48 Years Of Annakili: இளையராஜாவை கண்டெடுத்த படம்.. ஒரு பெண்ணின் காதலை வெளிப்படையாகச் சொன்ன முதல் படம் 'அன்னக்கிளி’-a special article related to the 48th anniversary of the release of the movie annakili - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  48 Years Of Annakili: இளையராஜாவை கண்டெடுத்த படம்.. ஒரு பெண்ணின் காதலை வெளிப்படையாகச் சொன்ன முதல் படம் 'அன்னக்கிளி’

48 Years Of Annakili: இளையராஜாவை கண்டெடுத்த படம்.. ஒரு பெண்ணின் காதலை வெளிப்படையாகச் சொன்ன முதல் படம் 'அன்னக்கிளி’

Marimuthu M HT Tamil
May 14, 2024 10:29 AM IST

48 Years Of Annakili: அன்னக்கிளி திரைப்படம் வெளியாகி 48 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இப்படத்தின்மூலம் இளையராஜா இசையமைப்பாளர் ஆனார். இப்படம் குறித்து பேசுகிறது, இந்த சிறப்புக் கட்டுரை..

48 Years Of Annakili: இளையராஜாவை கண்டெடுத்த படம்.. ஒரு பெண்ணின் காதலை வெளிப்படையாகச் சொன்ன படம் 'அன்னக்கிளி’
48 Years Of Annakili: இளையராஜாவை கண்டெடுத்த படம்.. ஒரு பெண்ணின் காதலை வெளிப்படையாகச் சொன்ன படம் 'அன்னக்கிளி’

இப்படம், பிளாக் அண்ட் வொயிட் திரைப்படமாக வெளியாகி இருந்தாலும், தமிழுக்கான சிறந்த படமாக ஃபிலிம்பேர் விருது பெற்றது. மேலும், இப்படம் தெலுங்கில் ‘ ராமசிலக்கா’ என ரீமேக் செய்யப்பட்டது. இப்படம் குறித்துப் பேச நம்மிடம் ஏராளமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம். 

அன்னக்கிளி திரைப்படத்தின் கதை என்ன? 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே இருக்கும் அழகிய கிராமம் தெங்குமரஹாடா. இப்பகுதியில் வெகுநாட்களாக வசித்து வருபவர், அன்னக்கிளி. அவ்வூரின் பள்ளிக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க, தனது அம்மாவுடன் வந்து தங்குகிறார், தியாகராஜன். தியாகராஜன் மீது அன்னக்கிளி காதல் வருகிறது. ஆனால், தியாகராஜனுக்கு அம்மாவுக்கும் தங்கைக்கும் மாதமாதம் பொருளாதாரச் செலவுகளுக்குப் பணம்தரவேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. இதனால், அன்னக்கிளியின் காதலை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, அவ்வூரில் வசதியாக இருக்கும் செல்வந்தரின் மகளும் அன்னகிளியின் தோழியுமான சுமதி மணமுடிக்கிறார், தியாகராஜன். அதேபோல், அப்பகுதியைச் சேர்ந்த திரையரங்கு உரிமையாளர் அழகப்பன் என்பவர், அன்னக்கிளியை ஒரு தலையாக காதலித்து, அவரிடம் தன் கல்யாணம் செய்யும் எண்ணத்தை வெளிப்படுத்துகிறாள். அதற்கு அன்னக்கிளி மறுத்துவிடுகிறார். பின், அன்னக்கிளியை திருமணம் செய்யமுடியாமல் போனதற்கு அவரைப் பழிவாங்க நினைத்து, தியாகராஜனின் மகனைக் கடத்தி அதைக் கடத்தியது அன்னக்கிளி தான் கடத்தியது என வதந்தி பரப்ப முயற்சிக்கிறார். இறுதியாக, அங்கு நடக்கும் களேபரங்களுக்கு இடையே, திரையரங்க கட்டடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தியாகராஜனின் மகனை அன்னக்கிளி காப்பாற்றி வெளியில் கொண்டு வருகிறார்.

பின், சிறுவனை அவரது தந்தையான தியாகராஜனின் கையில் ஒப்படைத்துவிட்டு மரணம் அடைந்துவிடுகிறார். அன்னக்கிளியின் தியாகத்தை ஊர் மக்கள் புரிந்துகொள்கின்றனர், குறிப்பாக தியாகராஜனும் அறிந்து வருந்துகிறார். 

அன்னக்கிளி படத்தில் நடித்தவர்கள் விவரம்:

இப்படத்தில் தியாகராஜனாக நடிகர் சிவகுமார் நடித்திருந்தார். அன்னக்கிளியாக சுஜாதா நடித்திருந்தார். வடிவேல் அம்பாளாக எஸ்.வி.சுப்பையாவும், மகுடாபதியாக ஸ்ரீகாந்தும் நடித்துள்ளனர். மேலும், அழகப்பனாக தேங்காய் ஸ்ரீனிவாசனும், அழகப்பனின் வலது கை மனிதனாக வெண்ணிற ஆடைமூர்த்தி நடித்திருந்தார். சுமதியாக படாபட் ஜெயலட்சுமியும், தியாகராஜனின் அம்மாவாக எஸ்.என்.லட்சுமியும் நடித்திருந்தனர்.

அன்னக்கிளி படத்தை தூக்கி நிறுத்திய இளையராஜாவின் இசை:

இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார், இளையராஜா. இப்படத்தில் இந்திய மற்றும் மேற்கத்திய இசை இரண்டையுமே கலந்து, தமிழ் மண்ணுக்கு ஏற்ப படைத்திருப்பார், இளையராஜா.

இப்பாடல்கள் அனைத்தையும் பஞ்சு அருணாச்சலமே எழுதியிருந்தார். குறிப்பாக, ’அன்னக்கிளி உன்னை தேடுதே ஆறு வருஷம் ஒரு வருஷம், மச்சானை பார்த்தீங்களா மலைவாழைத் தோப்புக்குள்ள, அடி ராக்காயி, சொந்தம் இல்லை’ ஆகியப் பாடல்கள் வெளியாகி ஹிட்டடித்து, இளையராஜாவுக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.

1970களில் ஆண் மீதான பெண்ணின் காதலையும், அதற்காகவே வாழ்ந்த மறைந்த ஒரு பெண்ணின் கதையையும் வெளிப்படையாகச் சொன்ன படம், ‘அன்னக்கிளி’. அக்காலத்தில் கிளாஸிக் வகையிலான படங்களில் இதுவும் ஒன்று. நேரமிருந்தால் பாருங்கள், பெண்ணின் ஆழமான காதல் புரியும். 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.