செல்வராகவனால் ஏற்பட்ட அசெகளரியம்..தனுஷ் சொன்ன விஷயம்! என்ஜிகே ஷுட்டிங்கில் நடந்த சம்பவம் பகிர்ந்த சாய் பல்லவி
என்ஜிகே ஷுட்டிங்கில் நடந்த சம்பவம் பற்றி பகிர்ந்த சாய் பல்லவி, இயக்குநர் செல்வராகவனால் ஏற்பட்ட அசெகளரியம் காரணமாக படத்தில் இருந்து விலக முடிவு செய்ததாக கூறியுள்ளார். தனுஷ் சொன்ன விஷயம் புரிந்து படத்தில் தொடர்ந்து சிறப்பாக நடித்ததாகவும் அவர் விவரித்துள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த நடிகையாக இருந்து வரும் சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். ரன்பிர் கபூர் ஜோடியாக ராமாயணம் படத்தில் நடிப்பதன் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகிறார்.
இவர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் அமரன் படம் தீபாவளி ரிலீஸாக வெளியாகியுள்ளது. படத்தில் சாய் பல்லவி நடிப்புக்கு எட்டுத்திக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் அமரன் படத்தில் சிவகார்த்திகேயன், முகுந்த் வரதராஜனாகவும், அவரது மனைவி இந்து ரெபாக்கா வர்கீஸ் ஆக சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
தற்போது வரை பாக்ஸ் ஆபிஸில் ரூ. 150 கோடிக்கு மேல் படம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழில் சூர்யா ஜோடியாக என்ஜிகே படத்தில் நடித்தபோது சந்தித்த கடினமான சூழ்நிலையையும், அப்போது தனுஷ் தனக்கு உதவிகரமாக இருந்தது பற்றியும் சாய் பல்லவி கூறியுள்ளார்.
செல்வாவின் போக்கு காரணமாக விலக முடிவு
செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த என்ஜிகே படத்தில் சூர்யாவின் மனைவியாக சாய் பல்லவி தோன்றியிருப்பார். இந்த படத்திலும் சாய் பல்லவியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து படத்தில் நடித்தபோது இயக்குநர் செல்வராகவனின் போக்கு காரணமாக, படத்திலிருந்து விலகி விடமா என சாய் பல்லவி நினைத்தாராம். இதுபற்றி அவர் பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "என்ஜிகே படத்தில் கமிட்டாக ஆரம்ப சில நாள்களில் அசெளகரியமாக உணர்ந்தேன். ஷாட் நடித்து முடித்த பின்னர் நல்ல நடித்திருக்கேனா இல்லையா என்பதை செல்வா சார் சொல்ல மாட்டார்.
ஒகே என மட்டும் சொல்லிவிட்டு அவர் போய்விடுவார். அவரது இந்த செயல் எனக்கு குழப்பமாகவே இருந்தது"
தனுஷ் சொன்ன விஷயம்
தொடர்ந்து பேசிய சாய் பல்லவி, "ஒரு முறை தனுஷை சந்தித்தபோது, என்ஜிகே ஷுட்டிங் எப்படி செல்கிறது என கேட்டார். அப்போது எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அசெளகரியத்தை சொன்னதோடு, படத்திலிருந்து விலகலாமா என யோசிப்பதாகவும் சொன்னேன். உடனே அவர் இதைப்பற்றி கவலை பட வேண்டாம். அவர் நம்மளை இப்படி டெஸ்ட் செய்வார். எல்லாம் சரியாகிவிடும் என சொல்லி, சிறப்பாக நடிக்குமாறு கூறினார். அதன் பிறகு அந்த பாசிடிவ் மனநிலையுடன் என்ஜிகே படத்தில் தொடர்ந்து பணியாற்றினேன்.
அந்த படத்தில் நடித்து சூர்யாவும் நன்கு ஆதரவு அளித்ததோடு, ஒத்துழைப்பும் கொடுத்தார்" என்றார்.
கிரிக்கெட்டில் மூன்றாவது அம்பயர் ரிவியூ போல் இருக்கும்
செல்வராகவன் படங்களில் செட்டுக்குள் நுழைந்துவிட்டால், ஷாட் முடிஞ்சதும் ஒகேயா இல்லையா என்பதை சொல்றதுக்கு கூட டைம் எடுத்துகுவார். அவர் தனக்கென மானிட்டர் வைத்திருப்பார். அது பக்கத்தில் யாரும் போகக்கூடாது. ஹீரோ, ஹீரோயினாக இருந்தாலும் விடமாட்டார்.
சாய் பல்லவி தெரியாமல் அதை பார்க்க சென்றபோது, நோ என்று சொல்லிய செல்வராகவன், This is my space என சொல்லி மறுத்துவிட்டார். ஷாட் முடிந்ததும் பல முறை போட்டு பார்ப்பார். கிரிக்கெட்டில் மூன்றாவது நடுவர் முடிவுக்கு காத்திருப்பது போல் செட்டில் அமைதி நிலவும். டிக் டாக் டிக் டாக் என நான், சூர்யா, சாய் பல்லவி, நிழல்கள் ரவி சார் வெயிட் செய்வோம். அப்புறம் தான் ஒகேவா இல்லை ஒன்மோர் என காத்திருப்போம்" என என்ஜிகே படத்தில் சூர்யாவின் அம்மாவாக நடித்த உமா பத்மநாபன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இவரை தொடர்ந்து தற்போது நடிகை சாய் பல்லவியும் என்ஜிகே செட்டில் நடந்த அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்துள்ளார்.
சாய் பல்லவி புதிய படங்கள்
மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அந்த படத்தில் மலர் டீச்சராக தோன்றி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதன் பின்னர் தமிழ், தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து சிறந்த நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
சாய் பல்லவி தற்போது தெலுங்கில் நாக சைதன்யா ஜோடியாக தான்டெல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் ரன்பிர் கபூர் ஜோடியாக ராமயணா படத்தில் நடித்து வரும் அவர், பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இதுதவிர மேலும் ஒரு இந்தி படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.