CWC:''வேலையைச் செய்யவிடாமல் தடுத்து.. சுயமரியாதை முக்கியம்’’:குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை சொல்வது என்ன?-host manimegalai quit vijay tv is cooku with comali season 5 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cwc:''வேலையைச் செய்யவிடாமல் தடுத்து.. சுயமரியாதை முக்கியம்’’:குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை சொல்வது என்ன?

CWC:''வேலையைச் செய்யவிடாமல் தடுத்து.. சுயமரியாதை முக்கியம்’’:குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை சொல்வது என்ன?

Marimuthu M HT Tamil
Sep 14, 2024 09:21 PM IST

Cooku With Comali |(CWC):''வேலையைச் செய்யவிடாமல் தடுத்து.. சுயமரியாதை முக்கியம்’’:குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை சொல்வது என்ன?

CWC:''வேலையைச் செய்யவிடாமல் தடுத்து.. சுயமரியாதை முக்கியம்’’:குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை சொல்வது என்ன?
CWC:''வேலையைச் செய்யவிடாமல் தடுத்து.. சுயமரியாதை முக்கியம்’’:குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை சொல்வது என்ன?

இதுதொடர்பாக டிவி தொகுப்பாளினி மணிமேகலை வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ‘’நான் இனிமேல், குக் வித் கோமாளியில் ஒரு பகுதியாக இல்லை.

மிகுந்த நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் நான் எப்பொழுதும் எனது 100% முயற்சிகளையும் கடின உழைப்பையும் குக் வித் கோமாளிக்கு கொடுத்திருக்கிறேன். 2019ஆம் ஆண்டு, நவம்பரில் இருந்து குக் வித் கோமாளி என்னும் ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது இருந்தே என் உழைப்பைத் தந்திருக்கிறேன்.

சுயமரியாதை முக்கியம்: மணிமேகலை:

ஆனால், சுய மரியாதையைவிட முக்கியமானது எதுவுமில்லை! என் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நான் அதைக் கண்டிப்பாகப் பின்பற்றுகிறேன். புகழ், பணம், தொழில், வாய்ப்புகள் அல்லது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. சுய மரியாதை என்று வரும்போது எல்லாமே இரண்டாம் பட்சம்தான். அதனால் நான் குக் வித் கோமாளி சீசன் 5ல் இருந்து விலகுகிறேன்.

இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்தினார். குறிப்பாக தொகுப்பாளராக இருக்கும் ஒருவர் இந்த குக் வித் கோமாளி சீசன் 5ன் படி, நிகழ்ச்சியின் சமையல்காரராக செயல்பட வேண்டும். ஆனால், அவர் அதை அடிக்கடி மறந்து விடுகிறார். வேண்டுமென்றே என்னை வேலையைச் செய்யவிடாமல் தடுத்து, எனது ஆங்கரிங் என்னும் நெறியாள்கையில் குறுக்கிடுகிறார்.

நமது உரிமைகளைக்கேட்பதும், கவலையை எழுப்புவதும்கூட இந்த குக் வித் கோமாளி சீசன் 5ல் குற்றமாகிவிடும். ஆனால், என் மனது எப்போதும் எது சரியானதோ அதற்காக குரல் எழுப்பும். நான் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. பல எதிர்மறை மற்றும் சிலரின் ஆதிக்கம் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் அசல் தன்மையை மறைக்கிறது. இது நான் முன்பு வேலை செய்து மகிழ்ந்த அதே குக் வித் கோமாளி நிகழ்ச்சி அல்ல. எனவே, நான் இனி அதன் பகுதியாக தொடரமாட்டேன்.

15ஆவது ஆண்டாக தொகுப்பாளினி: மணிமேகலை

நான் 2010 முதல் இந்தத் துறையில் இருக்கிறேன். 15ஆவது ஆண்டாக தொகுப்பாளினி பணி செய்துவருகிறேன். ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. ஆனால் இதுபோன்ற முதிர்ச்சியற்ற நடத்தைகளை அனுபவித்ததில்லை. ஆனால், எனக்கு இதைச் செய்த நபருக்கு, நான் இன்னும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மற்றவர்கள் துன்பப்படாமல் இருக்க கடவுள் அவளுக்கு அதிக நிகழ்ச்சிகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கட்டும். வாழு.. வாழவிடு.

மேலும் மக்களே, குக் வித் கோமாளி நிகழ்ச்சியுடன் எங்களுக்குப் பிடித்த, அனைத்து சமையல் நினைவுகளையும் நான் எப்போதும் ரசிப்பேன். குக் வித் கோமாளி சீசன் 1 முதல் தற்போதைய குக் வித் கோமாளி வரை, மிக நல்ல தொழில்முறை தயாரிப்புக்குழுவுடன் நான் பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். அன்பிற்கு நன்றி. கடினமாக உழைப்போம். கடவுளை நம்புவோம்’’ என டிவி தொகுப்பாளினி மணிமேகலை கூறியிருக்கிறார்.

டிவி தொகுப்பாளினி மணிமேகலை கூறுவது, மற்றொரு டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவைத் தான் என நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.