DK Shivakumar: சென்னையில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆய்வு
- சென்னை மணலியில் உள்ள பயோ கேஸ் தயாரிக்கும் ஆலையில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் 180 டன் காய்கறிக் கழிவு மற்றும் மாட்டுச்சாணம் மூலம் தினசரி 4000 மெட்ரிக் டன் பயோ கேஸ் தயாரிக்கப்படுகிறது. கர்நாடகாவில் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து சிவக்குமார் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர்.