இன்னைக்கு சம்பவம் இருக்கு.. ரவீந்தரை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்.. தீபக் மேல் குற்றம் சொல்லும் ஜாக்குலின்!
நடிகர் சத்யா ஜெஃப்ரியை வந்த நாளிலிருந்து அவர் அவராக இருக்கிறார். என்னை போல அவர் இருப்பதாக தோன்றுகிறது எனவே அவர் உண்மையாக இருக்கிறார் என்ற டேக்கை அவர் நெற்றியில் ஓட்டுகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5ஆம் நாள் தற்போது தொடங்கியுள்ளது. இந்த ஐந்தாம் நாளில் இரண்டாம் ப்ரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பிரமோ-வில் பிக் பாஸ் இந்த பிக் பாஸ் வீட்டில் யார் உண்மையாக இருக்கிறார்கள் யார் நடிக்கிறார்கள் என கேள்வி கேட்கிறார்.
இதற்கு டேக் ஒன்றும் தருகிறார்கள். முதலில் பேசிய நடிகர் சத்யா ஜெஃப்ரியை வந்த நாளிலிருந்து அவர் அவராக இருக்கிறார். என்னை போல அவர் இருப்பதாக தோன்றுகிறது எனவே அவர் உண்மையாக இருக்கிறார் என்ற டேக்கை அவர் நெற்றியில் ஓட்டுகிறார்.
தீபக் நடிக்கிறார் என சொல்லும் ஜாக்குலின்
அவரைத் தொடர்ந்து பேசிய ஆனந்தி சுனிதா உண்மையாக இருப்பதாக அதற்கான டேக்கை அவரது நெற்றியில் ஒட்டுகிறார். பின்னர் வீட்டில் தீபக் மற்ற அனைவருடைய கேமையும் ஆடுகிறாரோ என்று எனக்குத் தோன்றுகிறது எனவே அவர் நடிக்கிறார் என்ற டேக்கை ஜாக்குலின் அவர் நெற்றியில் ஓட்டுகிறார்.