Vanitha vijayakumar: “சிலதுகள் ரொம்ப பேசுது.. அவள அவ புருஷன் விட்டுட்டு போகல.. பிரிஞ்சுதான்” - துவைத்து காய வைத்த வனிதா!-vanitha vijayakumar slams singer suchithra for her on the issue of cook with comali manimegalai priyanka issue - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vanitha Vijayakumar: “சிலதுகள் ரொம்ப பேசுது.. அவள அவ புருஷன் விட்டுட்டு போகல.. பிரிஞ்சுதான்” - துவைத்து காய வைத்த வனிதா!

Vanitha vijayakumar: “சிலதுகள் ரொம்ப பேசுது.. அவள அவ புருஷன் விட்டுட்டு போகல.. பிரிஞ்சுதான்” - துவைத்து காய வைத்த வனிதா!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 24, 2024 01:15 PM IST

Vanitha vijayakumar: “பிரியங்கா அவருடைய கணவருடன் வாழ வில்லை. அதனால் அவருக்கு சுயமரியாதை இல்லை என்று கூறும் நபர்களை, செருப்பு இல்லை எதை வைத்து வேண்டுமென்றாலும் அடிக்கலாம். அப்படி பேசுவது மிக மிக தவறு” - வனிதா!

Vanitha vijayakumar: “சிலதுகள் ரொம்ப பேசுது.. அவள அவ புருஷன் விட்டுட்டு போகல.. பிரிஞ்சுதான்” - துவைத்து காய வைத்த வனிதா!
Vanitha vijayakumar: “சிலதுகள் ரொம்ப பேசுது.. அவள அவ புருஷன் விட்டுட்டு போகல.. பிரிஞ்சுதான்” - துவைத்து காய வைத்த வனிதா!

பிரச்சினையை வெடிக்க வைத்த மணி!

இந்த நிலையில் பலரும் மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிலையில், குரேஷி உள்ளிட்ட சிலர் பிரியங்காவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்த நிலையில், பாடகி சுசித்ரா பிரியங்கா மோசனவர் என்று எனது சொந்த உறவினரின் பையனை கல்யாணம் செய்து கொண்டு அவரின் வாழ்க்கையையே கெடுத்து விட்டாள் என்றும் பேசி இருந்தார். இதற்கு மறைமுகமாக வனிதா பதிலடி கொடுத்திருந்தார்.

பிரியங்கா உடன் அவரது முன்னாள் கணவர்
பிரியங்கா உடன் அவரது முன்னாள் கணவர்

செருப்பு இல்லை

சென்னையில் பட நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், “ மணிமேகலை அவருடைய கணவரோடு வாழ்கிறார். அதனால் அவருக்கு சுயமரியாதை இருக்கிறது. பிரியங்கா அவருடைய கணவருடன் வாழ வில்லை. அதனால் அவருக்கு சுயமரியாதை இல்லை என்று கூறும் நபர்களை, செருப்பு இல்லை எதை வைத்து வேண்டுமென்றாலும் அடிக்கலாம். அப்படி பேசுவது மிக மிக தவறு. பிரியங்கா இப்படி இருப்பதால்தான் அவருடைய கணவர் அவரை விட்டுச் சென்று விட்டார் என்றெல்லாம் சிலதுகள் பேசிக் கொண்டிருக்கிறது.

 

உண்மையில் அவர் கணவர் அவரை விட்டுச் செல்லவில்லை அவர்கள் இருவரும் பரஸ்பரமாக பேசி பிரிந்து விட்டார்கள். நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள். இன்றைய உலகில் மனைவிகள் கூட கணவரை விட்டு சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். ஆகையால், ஒருவர் பிரிவதற்கும் அந்தப் பெண்ணின் கேரக்டருக்கும் சம்பந்தமே கிடையாது. நிறைய பேர் பிரியங்காவை பற்றி தவறாக பேசுகிறார்கள். அதை ரசித்து அதற்கு எதிர்தரப்பாக மணிமேகலை வீடியோ போடுவது சரியானது கிடையாது.” என்று பேசினார்.

மணிமேகலையுடன் பிரியங்கா!
மணிமேகலையுடன் பிரியங்கா!

முன்னதாக, வைரமுத்து சுசித்ராவை மறைமுகமாக பையத்தியம் என்று கூறிய அதற்கு அவர் அளித்த ரிப்ளையை பார்க்கலாம்.

வைரமுத்துவை மெண்டல் ஆஸ்பத்திரியில்

இது குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் பேசும் போது, “வைரமுத்து சொல்வது போல நான் எந்த மருந்துகளையும் எடுத்துக் கொள்வதில்லை. அவரை ஏதாவது மெண்டல் ஆஸ்பத்திரியில் அடைத்து பூட்டி போடுங்கள். அவர் பல பேரை மெண்டல் ஆக்குகிறார். எனக்கு வைரமுத்து பரிசாக ஷாம்பு பாட்டில் தந்ததை, பல பெண்கள் கேட்டு தற்போது உஷாராக மாறி இருக்கிறார்கள். இனிமேல் அவர் பரிசு தருகிறேன் என்று கூறினால், பெண்கள் உஷாராக செல்லாமல் இருப்பார்கள். ஆகையால், நான் பேசியது தற்போது மிகவும் நல்லதாக மாறிவிட்டது.

நான் இதை ஏன் அப்போதே சொல்லவில்லை என்ற கேள்வி கேட்கப்படுகிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அது அப்போதே முடிந்துவிட்டது. சின்மயிக்கும் நடந்ததும், எனக்கு நடந்ததும் முற்றிலும் வித்தியாசமான ஒன்று. அவர் என்னை அவரது வீட்டிற்கு அழைத்த போது, என்னுடன் என்னுடைய பாட்டி இருந்தார் ஒருவேளை என்னுடைய பாட்டி அன்று இல்லாமல் இருந்து, அவர் என் மீது கை வைத்திருந்தால், அவரது கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டு இருப்பேன். ஆனால், அவர்கள் என்னைதான் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருப்பார்கள். நான் ஜெயிலுக்கு போய் இருப்பேன். என்னுடைய கேரியரே முடிந்து போய் இருக்கும்.

கடவுள் பார்த்த வேலைதான்

உண்மையில் அன்றைய நிகழ்வு கடவுள் நினைத்தது என்று நான் நினைக்கிறேன். ஆகையால் அதன் பின்னர், முடிந்த மட்டும் இந்த மனிதனோடு ஒரே மேடையிலோ, ஒரே நிகழ்ச்சியிலோ இருக்கக் கூடாது என்று முடிவெடுத்து இருந்தேன். ஆனால், திரைத்துறையில் இருக்கும் எல்லோரும் அவரைப் போன்றவர்கள் கிடையாது. நான் வைரமுத்து போன்று பலர் என்னை இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று கூறியதே கிடையாது. இந்த ஒரு மனிதன் தான் என்னை அப்படி செய்தான். மற்றபடி, நான் வேலை செய்த விவேகா, நா முத்துக்குமார் உள்ளிட்ட பாடல் ஆசிரியர்கள் அனைவருமே என்னை மரியாதையோடு நடத்தி இருக்கிறார்கள். உண்மையில் வைரமுத்து போன்ற இரண்டு மூன்று முதலைகள் தான் மொத்த அந்த துறையையே சீரழிக்கிறது.

நாம் இது போன்ற முதலைகளை சமாளிக்க வேண்டும் என்றால், அது இருக்கும் அதே துறையில் இருக்கிறோம் என்றால், அவர்களை தவிர்த்து விட்டு, நாம் நம்முடைய வேலையை பார்ப்பது தவிர வேறு வழியே கிடையாது. நான் தற்போது மொத்த சினிமா துறையை விடுத்து வேறு துறைக்கு மாறி விட்டேன். அதனால், இப்போது நான் சினிமாவில் யாரைப் பற்றி கேட்டாலும், எனக்கு நடந்த அனுபவத்தை அப்பட்டமாக வெளியே சொல்வேன்.

ஒருமுறை சினிமாவில் வேலை பார்த்துவிட்டு நீங்கள் வெளியே வந்து விட்டால், சினிமா மீது உங்களுக்கு தவறான அபிப்பிராயம் தான் வரும். நான் அந்த பேட்டியில் ஹேமா அறிக்கை குறித்து கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் போதுதான் வைரமுத்துவை பற்றி பேசினேன். நான் வேண்டுமென்றே வைரமுத்துவை தாக்க வேண்டும் என்று பேசவில்லை. எனக்கு நடந்த அனுபவத்தை நான் பகிர்ந்தேன்” என்று பேசினார்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.