300 கோடி கிளப்பில் இணைந்தாரா சிவகார்த்திகேயன்? அமரன் 20வது நாள் வசூல் சொல்வது என்ன?
நடிகர் சிவகார்த்திகேயனின் அரமன் திரைப்படம் வெளியான 20வது நாளில் 300 கோடி வசூலை அடைந்ததா இல்லையா என்பது குறித்த பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் ராணுவத்தில் வீரமரணம் அடைந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் தான் அமரன். முகுந்த்தாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் நிலையில், அவரது மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி நடித்து இருக்கிறார். ராஜ் குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரித்து இருக்கிறார்.
வசூலில் கெத்து காட்டும் அமரன்
அமரன் திரைப்படம் தீபாவளி பண்டிகை பண்டிகையன்று அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் வெளியாகும் முன்னரே ப்ரீ புக்கிங்கில் அதிக வசூலைப் பெற்ற நிலையில், வெளியான 20 நாட்களிலும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனால் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. படம் வெளியாகி 20 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் நேற்று ரூ.1.33 கோடி ரூபாய் வசூலைப் பெற்று இதுவரை மொத்தமாக ரூ. 151..48 கோடி வசூலைப் பெற்றுள்ளது.
இந்திய அளவில் பார்க்கும் போது படம் 20 நாட்களில் 221.4 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. மேலும், உலகளவில் 298.5 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாக sacnilk.com இணையதளம் கூறியுள்ளது. இதன் மூலம் வார இறுதி நாட்களில் அமரன் தொடர்ந்து 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அமரன் படம் நல்ல வசூலைப் பெற்றுள்ளது தெரிய வருகிறது.
இராணுவ வீரரின் உண்மைக் கதை
இப்படம் காஷ்மீரில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இராணுவப் படை வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை கதையாக கொண்டுள்ளது. உண்மைக் கதை என்பதால் படம் வெளியாகும் முன்பே படத்திற்கு அதிக வரவேற்பு இருந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் பயன்படுத்திய பெரிய ரக துப்பாக்கி உண்மையானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்ந்து காட்டிய நடிப்பு அரக்கர்கள்
நடை, உடை, பாவனை, கட்டு மஸ்தான உடம்பு என முகுந்தின் ஒட்டு மொத்த உருவமாக இதுவரை நாம் பார்க்காத நடிகராக சிவகார்த்திகேயனை மாற்றி இருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார். நடிப்பிலும் முழுக்க முழுக்க வேறொரு களத்தில் இறங்கி, மீண்டும் ஒரு பரீட்சார்த்த முயற்சியை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார் சிவா. ஒரு இராணுவ வீரனுக்கான மிடுக்கு ஒரு பக்கம் கவர, இன்னொரு பக்கம் அவர் நடிப்பில் வெளிப்பட்ட எமோஷன் திரையை சிதற விடுகிறது. இதனால், ஏற்கனவே படம் பார்த்தவர்களும் கூட, இவர்களின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு தியேட்டருக்கு திரும்பத் திரும்ப வருகின்றனர்.
அரசு அனுமதியோடு வெளியான படம்
இந்தப் படத்தில் தேவையில்லாத காட்சிகளையோ, வசனங்களையோ சேர்க்கவில்லை. இந்தப் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை சினிமா க்ராஃப்டை நம்பி மட்டுமே எழுதப்பட்டது. இராணுவ வீரரின் கதையை எவ்வளவு சுவாரசியமாக சொல்ல முடியும் என்கிற எண்ணத்தை மட்டுமே முன்னே வைத்துக்கொண்டு எடுத்த படம் அமரன் எனக் கூறினார்.
இந்தப் படம் பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் ஏ.டி.ஜி.பி.ஐ. ஆகியோரின் ஒப்புதல் பெற்ற பிறகே வெளியிடப்பட்டுள்ளது. இராணுவம் தொடர்பான ஒரு படம் எடுக்கப்படுகிறது என்றால் அவர்களுடைய ஒப்புதல் இல்லாமல் படத்தை வெளியிட முடியாது. அதற்கான சான்றிதழ் படக்குழுவிடம் உள்ளது.
சொந்த கருத்துகளுக்கு படத்தில் இடமில்லை
அமரன் திரைப்படம் என்னுடைய அரசியல் பார்வையையும், சொந்த கருத்துகளையும் சொல்லும் படம் கிடையாது.எனக்கும் சில கருத்துக்கள் இருக்கிறது. அதை படத்தின் கதாபாத்திரத்தில் திணிக்கக்கூடாது என்பதில் ஒரு இயக்குநராக மிகவும் தெளிவுடன் இருக்கிறேன். சினிமாக்காரர்களுக்கு சமூக பொறுப்புகளும் இருக்கிறது. அதற்கு உட்பட்டு இந்த அமரன் படம் எடுக்கப்பட்டுள்ளது என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்