Cook With Comali: வச்சு செய்த விஜய் டிவி.. கதறிய பிரியங்கா.. எதிராக திரும்பிய விழுதுகள்! என்ன நடக்கிறது விஜய் டிவியில்?-vijay tv relaease cook with comali new preview video - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cook With Comali: வச்சு செய்த விஜய் டிவி.. கதறிய பிரியங்கா.. எதிராக திரும்பிய விழுதுகள்! என்ன நடக்கிறது விஜய் டிவியில்?

Cook With Comali: வச்சு செய்த விஜய் டிவி.. கதறிய பிரியங்கா.. எதிராக திரும்பிய விழுதுகள்! என்ன நடக்கிறது விஜய் டிவியில்?

Malavica Natarajan HT Tamil
Sep 29, 2024 01:34 PM IST

Cook With Comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்த நிகழ்ச்சியில் பிரியங்கா, குரேஷி, சரத் போன்றோர் செய்த காரியத்தால் கத்தி கதறியுள்ளார். இதன் வீடியோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது.

Cook With Comali: வச்சு செய்த விஜய் டிவி.. கதறிய பிரியங்கா.. எதிராக திரும்பிய விழுதுகள்! என்ன நடக்கிறது விஜய் டிவியில்?
Cook With Comali: வச்சு செய்த விஜய் டிவி.. கதறிய பிரியங்கா.. எதிராக திரும்பிய விழுதுகள்! என்ன நடக்கிறது விஜய் டிவியில்?

வித்தியாசமான டாஸ்க்

இந்த நிலையில், குக் வித் கோமாளி அதன் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் குக்குகளுக்கும் கோமாளிகளுக்கும் டாஸ்க் கொடுப்பது வழக்கம். அந்த வகையில், இந்த வாரம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கோமாளிகள் கையில் பாம்பை வைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்ற டாஸ்கை அறிவித்துள்ளனர். இதனால், பலரும் பயத்துடனும் பதற்றத்துடனும் இருக்கின்றனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அதிகம் பேசப்படும் நபர்களில் ஒருவரான புகழ், பாம்பை வைத்துக் கொண்டு செய்வதறியாது அதனுடன் பேசி வருகிறார். அதனை, நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக வந்துள்ள மெய்யழகன் திரைப்பட நடிகர்கள் கார்த்தியும் அரவிந்த் சாமியும் கிண்டல் செய்துள்ளனர்.

பின், கார்த்தியும், அரவிந்த் சாமியும் சுஜிதாவுடன் நீண்ட நேரம் பேசுகின்றனர். இதனால், கையில் பாம்புடன் சும்மாவே நின்று கொண்டிருக்கும் புகழ் தன் பெர்ஃபாமெண்ஸை பாம்பிடம் காட்டி புலம்பி வருகிறார்.

கதறிய பிரிங்கா

இது இப்படி இருந்தால், பிரியங்காவுடன் சண்டை போட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியே சென்ற மணிமேகலை, குரேஷி, சரத், மாகாபா போன்ற பலரையும் பிரியங்காவின் சொம்புகள் என விமர்சித்திருந்தார். இதற்கு சரத் அப்போதே பதிலடி கொடுத்த நிலையில், இந்த எபிசோடில், சரத்தும் குரேஷியும் இணைந்து பிரியங்காவை பயமுறுத்தி கத்த வைத்துள்ளனர்.

பிரியங்காவிற்கு கோமாளியாக வந்த ராமர் கையில் பாம்பை லாவகமாக வைத்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறார். இதைக் கண்ட பிரியங்கா, அவருக்கு நன்றி கூறிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், பாம்புடன் அங்கு வந்த குரேஷியும் சரத்தும் பிரியங்காவிடம் பாம்பைக் காட்டி பயமுறுத்தினர். இதனால், பதறிய பிரியங்கா, பாத்திரத்தை கொண்டு அனைவரையும் அடித்து விடுவேன் என மிரட்டிக் கொண்டிருந்தார். அப்போது, முகத்தின் அருகில் பாம்பை கொண்டு சென்றனர். இதனால் பயந்த பிரியங்கா அலறி அடித்து கத்தியதுடன் மட்டுமல்லாமல், கையில் வைத்திருந்த பாத்திரத்தை தலையில் கவிழ்த்து கத்திக் கொண்டிருந்தார்.

தெறித்து ஓடிய இர்ஃபான்

பின், குரேஷியும், புகழும் இணைந்து பாம்பை வைத்து காமெடி செய்து கொண்டிருந்தனர். அப்போது, பாம்பை வைத்து பயங்கரமான டாஸ்க் கொடுத்திருப்பதாக இர்ஃபான் பேசிக் கொண்டிருப்பார். இதை கேட்டுக் கொண்டிருந்த சரத், இர்ஃபானின் பின்னால் பாம்பை கொண்டு வருவார். அதைக் கண்டதும் இர்ஃபான் தலை தெறிக்க ஓடுவார்.

இப்படி பாம்பை வைத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

முன்னதாக இந்த நிழ்ச்சி குறித்து பல செய்திகள் வெளியாக இன்றுவரையும் புயலைக் கிளப்பி வந்த நிலையில், அவற்றை எல்லாம் மறந்து மக்கள் நிகழ்ச்சியை பார்க்க பல முயற்சிகளை விஜய் டிவி எடுத்து வருவது தெரிகிறது.

முன்னதாக நிகழ்ச்சியிலிருந்து வெளியே சென்ற மணிமேகலைக்குப் பதிலாக புதிய ஆங்க்கர்களை அறிவித்து, அதில் சில விஷயங்களை விஜய் டிவி செய்தது மக்களிடையே நெகட்டிவ்வான விமர்சனங்களை பதிவு செய்தது. இதனால், தற்போது மக்களைக் கவர இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.