Ilaiyaraaja: ‘ஒரே ஒரு ராஜா சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்’: இளையராஜா பயோபிக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து சொன்ன தனுஷ்
Ilaiyaraaja: இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளை ஒட்டி, இளையராஜா பயோபிக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

Ilaiyaraaja: தமிழ் சினிமாவின் மூத்த இசையமைப்பாளர், இளையராஜா. அன்றைய பிரிக்கப்படாத மதுரை மாவட்டத்தில் (தற்போது தேனி மாவட்டம்) உள்ள பண்ணைப்புரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர். 'அன்னக்கிளி' என்னும் தமிழ்ப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, தமிழ் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி எனப்பல்வேறு மொழிகளில் இசையமைத்து ஹிட்டடித்தவர். இவரது 1000-ஆவது படமாக, இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த ’தாரை தப்பட்டை’ இருந்தது.
இந்தியா சினிமா இசையின் அடையாளமாக பார்க்கப்படும் இளையராஜாவின் வாழ்க்கை படம் சமீபத்தில் உருவாவதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் நடிகர் தனுஷ், இளையராஜாவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தப்படத்தை ‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’, ‘கேப்டன் மில்லர்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார். இந்தப்படம் தொடர்பான துவக்க விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், வெற்றிமாறன், இளையராஜா, தனுஷ் உள்ளிட்ட பல முக்கியப் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
