தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Manickam Narayanan:‘மகிழ்திருமேனிக்கு இதயமே கிடையாது; அஜித்துக்கு இதயம் இருக்கா இல்லையான்னு’ - மாணிக்கம் நாராயணன்

Manickam Narayanan:‘மகிழ்திருமேனிக்கு இதயமே கிடையாது; அஜித்துக்கு இதயம் இருக்கா இல்லையான்னு’ - மாணிக்கம் நாராயணன்

Kalyani Pandiyan S HT Tamil
May 21, 2024 07:08 AM IST

Manickam narayanan: அஜித் நிச்சயமாக தயாரிப்பாளராக மாற மாட்டான். அவன் மிகப்பெரிய புத்திசாலி. அவன் மற்றவர்களை டார்ச்சர் செய்து பழகி விட்டான். பணத்தை முன்னதாகவே தயாரிப்பாளர் இடமிருந்து வாங்கிக் கொள்வான் - மாணிக்கம் நாராயணன்

Manickam Narayanan:‘மகிழ்திருமேனிக்கு இதயமே கிடையாது; அஜித்துக்கு இதயம் இருக்கா இல்லையான்னு’ - மாணிக்கம் நாராயணன்
Manickam Narayanan:‘மகிழ்திருமேனிக்கு இதயமே கிடையாது; அஜித்துக்கு இதயம் இருக்கா இல்லையான்னு’ - மாணிக்கம் நாராயணன்

ட்ரெண்டிங் செய்திகள்

அஜித்திற்கு இதயம் கிடையாது 

இது குறித்து அவர் பேசும் போது, “படத்திற்கு விடாமுயற்சி என்ற அழகான டைட்டில் வைத்திருக்கிறார்கள். ஆகையால் படத்தையும் பெரும் முயற்சிக்குப் பின்னர் தான் முடிப்பார்கள். ஆனால் அந்த படத்தின் இயக்குநருக்கு இதயமே கிடையாது. அவனால் தயாரிப்பாளர் தான் உடைந்து சாவார். அஜித்திற்கு இதயம் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி எனக்கு தெரியாது. 

சினிமா தயாரிப்பாளர் எத்தனை பேர் இன்று ரோட்டிற்கு வந்திருக்கிறார்கள். பழைய பெரும் நடிகர்கள் பலரும் தயாரிப்பாளராக மாறி இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு தான் சென்றிருக்கிறார்கள். கமல்ஹாசன் தற்போது தன்னுடைய திரைப்படம் ஓடுவதால், தற்போது நிமிர்ந்து நிற்கிறார். அவர் சினிமாவின் மீது அதீத ஆர்வம் கொண்டவர். 

பிரச்சினைக்குள்ளேயே இருப்பார்

அதனால் அவர் பரிசார்த்த முயற்சிகளை செய்து, எப்போதும் ஒரு பிரச்சினைக்குள்ளேயே இருப்பார். அவர் உண்மையிலேயே இப்போதுதான் நிமிர்ந்து இருக்கிறார். நீங்கள் ஒரு தயாரிப்பாளராக மாற வேண்டும் என்றால், உங்கள் கையில் இருக்கும்  பணத்தை நீங்கள் கடலுக்குள் தூக்கி எறிவதற்கு தயாராக இருக்கும் பட்சத்தில், நீங்கள் படம் எடுக்கலாம். 

அஜித் நிச்சயமாக தயாரிப்பாளராக மாற மாட்டார். அவன் மிகப்பெரிய புத்திசாலி. அவன் மற்றவர்களை டார்ச்சர் செய்து பழகி விட்டான். பணத்தை முன்னதாகவே தயாரிப்பாளர் இடமிருந்து வாங்கிக் கொள்வான். சூர்யா கூட 24 என்ற படத்தை தயாரித்தார். அந்த படத்தில் அவருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. என்னைக் கேட்டால் அவர் ஜாலியாக நடித்துவிட்டு, பணத்தை வாங்கிக்கொண்டு ஜாலியாக இருக்க வேண்டும்.” என்று பேசினார்.

முன்னதாக, மாணிக்கம் நாராயணன் இயக்குநர் மணிரத்னம் மீது வைத்த குற்றசாட்டுகள் 

இது குறித்து ஆகாயம் தமிழ் சேனலுக்கு அவர் பேசும் போது, “ நீங்கள் ஒரு படத்தை எடுத்தீர்கள். அந்த படத்தை நான் ஒரு பெரிய விலை கொடுத்து வாங்கினேன். அந்தப்படம் பெரிதாக ஓட வாய்ப்பு இல்லை என்று ரிலீஸூக்கு முன்பே நான் கணித்தேன். இருப்பினும், என்னுடைய தரப்பில் எந்தவித குறையும் வந்து விடக்கூடாது என்பதற்காக, படத்திற்கான முழு பணத்தையும் உங்களிடம் கொடுத்தேன்.

அதில், ஒரு பத்து லட்ச ரூபாய்க்கான காசோலையை மட்டும் படம் ரிலீஸ் ஆன அடுத்த நாள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிக்கொடுத்தேன். படம் ரிலீஸ் ஆனது; படத்திற்கு பார்வையாளர்கள் மத்தியில் கடுமையான விமர்சனம் வந்து சேர்ந்தது. திருவண்ணாமலையில் அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் திரையரங்கில் இருந்த சீட்டை கிழித்து தொங்கவிட்டு விட்டார்கள். 

ஒன்றரை கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் 

அந்த அளவிற்கு படம் குப்பையாக மாறிவிட்டது. அந்த சமயத்தில், எனக்கு கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அதற்காக அவர்கள் தரப்பு நஷ்ட ஈடாக வெறும் 20 லட்சம் மட்டுமே கொடுத்தார்கள். இது நடந்து பல வருடங்கள் கழித்து, அவர் இயக்கிய ஒரு படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை நான் வேண்டுமென்று கேட்கிறேன். அதற்கான பணத்தையும் நான் கொடுக்க தயாராக இருந்தேன்.

அது குறித்து பேச, அவரிடம் அப்பாயின்மென்ட்டும் கேட்டிருந்தேன். அதற்கு அவர் எந்தவித பதிலும் எனக்கு அளிக்கவில்லை. அவர் என்னை பார்த்து பயப்பட்டார். நான் இறங்கி வந்து உன்னிடம் உதவிக்கு நின்றேன். ஆனால் அந்த உதவியை கூட அவன் செய்யவில்லை. அவனது பெயர் தான் இயக்குநர் மணிரத்னம். 30, 40 வயதில் உனக்கு ஒரு பிடித்தமான வாழ்க்கை இருக்கும். ஆனால் 60 கடந்தும் கூட, உனக்கு முதிர்ச்சி ஏற்படவில்லை என்றால் நீ எல்லாம் என்ன மனிதன்.

அந்தப் பெருந்தன்மை கூட அவனுக்கு இல்லை. அந்த அளவுக்கு கூட இரக்கமில்லாத நீங்கள் எல்லாம் ஏன் இந்த உலகத்தில் வாழ்கிறீர்கள். சாகிற போது காசை அள்ளிக்கொண்ட செல்லப் போகிறீர்கள்.அப்படி இருக்கும் பொழுது, ஏன் அதனை மற்றவருக்கு பகிர்ந்து நீ வாழ மறுக்கிறாய். இதற்கும், நான் நஷ்டம் வந்தால் அது குறித்து கேட்க மாட்டேன் என்று எழுதித் தருகிறேன் வேறு சொல்லியிருந்தேன். அதை தாண்டியும் அவன் எனக்கு அந்த உதவியை செய்யவும் முன்வரவில்லை.

இப்படி எல்லோரும் கேவலமானவர்களாக இருந்தால், நாடு எப்படி உருப்படும். 10 பேராவது தன்னால் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாமா?. ஆகையால் கொஞ்சமாவது பெருந்தன்மையை மக்களுக்கு காட்டுங்கள். உடனே சிலர் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறோம் அவர்களுக்கான பள்ளிச் செலவை ஏற்று கொள்கிறோம் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், அது பெரிய செலவு கிடையாது. உங்களால் எத்தனை தயாரிப்பாளர்கள் ரோட்டில் நிற்கிறார்கள்.” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்