தமிழ் யூடியூப் சேனல்களின் ஆதிக்குடி டெம்பிள் மங்கீஸ் சரவணன் டூ ஆஸ்தான ஹீரோ ஃரண்டு ஷா ரா வரை.. லைஃப் சேஞ்ஜிங் மொமண்ட்ஸ்
பிரபல தமிழ் யூடியூபரும் நடிகருமான ஷா ரா இன்று தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவர் குறித்த சுவாரசியமான பதிவை இங்கு காண்போம்.

எதர்த்த நடிப்பாலும், சட்டையர் வசனங்களை அசால்டாக டீல் செய்யும் நபராகவும் நமக்கு எளிதில் பரிச்சையமானவர் ஷா ரா. புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே பலருக்கும் நன்கு அறிமுகமானவர். நீங்கள் யூடியூப் வீடியோக்களை அதிகம் பார்ப்பவர்களாக இருந்தால் நிச்சயம் இவரது ஒரு வீடியோவாவது உங்கள் கண்ணில் பட்டிருக்கும்.
யூடியூபர்ஸ்க்கு எல்லாம் முன்னோடி
இப்போது தமிழில் 'பரிதாபங்கள்', 'ஸ்மைல் சேட்டை', 'மைக் செட்', 'விஜே சித்து விலாக்ஸ்', 'நக்கலைட்ஸ்' போன்ற யூடியூப் சேனல்கள் மக்களிடம் தங்களது வித்தியாசமான மற்றும் நகைச்சுவையான வீடியோக்கள் மூலம் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. இவற்றிற்கெல்லாம் அடித்தளம் போட்ட யூடியூப் சேனல் 'டெம்பிள் மங்கீஸ்' தான்.
யூடியூப் என்றால் என்னவென்றே பெரும்பாலான மக்களுக்கு புரிதல் இல்லாத காலத்தில் தொடங்கப்பட்ட சேனல் தான் டெம்பிள் மங்கீஸ். இந்த யூடியூப் சேனலை விஜய் வரதராஜ் மற்றும் ஷா ரா என்ற சரவணன் ஆகியோர் இணைந்து தொடங்கினர்.
