Bayilvan: 3 பேருடன் உறவில் இருந்த நடிகையுடன் கிச்சுபிச்சுக்கு.. 50 வயசு ஹீரோவின் காதலை நிராகரித்த நடிகை: பயில்வான்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bayilvan: 3 பேருடன் உறவில் இருந்த நடிகையுடன் கிச்சுபிச்சுக்கு.. 50 வயசு ஹீரோவின் காதலை நிராகரித்த நடிகை: பயில்வான்

Bayilvan: 3 பேருடன் உறவில் இருந்த நடிகையுடன் கிச்சுபிச்சுக்கு.. 50 வயசு ஹீரோவின் காதலை நிராகரித்த நடிகை: பயில்வான்

Marimuthu M HT Tamil Published Sep 06, 2024 11:06 PM IST
Marimuthu M HT Tamil
Published Sep 06, 2024 11:06 PM IST

Bayilvan: 3 பேருடன் உறவில் இருந்த நடிகையுடன் கிச்சுபிச்சுக்கு செய்த நபர் குறித்தும், 50 வயசு ஹீரோவின் காதலை நிராகரித்த நடிகை குறித்தும் மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறிய கருத்துகளின் தொகுப்பு!

Bayilvan: 3 பேருடன் உறவில் இருந்த நடிகையுடன் கிச்சுபிச்சுக்கு.. 50 வயசு ஹீரோவின் காதலை நிராகரித்த நடிகை: பயில்வான்
Bayilvan: 3 பேருடன் உறவில் இருந்த நடிகையுடன் கிச்சுபிச்சுக்கு.. 50 வயசு ஹீரோவின் காதலை நிராகரித்த நடிகை: பயில்வான்

இதுதொடர்பாக ஜூலை 29ஆம் தேதி பயில்வான் ரங்கநாதன் கிங் 24x7 யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘’நடிகைகள் நடிகர்களுடனும் கிரிக்கெட் வீரர்களுடனும் டேட்டிங் செய்வது புதிய கலாசாரமாகிவிட்டது. தென்னகத்தில் இது குறைவாக உள்ளது. வட இந்தியாவில் இது சகஜம். நடிகை அனன்யா பாண்டே கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் டேட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார். இவர் மூன்று நடிகர்களுடன் டேட்டிங் செய்து வாழ்ந்தவர். இந்நிலையில் இதையெல்லாம் அறிந்து, நடிகை அனன்யா பாண்டேவை கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா காதலித்து வருவதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.

இதற்கு ஆதாரப்பூர்வமாக அம்பானியின் குடும்பத்திருமணத்தில் அனன்யா பாண்டேவும், ஹர்திக் பாண்டியாவும் மிகநெருக்கமாகக் காணப்பட்டன.

விடாமுயற்சி திரைப்படத்தின் நிலை:

விடாமுயற்சி படப்பிடிப்பு நிறைவுபெற்றது. மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படம் விடாமுயற்சி. எத்தனையோ தடங்களுக்கு மத்தியில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு,முடிந்து பூசணிக்காய் உடைக்கப்பட்டுவிட்டது. இதனை அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா அறிவித்து இருக்கிறார். இப்படத்தில் அஜித்தின் ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.

ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் சென்னை,ஹைதராபாத்தில் சூட்டிங் நடந்தது. மூன்று கட்டங்களாக அஜர்பைஜான் நாட்டில் சூட்டிங் நடந்து முடிந்தது. அஜர்பைஜானில் படப்பிடிப்பில் இருக்கும்போது, நடிகை ஷாலினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு,ஆப்ரேஷன் நடந்தது. அதை அறிந்ததும் படப்பிடிப்பினை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பிய அஜித்,மனைவி ஷாலினி அருகிலிருந்து நன்கு பார்த்துக்கொண்டார்.

அதன்பின்,அங்கு சென்று மீதமிருக்கும் பகுதிகளை நடித்துக்கொடுத்தார், அஜித். திரையரங்க வெளியீட்டிற்குப்பின், விடாமுயற்சி படத்தை வெளியிட நெட்பிளிக்ஸ் நிறுவனம் மிகப்பெரியதொகை கொடுத்து வாங்கியுள்ளது. மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் மிகப்பெரிய அளவில் நடக்கவுள்ளது.

பார்வையை இழந்த நடிகை:

வானம் என்ற படத்தில் நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடித்தவர், ஜாஸ்மின். அழகானவர். நடிப்புத்திறமை கொண்டவர். திறமையானவர். நடிகை ஜாஸ்மின் கண்பார்வை சரியாக தெரியாததால், கான்டெக்ட் லென்ஸ் போட்டிருக்கிறார். இந்நிலையில் கண்ணின் விழித்திரையில் அரிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சிகிச்சைக்குச் சென்ற ஜாஸ்மினுக்கு, கண் பார்வை முழுமையாகத் தெரியவில்லை. இதனால் தீவிர சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார், ஜாஸ்மின்.

நடிகர் சிலம்பரசன் புதிதாக புரொடக்சன் ஆரம்பித்து கம்பெனி இருக்கிறார். தி ஆர்ட் மேக் சிலம்பரசன் என்னும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. முதல்படமே 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மற்றும் இயக்குநர் என பன்முகத்திறமைகொண்டவர், எஸ்.ஜே.சூர்யா. இவருக்கு வயது 55. ரசிகர்கள் இவருக்கு நடிப்பு அரக்கன் எனப்பட்டம் கொடுத்துள்ளார்கள். இடையில், பிரியா பவானி ஷங்கரிடம்,தன்னை திருமணம் செய்துகொள்வாயா எனக்கேட்டுள்ளார்,எஸ்.ஜே.சூர்யா. உடனே, தனக்கு பாய்ஃபிரெண்ட் இருப்பதாகவும் அவரையே திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும்கூறி தட்டிக்கழித்துள்ளார்,எஸ்.ஜே.சூர்யா. அதை கண்டுகொள்ளாத எஸ்.ஜே.சூர்யா தானே இயக்கி, நடித்து ஒரு படத்தை எடுக்கவுள்ளாராம்.

கவர்ச்சியாக வந்த நடிகை:

கீர்த்தி சுரேஷ், கதையின் நாயகனாக நடித்து தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் மாறினார். சமீபத்தில்,ரகுதாத்தா படத்துக்கு முதுகு நன்குதெரியும்படி, கவர்ச்சியாக வந்திருந்தார், கீர்த்தி சுரேஷ். இப்படம் ஹிந்தி பற்றியும் மகளிர் உரிமைகள் பற்றியும் பேசியது. இதன் வீடியோக்கள் இன்னும் வைரல் ஆகிவருகின்றன.

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, நடிகை நடாஷாவை காதலித்து திருமணம் செய்தாலும்,சமீபத்தில் பிரிந்தனர். கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.91 கோடி சொத்து இருக்கிறது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் குழந்தைக்காகவும் தனக்காகவும் 50 கோடி ரூபாய் சொத்து வேண்டும் என்று வாங்கியுள்ளார்' என்றார்.

நன்றி: கிங் 24X7 யூட்யூப் சேனல்!

பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!