சாலை விபத்தில் சிக்கிய பிக் பாஸ் பிரபலம் - குடிபோதையில் நடந்த சம்பவம்! பின்னணி என்ன?
சாலை விபத்தில் சிக்கியுள்ளார் பிக் பாஸ் தெலுங்கு பிரபலமான சுபாஸ்ரீ ராயகுரு. குடிபோதையில் இருந்தவர்கள் ஏற்படுத்திய விபத்தில் காயாமின்றி அவர் தப்பியுள்ளார்.

பிக் பாஸ் தெலுங்கு சீசன் 7இல் பங்கேற்றவர் நடிகை சுபாஸ்ரீ ராயகுரு. இவர் ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனா சாகர் பகுதியில் சாலை விபத்தில் சிக்கினார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
குடிபோதையில் விபத்து
இதுதொடர்பாக பிரபல ஆன்லைன் சினிமா ஊடகமான இந்தியாகிளட்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, குடிபோதையில் பைக்கில் வந்தவர்கள் தங்களது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து சுபாஸ்ரீயின் கார் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படாத நிலையில், கார் மற்றும் இருசக்கர வாகனம் இரண்டும் பலத்த சேதமடைந்துள்ளன.
சிறு காயங்களுடன் எஸ்கேப்
விபத்தின் போது சேதமடைந்த கார் சுபாஸ்ரீக்கு சொந்தமானது அல்ல, ஆனால் அவர் பணிபுரியும் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்த சாலை விபத்தில் நடிகை காயமின்றி தப்பினார், அதே நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்திருந்ததால் பெரிய அளவில் காயம் ஏற்படாமல் சிறு காயங்கள் தப்பித்தனர்.