நல்லா இருக்கு உங்க ஜனநாயகம்.. கிழித்தெடுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. இப்போ என்ன ஆச்சு ?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நல்லா இருக்கு உங்க ஜனநாயகம்.. கிழித்தெடுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. இப்போ என்ன ஆச்சு ?

நல்லா இருக்கு உங்க ஜனநாயகம்.. கிழித்தெடுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. இப்போ என்ன ஆச்சு ?

Malavica Natarajan HT Tamil
Nov 22, 2024 02:35 PM IST

திரையரங்கு வளாகங்களில் பேட்டி எடுக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், சில யூடியூப் சேனல்களில் விமர்சனங்கள் வெளியானதை குறிப்பிட்டு ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

நல்லா இருக்கு உங்க ஜனநாயகம்.. கிழித்தெடுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. என்ன நடந்தது?
நல்லா இருக்கு உங்க ஜனநாயகம்.. கிழித்தெடுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. என்ன நடந்தது?

இதனால், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த யூடியூப் சேனல்களும் எடுக்க தடை செய்து, இந்த முதல் நாள் முதல் காட்சிக்கான ரிவ்யூ நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

முடிவை மதிக்காத தியேட்டர்கள்

இந்நிலையில், இன்று வெளியான திரைப்படங்கள் எப்படி இருக்கிறது என தியேட்டர்களில் சில ஊடகங்கள் மக்களிடம் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இதைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன், "ப்ப்ளிக் ரிவியூவிற்கு தடை என்று கூறினார்கள்.

ஆனால் இன்று அசோக் செல்வன் நடிப்பில் வந்துள்ள எமக்கு தொழில் ரொமான்ஸ் படத்தின் பப்ளிக் ரிவியூ வெளியானது.

ஆகவே.. பாசிடிவ் ரிவியூ மட்டும் சொல்பவர்கள், பாசிடிவ் ரிவியூ மட்டும் அப்லோட் செய்யும் சேனல்களுக்கு இந்த தடை பொருந்தாது என்பது இதன்மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வாழ்க ஜனநாயகம்." எனக் கூறி தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவையும் தியேட்டர்கள் அசோசியேஷனையும் கிண்டலடித்து விமர்சித்துள்ளார்.

நெல்சனை மதிக்கிறேன்

அதே சமயத்தில், கவின் நடிப்பில் வெளியான பிளடி பெக்கர் படம் திரையரங்கில் சரியான மக்கள் ஆதரவைப் பெறவில்லை, இதனால், படத்தின் நெல்சன் பட விநியோகஸ்தர்களை அழைத்து படத்தின் நஷ்டத்தை திருப்பிக் கொடுத்தார். இது மனிதாபிமானம் மிக்க செயல். அவரைப் பாராட்டுகிறேன். நெல்சனைப் போல, நடிகர்களும், பிறரும் பாதிக்கப்பட்ட தியேட்டர்களுக்கு உதவ வேண்டும் என திருப்பூர் சுப்ரமணியம் பேசி இருந்தார்.

படம் பிடிக்கலன்னாலும் காசா?

இதை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த ப்ளூ சட்டை மாறன், அப்போது மக்கள் படம் பிடிக்கலைன்னு சொன்னா பணத்தை திரும்ப தருவாங்களா சார்? என மிகவும் நக்கலாக கேட்டுள்ளார். இவரது பதிவை பகிர்ந்து பலரும் தியேட்டர் அசோசியேஷனை கிண்டல் செய்துள்ளனர், முன்னதாக தயாரிப்பாளர் சங்கம், தியேட்டர்கள் சங்கத்திற்கு சில முக்கிய முடிவுகளை பின்பற்றுமாறு கூறி அறிக்கை அனுப்பினர்.

யூடியூப் சேனல்களை ஊக்குவிக்க கூடாது

அதில், "இந்த 2024 வருடத்தில் இந்தியன் 2. வேட்டையன் மற்றும் கங்குவா திரைப்படங்களுக்கு Public Review/Talk மூலம் பெருமளவில் பாதிப்பை YouTube Channel-கள் ஏற்படுத்தியுள்ளன. அவைகளை இனிமேல் ஊக்குவிக்காமல், திரைத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

பப்ளிக் ரிவ்யூ நிகழ்ச்சிகளுக்கு தடை

அதன் முதல் முயற்சியாக, அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த YouTube Channel-களும் எடுக்க தடை செய்து, இந்த FDFS Public Review/Talk நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக இந்த நடைமுறையை கொண்டு வருவது காட்டாயம் என திரையரங்கம் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஆலோசனை வழங்கி இருந்தார். அதன் அடிப்படையில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.