நயன்தாரா தனுஷ் இருவரும் ஒரே மேடையில்! எங்கு தெரியுமா? இந்த தயாரிப்பாளர் தான் காரணமா?
நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் ஒரே திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்தான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ் கடந்த சில ஆண்டுகளாகவே பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவர் நடிக்க ஆரம்பித்த நாள் முதல் பல படங்களில் பல நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து இருப்பார். இதன் காரணமாகவே பல நடிக்கைகளுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார். மேலும் இந்த வரிசையில் தற்போது வெளியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண வீடியோவில் அவரது தயாரிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக காப்பிரைட் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
தனுஷ் மீது நயனின் குற்றச்சாட்டு
நயன் விக்கி திருமண வீடியோ ஆவணப்படமாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள நிலையில். இது குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன. முதலில் திருமணம் ஆனதும் இந்த வீடியோ வெளியாகவில்லை. அதற்கும் பல காரணங்களும் கூறப்பட்டு வந்தன. ஆனால் சில நாட்களுக்கு முன் இதன் முன்னோட்டம் வெளியானது. அப்போதில் இருந்து தான் பெரிய சர்ச்சை தொடங்கியது. இதில் இடம் பெற்றுள்ள சில வினாடிகள் நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் மீது காப்புரிமை பிரச்சனை தொடங்கியது.
இது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிற்கு காப்புரிமைக்கு பணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில் ரூ.10 கோடி கேட்டு இருந்தார். மேலும் இது குறித்து நயன்தாரா மிகவும் காட்டமாக பதில் அளித்து இருந்தார். இதற்கு வெறும் 3 நொடி வீடியோவிற்கு 10 கோடி கேட்பதா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ் பலர் நயன்தாராவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஒரே மேடையில் நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா
மேலும் இன்று தனுஷின் விவாகரத்து வழக்கும் விசாரணைக்கு வந்தது.அவர் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் நேரில் ஆஜராகி இருந்தனர். அவரது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்த போதிலும் சினிமா துறையில் மிகவும் ஆக்டிவாக இயங்கிக் கொண்டிருக்கிறார். இவரது இயக்கத்தில் இந்த ஆண்டு வெளிவந்த ராயன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனை அடுத்து “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்”என்ற படத்தையும் இயக்கி இருந்தார். இப்படமும் இறுதி கட்டப் படபிடிப்பை எட்டியுள்ளது. மேலும் இட்லி கடை என்னும் படத்தினை இயக்கி நடிக்க இருக்கிறார். இப்படத்தில் நித்யா மேனன் இவருடன் இணைந்துள்ளார் .
இந்த படத்தினை தயாரித்துள்ள டவுன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஆகாஷ் பாஸ்கரின் திருமணம் இன்று நடைபெற்றது. இவரது திருமணத்திற்கு நடிகர் தனுஷ் சென்றிருந்தார். மேலும் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் இந்த திருமணத்திற்கு வந்திருந்தனர். நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவியும் இந்த திருமணத்திற்கு வந்திருந்தார். டாக்குமென்டரி படத்தின் காட்சிகளுக்காக காப்பிரைட் பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் தனுஷ் மற்றும் நயன்தாரா இருவரும் சேர்ந்து ஒரே திருமண நிகழ்வில் பங்கேற்றது வைரல் ஆகி உள்ளது. மேலும் இவர்கள் பங்கேற்ற திருமண வீடியோவில் இருவரும் அருகருகே இருக்கும் வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் இருவர் குறித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
டாபிக்ஸ்