Bigg Boss Vanitha: அதிக சம்பளம்... புதிய அவதாரம்... சம்பவம் செய்து வரும் பிக்பாஸ் வனிதா-bigg boss vanitha taking a new role as an assistant director - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Vanitha: அதிக சம்பளம்... புதிய அவதாரம்... சம்பவம் செய்து வரும் பிக்பாஸ் வனிதா

Bigg Boss Vanitha: அதிக சம்பளம்... புதிய அவதாரம்... சம்பவம் செய்து வரும் பிக்பாஸ் வனிதா

Malavica Natarajan HT Tamil
Sep 26, 2024 04:42 PM IST

Bigg Boss Vanitha: பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமாக அறியப்பட்ட வனிதா விஜயகுமார் தற்போது உதவி இயக்குநராக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

Bigg Boss Vanitha: அதிக சம்பளம்... புதிய அவதாரம்... சம்பவம் செய்து வரும் பிக்பாஸ் வனிதா
Bigg Boss Vanitha: அதிக சம்பளம்... புதிய அவதாரம்... சம்பவம் செய்து வரும் பிக்பாஸ் வனிதா

இந்த நிலையில், விஜய் டிவி இவர் மூலம் தனது டிஆர்பிஐ அதிகரிக்க திட்டமிட்டே பிக்பாஸ் 3வது சீசனில் களமிறக்கப்பட்டார். அவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே கண்டென்டுகளையும் அள்ளி வழங்கினார். இதனால், அவருக்கு தற்போது சினிமா வாய்ப்புகளும் வந்த வண்ணமே இருந்தன்.

பிக்பாஸால் மீண்டுவரும் வனிதா

முன்னொரு காலத்தில் நடிகர் விஜய்க்கு ஹீரோயினாக நடித்த வனிதா இப்போது சைடு கேரட்டர்களுக்காகவும், எதிர்மறை கதாப்பாத்திரங்களில் நடிப்பதற்காகவும் மட்டுமே நடிக்க அழைக்கப்படுகிறார்.

எப்படி இருந்தாலும், தனக்கு வாய்ப்பு வருகிறது எனக் கூறிய வனிதா பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற வந்த பிறகு தான் 20க்கும் மேற்பட்ட படங்களில் கமிட் ஆகி இருப்பதாக வனிதா கூறியுள்ளார்.

பவருடன் திருமணம்

இந்நிலையில், பவர் ஸ்டார் சீனிவாசனுடன் நடித்த திரைப்படம் ஒன்றில் இருவருக்கும் திருமணமாவது போல் சில காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்நிலையில், இந்த காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி காட்டுத் தீ போன்று பரவியது. இதுகுறித்து சினிமா விழா ஒன்றில் பேசிய வனிதா, உங்களுக்கு பவர் ஸ்டாருடன் திருமணமானதா என பலரும் கேட்கின்றனர். ஆனால் உங்களை திருமணம் செய்து ஒரு பயனும் இல்லை எனக் கூறினார். இதைக் கேட்ட பவர் ஸ்டார் நம் இருவரின் ஹனி மூனுக்கும் தேதி குறித்து விடலாம் எனக் கூறினார். இவர்களது இந்தப் பேச்சும் வைரலானது.

இதைத்தொடர்ந்து, வனிதாவின் மகளான ஜோவிகாவும் சர்ச்சைக்கும் சண்டைக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறார். வனிதாவிற்கு பின் இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதகளம் செய்திருந்தார்.

உதவி இயக்குநர்

இதற்கிடையில், சில நாட்களாக அமைதியாக வலம் வந்த வனிதா, தான் ஒரு பெரிய திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணி செய்துள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், கோல்டன் ஈகிள் ஸ்டூடியோஸ் சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிக்கும் தில் ராஜா திரைபப்டத்தில் நான் உதவி இயக்குநராக பணியாற்றுகிறேன். இந்த படத்தின் இயக்குநர் ஏ.வெங்கடேஷ். இந்தப் படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகிறது. எனக்கு வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி. இப்படத்தின் அனைத்து பாடல்களும் நன்றாக வந்துள்ளது.

என் தந்தையுடன் சண்டையிட்ட பிறகு நான் சினிமாவில் நடிக்க நினைத்த போது அதற்கு உதவியவர் இயக்குநர் வெங்கடேஷ். இப்போது நான் அவருடன் உதவி இயக்குநராக உள்ளேன்.

நடத்தில் நடிக்க வந்த போது நான் அதிகம் சம்பளம் கேட்டதாக பலரும் கூறினர். என்னைப் பற்றி உங்களுக்கு தெரியும். நீங்கள் நாள் மட்டும் சொல்லுங்கள் உங்களுக்காக நான் நடித்து தருகிறேன் எனக் கூறியுள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.