ஆட்டம் இனி கலக்கட்ட போகுது.. புதிய திருப்பம்.. திருக்காணி ஆக சுனிதா.. மோசமாகவும் விளையாடிய போட்டியாளர் யார்?
ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்கில் சிறப்பாகவும் மோசமாகவும் விளையாடிய போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, இதில் சிறப்பாக விளையாடியவர்கள் ஒரு அணியும், மோசமாக விளையாடியவர்கள் ஒரு அணியும் விளையாடப் போகிறார்கள்.

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் இருந்து வருகிறது. மேலும் இதுவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகமான டி. ஆர். பி கொண்ட நிகழ்ச்சியாகவும் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த சீசன்களை விட இந்த சீசன் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. தொகுப்பாளராக விஜய் சேதுபதி, “ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” எனப் பல புதிய விதிமுறைகள் என பல புதுமைகள் நிறைந்து காணப்படுகிறது இந்த சீசன் பிக்பாஸ். தொடங்கிய நாளில் இருந்தே அதிக சுவாரசியமாகவும், விறு விறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது.
விஜய் சேதுபதி வெளுத்து வாங்கி வருகிறார்
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை எந்தவித சுவாரசியங்களும் குறையாமல் சென்று கொண்டிருக்கிறது. புதிய தொகுப்பாளராக பொறுப்பேற்ற விஜய் சேதுபதி கடந்த 2 வாரங்களாக போட்டியாளர்களை வச்சு செய்து வருகிறார். எதையும் போட்டு இழுக்காமல் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு எனப் பேசி வருகிறார். மேலும் பிக்பாஸ் ரசிகர்களிடையே விஜய் சேதுபதியின் பாணி மிகவும் பிடித்து போகிறது. முக்கியமாக இந்த நிகழ்ச்சியின் சுவரரசியமே வார இறுதியில் நடக்கும் எபிசோட் தான். அதற்கு ஏற்றவாறு விஜய் சேதுபதி வெளுத்து வாங்கி வருகிறார்.
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கியதிலிருந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே சாச்சனா வெளியேற்றப்பட்டார். பின்னர் முதலாவது வாரத்தில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். மேலும் சர்ச்சைக்குள்ளாகிய அன்சிதா மற்றும் அர்னவ் பேசு பொருளாக இருந்து வந்தனர். இந்நிலையில் முந்தைய வார இறுதி எபிசோடில் அர்னவ் எலிமினேட் செய்யப்பட்டார்.