Cook With Comali: எனக்கே என்னைப் பாத்தா பெருமையா இருக்கு.. அன்னைக்கு தோத்துட்டேன்.. ஆனா.. பயங்கரமா பேசிய பிரியங்கா!-cook with comali winner priyanka thanks everyone who encourage herself - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cook With Comali: எனக்கே என்னைப் பாத்தா பெருமையா இருக்கு.. அன்னைக்கு தோத்துட்டேன்.. ஆனா.. பயங்கரமா பேசிய பிரியங்கா!

Cook With Comali: எனக்கே என்னைப் பாத்தா பெருமையா இருக்கு.. அன்னைக்கு தோத்துட்டேன்.. ஆனா.. பயங்கரமா பேசிய பிரியங்கா!

Malavica Natarajan HT Tamil
Sep 30, 2024 06:32 PM IST

Cook With Comali: குக் வித் கோமாளி சீசன் 5ன் வின்னரான பிரியங்கா, தன்னை சுற்றி இருப்பவர்களை எப்போதும் சௌகரியமாக உணர வைப்பதால் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் எனக் கூறியுள்ளார்.

Cook With Comali: எனக்கே என்னைப் பாத்தா பெருமையா இருக்கு.. அன்னைக்கு தோத்துட்டேன்.. ஆனா.. பயங்கரமா பேசிய பிரியங்கா!
Cook With Comali: எனக்கே என்னைப் பாத்தா பெருமையா இருக்கு.. அன்னைக்கு தோத்துட்டேன்.. ஆனா.. பயங்கரமா பேசிய பிரியங்கா!

ஆனால், புரொடக்ஷன் கம்பெனியில் நடைபெற்ற கருத்து வேறுபாடு உள்ளிட்ட சில காரணங்களினால், வெங்கடேஷ் பட் உள்ளிட்ட சிலர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகினர். மேலும், குக் வித் கோமாளியை தயாரித்து வந்த நிறுவனமும் விஜய் டிவியை விட்டு வெளியேறியது.

விஜய் டிவியின் முயற்சி

இந்த நிலையில் தான், விஜய் டிவி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த தொடரை நிறுத்தக் கூடாது என வலியுறுத்தி புதிய தயாரிப்பு நிறுவனத்தை இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசனை நடத்தச் சொன்னது. அத்தோடு செஃப் தாமு மற்றும் அவருடன் புதிய நடுவராக மக்களுக்கு மிகவும் பரிட்சையமான மாதம்பட்டி ரங்கராஜை நிகழ்ச்சிக்கு கொண்டு வந்தது. மேலும், கடந்த 4 சீசன்களாக தனியாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த ரக்ஷனுடன் கோமாளியாக பயணித்த மணிமேகலை இணைந்தார்.

இப்படி ஏகப்பட்ட குழப்பங்களுடனும், சரியாக நிகழ்ச்சியை கொண்டு செல்ல முடியுமா என்ற சந்தேகத்திலேயே நிகழ்ச்சி சென்றது. நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் செலுத்திய ஆதிக்கத்தையும், ட்ரெண்டையும் மீண்டும் கொண்டுவர முடியாமல் மாதம்பட்டி ரங்கராஜ், நிகழ்ச்சியில் ஒட்டியும் ஒட்டாமலுமே இருந்தார்.

போட்டியாக வந்த வெங்கடேஷ் பட்

இது இப்படி இருக்க, விஜய் டிவிக்கு போட்டியாக, வெங்கடேஷ் பட் சன் டிவியில் டாப்பு குக்கு டூப்பு குக்கு என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்தார். இந்த நிகழ்ச்சியில், விஜய் டிவியில் கோமாளியாக வந்த சிலரும் இடம் பெற்றனர்.

ஒரே தீமை வைத்துள்ள 2 நிகழ்ச்சிகளில் எதைப் பார்ப்பது என்ற குழப்பத்திலேயே மக்கள் பல நாட்கள் இருந்து வந்தனர். இதற்கிடையில், நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆங்கர் மணிமேகலை மற்றும் பிரியங்காவின் மோதலால் சர்ச்சைக்குள்ளானது.

வெற்றியாளரான பிரியங்கா

இந்த சம்பவம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், பலரும் கூறியது போல பிரியங்காவே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், விஜய் டிவிக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளை மக்கள் கூறி வந்த நிலையில், தனது வெற்றி குறித்து பிரியங்கா நீண்ட நெடிய பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் ஒரு சிக்கனை சரியாக கையாளத் தெரியாததால் நான் தோற்றுப்போனேன். ஆனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கோப்பை என் கையில் இருக்கிறது.

எனக்கு நானே போட்டியாளர்

இந்த நேரத்தில் என்னால், பறப்பது, நடப்பது, நீந்துவது என அனைத்தையும் சமைக்க முடியும் என்று தைரியமாக கூற முடியும். சமையலில் என் திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவிய பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி. தன்னை சுற்றி இருப்பவர்களை எப்போதும் சௌகரியமாக உணர வைப்பதால் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

நான் செய்த உணவுகளை நானே பெரும்பாலான நேரங்களில் சாப்பிட்டு பார்த்ததில்லை. ஆனால் அவற்றை செட்டில் இருந்த நண்பர்கள் பல முறை ருசி பார்த்துள்ளனர். என்னை பலமுறை ஊக்கப்படுத்தி சிறந்த குக்காக மாற்றிய அனைவருக்கும் நன்றி. எனக்கு நான் மட்டுமே போட்டியாளர்.

நன்றி தெரிவித்த பிரியங்கா

எனக்கு கடின உழைப்பை கற்றுக்கொடுத்த எனது குடும்பத்திற்கு நன்றி. நீங்கள் இல்லாமல் என்னால் எதுவுமே செய்ய இயலாது. குக் வித் கோமாளி என்ற இந்த பயணத்தில் என்னை ஊக்குவித்த, ஆதரவளித்த, துணை நின்ற, எனக்காக கண்ணீர் சிந்திய அனைவருக்கும் நன்றி. உங்களை என்னால் முடிந்த எல்லா வழிகளிலும் மகிழ்விப்பேன் எனக் கூறியுள்ளார். இவர் இந்த நீண்ட நெடிய பதிவை சோறு தான் முக்கியம் என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். இவரது இந்தப் பதிவை பலரும் ஷேர் செய்து வைரலாக்கி வருவதுடன், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா- மணிமேகலைக்கு ஏற்பட்ட மோதல் குறித்து பிரியங்கா வெளிப்படையாக ஏன் எதுவும் பேசவில்லை என பலரும் கேள்வி எழப்பி வருகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.