Sasikumar: தளபதி டைட்டில்.."மக்களுக்கு தளபதியா இருக்க விரும்புறேன்" - பாகுபலி முன்னரே விஜய் நடிக்க இருந்த வரலாற்று படம்
தளபதி டைட்டில் வைக்கப்பட்டு பாகுபலி முன்னரே விஜய் நடிக்க இருந்த வரலாற்று படம் குறித்து நடிகரும், இயக்குநராமான சசிக்குமார் வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் இடம்பிடித்த "மக்களுக்கு தளபதியா இருக்க விரும்புறேன்" என்ற பஞ்ச் விஜய்க்கு மிகவும் பிடித்ததாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சுப்பிரமணியபுரம் படம் மூலம் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளராக அறிமுகமானவர் சசிக்குமார். இதன் பின்னர் ஈசன் என்ற படத்தை அவர் இயக்குநார். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சசிக்கும் கிராமத்து பின்னணியினால கதைகளில் நடித்து வருகிறார்.
சசிக்குமார் நடிப்பில் கடந்த வாரம் வெளியான புதிய படமாக நந்தன் உள்ளது. ரசிகர்களை கவர்ந்த இந்த படம் விமர்சக ரீதியாகவும் பாராட்டை பெற்றுள்ளது. படத்தில் சசிக்குமார் தாழ்ந்த சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவராக தோன்ற அதனால் அவர் சந்திக்கும் பிரச்னைகள் படத்தின் கதையாக அமைந்துள்ளது.
சசிக்குமார் நடிப்பில் பிசியாக இருந்து வந்த காலகட்டத்தில், தளபதி விஜய்யை வைத்து அவர் புதிய படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து விஜய்யை வைத்து அவர் இயக்குவதாக இருந்த படம் குறித்து டூரிங் டாக்கிஸ் என்ற பிரபல யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
அதில் விஜய்யை வைத்து வரலாற்று படம் இயக்க முயற்சித்ததாகவும், அது நடக்காமல் போனது பற்றி பின்னணி கதையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
போலீசார் ஆபிசர் கதைக்கு நோ சொன்ன விஜய்
பட்ஜெட் பிரச்னை காரணமாக விஜய்யை வைத்து நான் இயக்க இருந்த வரலாற்று படம் ஆரம்பிக்கவில்லை. விஜய்க்கு நான் வேறொரு கதையை சொல்ல போனேன். அப்போது எனக்கான கதை சொல்லாமல், நீங்கள் அடுத்த செய்யலாம்ன்னு இருக்குற கதையை சொல்ல சொன்னார். அது ஒரு வரலாற்று கதை
நான் அவருக்கு போலீஸ் ஆபிசர் கதை வைத்திருந்தேன். ஆனால் விஜய் கேட்டுக்கொண்டதால் அந்த வரலாற்று கதையை சொன்னேன். அது எழுத்தாளர் சு. வெங்கடேசனின் கதை. முழுவதுமாக கேட்டதும் விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டது.
இந்த சூழ்நிலையில் இந்த வரலாற்று கதைக்ககாக ஹைதராபாத்தில் லொக்கேஷன்களை கூட பார்த்தோம். படத்துக்கான பட்ஜெட் விஷயத்தை பார்த்தோம். சிஜி, விஷுவல் எபக்ட்ஸ் என ரூ. 90 கோடிக்கு மேல் எகிறியது. அப்போது விஜய்யின் மார்கெட் மற்றும் அந்த காலகட்டத்தில் இவ்வளவு பெரிய பட்ஜெட்டுக்கு யோசித்தோம். இதனால் படமும் தொடங்கவில்லை.
பின்னர் விஜய்க்கு கத்தி ரிலீசாகி அவரது மர்க்கெட் வேற லெவலுக்கு சென்றது. ஆனாலும் விஜய்யுடன் தொடர்பில் இருந்தேன். இந்த படமும் வேறு தயாரிப்பாளரை வைத்து செய்யாலாம் என்று அவரும் கூறினார்.
தளபதி டைட்டில், விஜய்க்கு பிடித்த பஞ்ச் வசனம்
வரலாற்று படம் ரொம்பவும் தாமதமானதால், ஏற்கனவே அவருக்காக வைத்திருந்த போலீஸ் கதையை படமாக்கலாம் என்றேன். ஏன் அந்த கதை மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? என்று என்னிடம் கேட்டார். நாம் இருவரும் இணைந்து இந்த கதையைத்தான் செய்ய வேண்டும் என்றார். ஏனென்றால் விஜய்க்கு சொன்ன வரலாற்று கதை சூப்பர் ஹீரோ கதையாக இருந்தது.
மக்கள் நேசிக்கிற, மக்கள் கொண்டாடப்படுகிற கேரக்ராக இருந்தது. படத்துக்கு டைட்டிலே தளபதி என்றுதான் வைத்திருந்தேன். அதில் இடம்பிடித்த பஞ்ச் வசனம் கூட விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தது. "நான் என்னைக்கும் மக்களுக்கு மன்னனாக இருக்க விரும்பல. தளபதியாக இருக்க விரும்புறேன்".
இந்த கதைக்கு முன்னர் மற்றொரு வரலாற்று படமும் செய்தார். அந்த படம் முடிவதற்கு முன்னரே மோசமான அனுபவமாக அமைந்தது. இப்போதைக்கு இதுபோன்ற கதை வேண்டாம். அடுத்தடுத்து இதுபோன்ற கதைகள் வேண்டாம், எதிர்காலத்தில் செய்யலாம் என்று சொன்னார். இதுதான் அவருடன் எனக்கு நடந்த கடைசி சந்திப்பு."
இவ்வாறு சசிக்குமார் பேசியுள்ளார்.
சசிக்குமார் இதுவரை இரண்டு படங்கள் மட்டும் இயக்கியுள்ளார். கிராமத்து ஹீரோவாக கலக்கி வரும் இவர் தொடர்ந்து சினிமாக்களில் நடித்து வருகிறார். விரைவில் புதிய படமொன்ற இயக்கவும் அவர் திட்டமிட்டுள்ளாராம்.