிய இயக்குனராக வெற்றி பெற்ற பிறகும் நடிப்பில் இறங்கினார் சுந்தர்ராஜன். துணை கதாபாத்திரங்களாக நடித்தாலும் தான் இருக்கும் இடத்தை சரியாக நிரப்பி விடுவார் ஏனென்றால் இயக்குனர் அல்லவா.

இயக்குனராக இருக்கும் பலர் கேமரா முன்பு நின்று நடிப்பது கிடையாது ஒரு சிலர் மட்டுமே தங்களது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகின்றனர். அந்த வகையில் அனைத்து விதமான கலைகளிலும் திறமை பெற்றுவராக விளங்கி வருகிறார் சுந்தர்ராஜன்.

தற்போது சின்னத்திரையிலும் நடித்து கலையில் பயணித்துக் கொண்டே இருக்கின்றார். சுந்தர்ராஜன் இன்று தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தலைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அனைத்து கலைஞர்களும் வாழ்த்துக்குறியவர்கள் தான்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்