தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay And Mohanlal: மோகன்லாலுடன் உணவு சாப்பிட மறுப்பு!விஜய்யிடம் இருக்கும் அந்த பழக்கம் - ஜில்லா நேரத்தில் நடந்த சம்பவம்

Vijay and Mohanlal: மோகன்லாலுடன் உணவு சாப்பிட மறுப்பு!விஜய்யிடம் இருக்கும் அந்த பழக்கம் - ஜில்லா நேரத்தில் நடந்த சம்பவம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 28, 2024 10:00 PM IST

மோகன்லாலுடன் உணவு சாப்பிட மறுப்பு தெரிவித்த விஜய், அவருக்கு உணவு பறிமாறியுள்ளார். ஜில்லா நேரத்தில் நடந்த சம்பவம் குறித்து நடிகர் ஜோ மல்லூரி வெளிப்படுத்தியுள்ளார்.

மோகன்லாலுடன் உணவு சாப்பிட மறுப்பு தெரிவித்த விஜய், ஜில்லா நேரத்தில் நடந்த சம்பவம்
மோகன்லாலுடன் உணவு சாப்பிட மறுப்பு தெரிவித்த விஜய், ஜில்லா நேரத்தில் நடந்த சம்பவம்

தளபதி விஜய் - மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் இணைந்து நடித்து 2014இல் வெளியான ஜில்லா திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. தமிழில் மட்டுமல்லாமல், மலையாளத்திலும் படம் மிக பெரிய வரவேற்பை பெற்றது.

பொங்கல் வெளியீடாக ஜில்லா திரைப்படம், அஜித்தின் வீரம் படத்துடன் இணைந்து வெளியானது.

ஜில்லா படத்தில் பிரபல எழுத்தாளரும், நடிகருமான ஜோ மல்லூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து படப்பிடிப்பின்போது போது நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

விஜய் விருந்தில் மோகன்லால்

பிரபல ஊடகமான நியூஸ் 18க்கு ஜோ மல்லூரி அளித்த பேட்டியில், "தன்னையும், மோகன் லால் குடும்பத்தினரையும், இரவு விருந்துக்கு தனது வீட்டுக்கு அழைத்திருந்தார் நடிகர் விஜய்.

ட்ரெண்டிங் செய்திகள்

நாங்கள் இரவு 7 மணியளவில் விஜய் வீட்டுக்கு சென்றிருந்தோம். அவரது மனைவி, இரண்டு பிள்ளைகள் எங்களை வரவேற்று பேசினார்கள். அப்போது சாப்பிடுவதற்கு டைனிங் டேபிளில் அமர்ந்தவுடன் விருந்தினர்களாகிய எங்களுக்கு மட்டும் உணவு பரிமாறப்பட்டது.

இதைக்கண்ட மோகன் லால் தன்னுடன் இணைந்து சாப்பிடுமாறு விஜய்க்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அதற்கு அன்பாக மறுப்பு தெரிவித்ததோடு, மோகன்லாலுக்கு தன் கையால் உணவை பரிமாறினார்.

விஜய் எப்போதும் தனது விருந்தினர் மீது அக்கறை செலுத்தும் பழக்கம் கொண்டவராக இருந்துள்ளார். இந்த சம்பவத்துக்கு பின்னர் "நீங்கள் சாப்பிடுங்கள் விஜய். எல்லோரும் சாப்பிடும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டாம்" என எப்போதும் அவரிடம் கூறுவேன் என்றார்.

எனவே விஜய் தான் சாப்பிடுவதை விட மற்றவர்களுக்கு உணவு பரிமாறி, அக்கறையுடன் உபசரிப்பு செய்வதில் நாட்டம் அதிகம் என்பதை நடிகரும், எழுத்தாளருமான ஜோ மல்லூரி தெரிவித்துள்ளார்.

ஜில்லா பட சமயத்தில் விஜய் - மோகன் லால் படப்பிடிப்பில் இல்லாமல் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் அப்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

தந்தை மகனாக விஜய் - மோகன் லால்

மலையாளத்தில் டாப் ஹீரோவாக இருந்தாலும், ஜில்லா படத்தில் விஜய்யின் தந்தை வேடத்தில் நடித்திருப்பார் மோகன் லால். இருவருக்கு இணைந்து ஓபனிங் பாடலும் படத்தில் இடம்பிடித்திருந்தது. இந்த பாடலில் விஜய் - மோகன் லால் இணைந்து நடனத்தில் மாஸ் காட்டியிருப்பார்கள். 

அத்துடன் படத்தில் விஜய் - மோகன் லால் இடையே பாசம், மோதல் என எமோஷன்களை வெளிப்படுத்தும் விதமாக இருந்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருப்பார். நிவேதா தாமஸ்,  மகத் ராகவேந்திரா, சூரி, சம்பத், ரவி மாரியா, பிரதீப் ராவத் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். படத்தை ஆர்.டி. நேசன் இயக்கியிருப்பார். 

செந்தூர பாண்டி படத்தில் விஜயகாந்துடன் இணைந்து நடித்த பின்னர் ஒரு மாஸ் ஹீரோவான மோகன்லாலுடன் இணைந்து நடித்த படமாக ஜில்லா அமைந்திருந்தது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.