நெருப்புடா நெருங்குடா பாப்போம்.. மாஸ் என்ட்ரி கொடுத்த சாச்சனா.. வந்த உடனே ஆட்டம் ஆரம்பம்.. ஆடிப்போன போட்டியாளர்கள்!
Bigg Boss Tamil 8 : பிக்பாஸ் சீசன் 8 ஐந்தாம் நாளின் முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இந்த ப்ரோமோவில் சாச்சனா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார். எல்லோரும் சாச்சனாவை பார்த்த உடன் ஷாக் ஆகி விட்டார்கள்.

விஜய் டிவியின் பிரதான நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 நான்கு தினங்களுக்கு முன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த முறை “ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” என நடிகர் விஜய் சேதுபதி தொகுத்த வழங்குகிறார். மூன்று தினங்களுக்கு முன் இந்த சீசன் கோலாகலமாக தொடங்கியது. இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் 24 மணி நேரத்தில் சாச்சனா முதல் போட்டியாளராக எலிமினேட் செய்யப்பட்டார்.
ஐந்தாம் நாள் முதல் ப்ரோமோ
பிக் பாஸ் சீசன் 8 ஐந்தாம் நாள் முதல் ப்ரோமோ வெளியாக இருக்கிறது. இந்த ப்ரோமோவில் நெருப்புடா நெருங்குடா என இசை வாசிக்க மறைமுகமாக யாருக்கும் தெரியாமக் சாச்சனா என்டரி கொடுக்கிறார். அவர் யாருக்கும் தெரியாமல் பெட் ரூமுக்குள் சென்று கேஷுவலாக அமர்ந்திருக்கிறார்.
அவரை முதலில் விஷால் பார்த்து ஷாக் ஆகிறார். ஏய் இங்க பாரு என விஷால் சொல்ல அனைவரும் வந்து பார்த்து சாச்சனாவை கட்டி அணைத்து வரவேற்கிறார்கள்.