தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Velu Prabhakaran On Ilayaraja: ‘ராஜா மீது ராட்சத வன்மம் ஏன்? ; அவர் காசே வாங்கம..’ -இளையராஜாவின் இன்னொரு பக்கம்!

Velu prabhakaran on Ilayaraja: ‘ராஜா மீது ராட்சத வன்மம் ஏன்? ; அவர் காசே வாங்கம..’ -இளையராஜாவின் இன்னொரு பக்கம்!

Kalyani Pandiyan S HT Tamil
May 22, 2024 07:30 AM IST

Velu prabhakaran on Ilayaraja: வெளிப்படையாக இருப்பவர்கள் மீது. பலவிதமான குற்றச்சாட்டுகளை இந்த சமூகம் வைத்திருக்கிறது. அவர்கள் மீது கடுமையான, இரக்கமே இல்லாத பல நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது - இளையராஜாவின் இன்னொரு பக்கம்!

Velu prabhakaran on Ilayaraja: ‘ராஜா மீது ராட்சத வன்மம் ஏன்? ; அவர் காசே வாங்கம..’  -இளையராஜாவின் இன்னொரு பக்கம்!
Velu prabhakaran on Ilayaraja: ‘ராஜா மீது ராட்சத வன்மம் ஏன்? ; அவர் காசே வாங்கம..’ -இளையராஜாவின் இன்னொரு பக்கம்!

ட்ரெண்டிங் செய்திகள்

இளையராஜாவின் மீது ஏன் இவ்வளவு வன்மம்?

 

அவர் பேசும் போது, “ இளையராஜாவிடம் இருந்து நீங்கள் ஒரு முறை வெறுப்பை சம்பாதித்து விட்டால், உங்களுக்கு மீண்டும் மன்னிப்பு கிடைக்காது. ஆம், மன்னிப்பு கிடைப்பது மிக மிகக் கடினம். இந்த சினிமாக்காரர்கள் தன்னுடைய புகழை, தங்களின் ஏதோ ஒரு தேவைக்காக பயன்படுத்திக் கொள்வார்கள்.  இங்கிருக்கும் பல நடிகர்கள், இயக்குநர்கள் தன்னுடைய புகழை வைத்து, நிலம் வாங்கி இருக்கிறார்கள் அல்லது ஏதோ ஒரு வழக்கிலிருந்து தப்பித்து இருக்கிறார்கள். 

இளையராஜா தன்னுடைய புகழை எதற்காகவும் பயன்படுத்தியது கிடையாது.

 

ஆனால், இளையராஜா தன்னுடைய புகழை எதற்காகவும் பயன்படுத்தியது கிடையாது. வரலாறு முழுக்கவே நல்லவர்கள் மீது உண்மையை பேசுபவர்கள் மீது, வெளிப்படையாக இருப்பவர்கள் மீது பலவிதமான குற்றச்சாட்டுகளை இந்த சமூகம் வைத்திருக்கிறது. அவர்கள் மீது கடுமையான, இரக்கமே இல்லாத பல நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது. அப்படித்தான் இளையராஜா மீதும் வன்மம் கற்பிக்கப்படுகிறது. அம்பேத்கர் பெரியார் உள்ளிட்டோர் சொன்னதை அவர் நடைமுறைப்படுத்தி வருகிறார்.

பெரிதாக உதவி செய்ய மாட்டார்:

 

அவர் யாருக்கும் பெரிதாக உதவி செய்ய மாட்டார் என்று விமர்சனம் இருப்பதாக சொல்கிறீர்கள். அவர் ஊரில் இருந்து இங்கு வந்து, வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது, தான் மட்டுமில்லாமல் தன்னுடைய குடும்பத்தினரையும் வளர்த்தார். அவர்களின் கிளைகளை பெருமரமாக வளர்வதற்கு உதவி இருக்கிறார். அது எவ்வளவு பெரிய விஷயம். அது மிகப்பெரிய பண்பு. எடுத்துக்காட்டாக என்னையே நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்னுடைய சகோதரனுக்கு 200 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஆனால் எனக்கு சென்னையில் வாழ்வதற்கு சொந்தமாக வீடு கூட இல்லை இரண்டு சீரியல்களை எடுத்து சம்பாதித்து கொண்டுர் இருக்கிறான்.

இளையராஜா காசே வாங்கிக் கொள்ளாமல் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.

 

ஆனால் எனக்கு இளையராஜா காசே வாங்கிக் கொள்ளாமல் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு முறையும், இந்த முறை எப்படியாவது, அவருக்கு தொகையை கொடுத்து விட வேண்டும் என்று நினைத்துதான் சொல்வேன். ஆனால் கடைசி நேரத்தில், ஏதாவது பிரச்சனை வந்துவிடும். அதை நான் அவரிடம் சொல்வேன். அவர் உன்னை வைத்து என்ன செய்வது என்று சொல்லி இசையமைப்பார். அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர் இளையராஜா” என்று பேசினார். 

குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

எங்களைப்பற்றி:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்