தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dhoni Entertainment:தோனியின் முதல் தமிழ் படம்;வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Dhoni Entertainment:தோனியின் முதல் தமிழ் படம்;வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 27, 2023 12:39 PM IST

தோனி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் நேரடி தமிழ் படம் குறித்தானா அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகியுள்ளது

தோனி,ஹரிஷ் கல்யாண், இவானா
தோனி,ஹரிஷ் கல்யாண், இவானா

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் அவர் சினிமாத்துறையிலும் தயாரிப்பாளராக கால்பதிக்க போவதாக செய்திகள் உலா வந்தன. பின்னாளில், அது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் தோனி தரப்பில் இருந்தே வந்தது. அதன் படி , 'தோனி எண்டர்டென்மெண்ட்' என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ள தோனி 'தி ரோர் ஆஃப் தி லயன்' என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். இந்த நிலையில் நேரடி தமிழ் படம் ஒன்றை தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் நேற்றைய தினம் இந்தப்படம் குறித்து அப்டேட் இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

 

 

அந்த அப்டேட்டின் படி அந்தப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'Let's Get Married' என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப்படத்தை இயக்குநர் ரமேஷ் தமிழ் மணி எழுதி இயக்குகிறார். இந்தப்படத்தின் கதாநாயகனாக ‘பியார் பிரேமா காதல்’ படம் மூலம் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அண்மையில் வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்ற  ‘லவ் டுடே’ படத்தில் நடித்த நடிகை இவானா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர்களுடன் நடிகர் யோகி பாபு, நடிகை நதியா உள்ளிட்டோரும் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்